விடுதலை வருஷம்
வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் போன பின்பு வந்த ஒவ்வொரு 50-வது வருஷமும் விடுதலை வருஷம் என்று அழைக்கப்பட்டது. இந்த வருஷத்தில் நிலத்தைப் பயிர் செய்யாமல் அப்படியே விட்டுவிட வேண்டியிருந்தது, எபிரெய அடிமைகளை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. விற்கப்பட்ட பரம்பரை நிலங்கள் அவற்றின் சொந்தக்காரர்களுக்குத் திரும்பவும் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வருஷம் முழுவதும் பண்டிகை வருஷமாக, சுதந்திர வருஷமாக இருந்தது என்று சொல்லலாம். இஸ்ரவேல் தேசத்தைக் கடவுள் முதன்முதலில் உருவாக்கியபோது இஸ்ரவேலர்கள் அனுபவித்த நல்ல நிலையை விடுதலை வருஷத்தில் மறுபடியும் அனுபவித்தார்கள்.—லேவி 25:10.