பழங்கால மத்தியக் கிழக்கு நாடுகள்
இது, தென்மேற்கு ஆசியப் பகுதியைக் குறிக்கும் புவியியல் மற்றும் சரித்திரப் பெயர்.
இந்தப் பகுதிக்குத் திட்டவட்டமான எல்லைகள் கிடையாது. ஆனால், மேற்கிலுள்ள துர்க்கியே பகுதியிலிருந்து கிழக்கிலுள்ள ஈரான்வரை (சிலருடைய கருத்துப்படி, நவீன நாளைய பாகிஸ்தானில் உள்ள சிந்து நதிவரை) பரந்துவிரிந்திருக்கும் பகுதியையும், வடக்கே உள்ள காகஸஸ் பகுதியிலிருந்து தெற்கே உள்ள அரேபிய தீபகற்பம்வரை இருக்கிற பகுதியையும், பெரும்பாலும் எகிப்தை உள்ளடக்கிய பகுதியையும் அது குறிக்கிறது. சிலர் இதை மத்தியக் கிழக்குப் பகுதி என்று அழைக்கிறார்கள். மற்றவர்கள் இதை மேற்கு ஆசியா என்று அழைக்கிறார்கள். இந்தப் பகுதி ஐரோப்பாவுக்குப் பக்கத்தில் இருப்பதால் “அண்மை கிழக்கு” என்றும் அழைக்கப்படுகிறது.