பேய்கள்
நம் கண்களால் பார்க்க முடியாத, அபார பலம் படைத்த கெட்ட தூதர்கள். ஆதியாகமம் 6:2-ன் அடிக்குறிப்பில் “கடவுளின் மகன்கள்” என்றும், யூதா 6-ல் “தேவதூதர்கள்” என்றும் இந்தப் பேய்கள் அழைக்கப்படுகின்றன. இவை கெட்டவையாகப் படைக்கப்படவில்லை. நோவாவின் நாட்களில், இவை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய் அவருக்கு எதிரிகளாயின, யெகோவாவுக்கு விரோதமாக சாத்தான் செய்த கலகத்தில் அவனோடு கூட்டுச்சேர்ந்துகொண்டன.—உபா 32:17; லூ 8:30; அப் 16:16; யாக் 2:19.