பாவப் பரிகார நாள்
இஸ்ரவேலர்களின் மிக முக்கியமான பரிசுத்த நாள். இது யொம் கிப்புர் என்றும் அழைக்கப்படுகிறது. (யொம் ஹக்கிப்புரிம் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. இதற்கு “மூடுவதற்கான நாள்” என்று அர்த்தம்) ஏத்தானீம் மாதம் 10-ஆம் நாள் இது அனுசரிக்கப்பட்டது. வருஷத்தின் இந்த ஒரு நாளில் மட்டும்தான், வழிபாட்டுக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த அறைக்குள் தலைமைக் குரு போவார். தன்னுடைய பாவத்துக்காகவும், மற்ற லேவியர்களுடைய பாவத்துக்காகவும், மக்களுடைய பாவங்களுக்காகவும் கொடுக்கப்பட்ட பலிகளின் இரத்தத்தை அங்கே செலுத்துவார். அன்று மக்கள் எல்லாரும் புனித மாநாட்டுக்காகக் கூடிவந்து விரதம் இருப்பார்கள். அது ஓய்வு நாளாகவும் இருந்ததால் மக்கள் அன்றாட வேலைகளைச் செய்யாமல் இருப்பார்கள்.—லேவி 23:27, 28.