Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழி

பைபிளில் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழி

இது, எபிரெய வேதாகமத்தின் (அதாவது, பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிற பகுதியின்) 39 புத்தகங்களும் எழுதுவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட எபிரெய மொழி.

ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ரவேலர்கள் எபிரெய மொழியில் பேசினார்கள். அரமேயிக் மொழி, அக்காடியன் மொழி, அரபிய மற்றும் எத்தியோப்பிய கிளைமொழிகள் ஆகியவற்றைப் போலவே எபிரெய மொழியும் ஒரு செமிட்டிக் மொழி. எபிரெய வேதாகமம் எழுதப்பட்ட ஆயிர வருஷ காலப்பகுதியில் (கி.மு. 1513 முதல் சுமார் கி.மு. 443 வரை) எபிரெய மொழி ஓரளவு மாறாமல் இருந்தது. யூதர்கள் பாபிலோனுக்குப் பிடித்துச் செல்லப்பட்ட பிறகு எபிரெய எழுத்துக்களின் வடிவம் மாறியது. அதுமுதல் சதுரவடிவ எழுத்துக்கள் பிரபலமாயின. இருந்தாலும், கொஞ்சக் காலத்துக்குப் பழங்கால எழுத்துக்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.