Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

லேவி; லேவியர்கள்

லேவி; லேவியர்கள்

யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மூன்றாவது மகன்; இவருடைய பெயர் ஒரு கோத்திரத்துக்கும் கொடுக்கப்பட்டது. லேவி கோத்திரத்தாருடைய குருத்துவத்தின் மூன்று முக்கியப் பிரிவுகள் இவருடைய மூன்று மகன்களின் மூலமாகத்தான் வந்தன. சில சமயம் “லேவியர்கள்” என்ற வார்த்தை, அந்தக் கோத்திரத்தார் எல்லாரையுமே குறிக்கிறது. ஆனால் பொதுவாக, குருமார்களான ஆரோனின் வம்சத்தார் இதில் சேர்க்கப்படுவதில்லை. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில், லேவி கோத்திரத்தாருக்குப் பங்கு கொடுக்கப்படவில்லை. ஆனால், மற்ற கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பங்கிலிருந்து மொத்தம் 48 நகரங்கள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.—உபா 10:8; 1நா 6:1; எபி 7:11.