விசுவாசதுரோகம்
இதற்கான கிரேக்க வார்த்தை (அப்போஸ்டேசியா) “தள்ளிப் போய் நிற்பது” என்ற அர்த்தத்தைத் தருகிற வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதற்கான பெயர்ச்சொல்லுக்கு “கைவிடுதல்,” “விட்டுவிடுதல்,” “கலகம் செய்தல்” என்ற அர்த்தங்களும் இருக்கின்றன. உண்மை வணக்கத்திலிருந்து விலகிப்போவதைக் குறிப்பதற்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.—நீதி 11:9, அப் 21:21 ஆகியவற்றின் அடிக்குறிப்புகள்; 2தெ 2:3.