Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நூறு வீரர்களுக்கு அதிகாரி

நூறு வீரர்களுக்கு அதிகாரி

இவர் பழங்கால ரோமப் படையில் இருந்த ஒரு உயர் அதிகாரி. பொதுவாக, ரோமப் படைப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 6,000 வீரர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிரிவும், சுமார் 100 வீரர்களைக் கொண்ட 60 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அதிகாரி இருந்தார்.

அந்த அதிகாரிகள் படைப் பிரிவுகளுக்குத் தூண்களாக இருந்தார்கள். சாதாரண வீரர்களைவிட அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட ‘படை அதிகாரிகளில்’ சிலர் நல்ல குணங்களைக் காட்டியதாக வசனங்கள் சொல்கின்றன. அவர்களில் ஒருவர் உறுதியான விசுவாசம் காட்டியதற்காகப் பாராட்டப்பட்டார். (மத் 8:5-10, 13) இன்னொருவரின் பெயர் கொர்நேலியு. விருத்தசேதனம் செய்யப்படாதவர்களில், அதாவது யூதர்கள் அல்லாத மற்ற தேசத்தாரில், அவரும் அவருடைய குடும்பத்தாரும்தான் முதன்முதலில் கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள்.—மாற் 15:39; அப் 10:1, 44, 45; 27:1, 43.