Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருள்கள்

கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருள்கள்

கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருள்கள்

1. முன்னோரை வழிபடுதல்

  அ. முன்னோர் வழிபாடு பிரயோஜனமற்றது

முன்னோர் இறந்த, உணர்வில்லா நிலையில் இருக்கின்றனர். பிர 9:5, 10

நம்முடைய ஆதிபெற்றோர் வழிபட தகுதியற்றவர்கள். ரோ 5:12, 14; 1தீ 2:14

கடவுள் இவ்வழிபாட்டிற்கு தடைவிதித்துள்ளார். யாத் 34:14; மத் 4:10

 ஆ. மனிதருக்கு மரியாதை செலுத்தலாம், ஆனால் கடவுளையே வணங்க வேண்டும்

இளையோர் முதியோரை மதிக்கவேண்டும். 1தீ 5:1, 2, 17; எபே 6:1-3

கடவுள் ஒருவரையே வழிபட வேண்டும். அப் 10:25, 26; வெளி 22:8, 9

2. அர்மகெதோன்

  அ. பொல்லாங்கை முடிவுகட்டும் கடவுளுடைய போர்

அர்மகெதோன் போருக்காக தேசங்கள் ஒன்று கூட்டப்படுகின்றன. வெளி 16:14, 16

கடவுள், குமாரனையும் தேவதூதர்களையும் கொண்டு போரிடுகிறார். 2தெ 1:6-9; வெளி 19:11-16

நாம் எவ்வாறு அதிலிருந்து தப்பலாம். செப் 2:1, 3; வெளி 7:14

 ஆ. கடவுளின் அன்பு சீர்குலைந்துவிடவில்லை

அளவுக்கதிகமாய் உலகம் ஊழலால் நிறைந்துள்ளது. 2தீ 3:1-5

கடவுள் பொறுமையுள்ளவர், ஆனால் நீதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. 2பே 3:9, 15; லூ 18:7, 8

நீதிமான்கள் செழிப்பதற்கு பொல்லாதோர் ஒழியவேண்டும். நீதி 21:18; வெளி 11:18

3. முழுக்காட்டுதல்

  அ. கிறிஸ்தவனாவதற்கு அவசியம்

இயேசு மாதிரியை வைத்தார். மத் 3:13-15; எபி 10:7

சொந்தம் கைவிடுதல் அல்லது ஒப்புக்கொடுத்தலின் அடையாளம். மத் 16:24; 1பே 3:21

கற்றுக்கொள்ளும் வயதுள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்க முடியும். மத் 28:19, 20; அப் 2:41

நீரில் முழுக்கப்படுவதுதான் சரியான முறை. அப் 8:38, 39; யோவா 3:23

 ஆ. பாவங்களை நீக்கிவிடுவதில்லை

பாவங்களிலிருந்து கழுவப்படுவதற்காக இயேசு முழுக்காட்டுதல் பெறவில்லை. 1பே 2:22; 3:18

இயேசுவின் இரத்தம் பாவங்களை நீக்குகிறது. 1யோ 1:7

4. பைபிள்

  அ. கடவுளின் வார்த்தை தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது

மனிதர், கடவுளின் ஆவியால் எழுதும்படி தூண்டப்பட்டனர். 2பே 1:20, 21

தீர்க்கதரிசனங்கள் அடங்கியுள்ளன. தானி 8:5, 6, 20-22; லூ 21:5, 6, 20-22; ஏசா 45:1-4

முழு பைபிளும் தேவ ஆவியால் எழுதப்பட்டது, பயனுள்ளது. 2தீ 3:16, 17; ரோ 15:4

 ஆ. நம் நாளுக்கு நடைமுறையான வழிகாட்டி

பைபிள் நியமங்களை அசட்டை செய்வது உயிருக்கு ஆபத்தானது. ரோ 1:28-32

மனித ஞானம் அதன் இடத்தை நிரப்பாது. 1கொ 1:21, 25; 1தீ 6:20

பயங்கர சக்திபடைத்த எதிரியிடம் இருந்து தற்காப்பு. எபே 6:11, 12, 17

மனிதனை சரியான வழியில் நடத்துகிறது. சங் 119:105; 2பே 1:19; நீதி 3:5, 6

 இ. எல்லா தேசத்தாருக்கும் இனத்தாருக்கும் எழுதப்பட்டது

கிழக்கத்திய நாடுகளில் பைபிள் எழுதப்பட ஆரம்பித்தது. யாத் 17:14; 24:12, 16; 34:27

கடவுள் கொடுத்த இந்தப் புத்தகம் ஐரோப்பியர்களுக்கு மாத்திரம் அல்ல. ரோ 10:11-13; கலா 3:28

எல்லாரையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். அப் 10:34, 35; ரோ 5:18; வெளி 7:9, 10

5. இரத்தம்

  அ. இரத்தம் ஏற்றிக்கொள்ளுதல் அதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கின்றது

இரத்தம் புனிதமானது, அதுவே உயிர் என நோவாவிடம் சொல்லப்பட்டது. ஆதி 9:4, 16

நியாயப்பிரமாண உடன்படிக்கை இரத்தம் உட்கொள்வதை தடை செய்தது. லேவி 17:14; 7:26, 27

கிறிஸ்தவர்களுக்கும் அதே தடை விதிக்கப்பட்டது. அப் 15:28, 29; 21:25

 ஆ. உயிரை பாதுகாப்பதற்காக கடவுளுடைய சட்டத்தை மீறுவதை நியாயப்படுத்த முடியாது

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே சிறந்தது. 1சா 15:22; மாற் 12:33

கடவுளுடைய சட்டத்தைவிட தன் சொந்த உயிரை முக்கியமாய் கருதுவது அழிவுக்கு ஏதுவானது. மாற் 8:35, 36

6. காலக் கணக்கு

  அ. புறஜாதிகளின் காலங்கள் (பொ.ச. ) 1914-ல் முடிவடைகின்றன

ராஜ்யத்தை தொடர்ந்து அரசாண்டவர்களின் ஆட்சி பொ.ச.மு. 607-ல் நிறுத்தி வைக்கப்பட்டது. எசே 21:25-27

“ஏழு காலங்கள்” கடந்துபோன பின்பே மறுபடியும் ஆட்சி நிலைநாட்டப்படும். தானி 4:32, 16, 17

ஏழு = 2 X 3 1/2 காலங்கள் அல்லது 2 X 1,260 நாட்கள். வெளி 12:6, 14; 11:2, 3

ஒரு நாள் ஒரு ஆண்டுக்கு சமம் [ஆக 2,520 ஆண்டுகள் ]. எசே 4:6; எண் 14:34

ராஜ்யம் நிலைநாட்டப்படும் வரையில் நீடிக்கும். லூ 21:24; தானி 7:13, 14

7. ஆலயம்

  அ. ஆலயம் ஆவிக்குரியது, அது கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டது

மனிதன் கட்டிய ஆலயங்களில் கடவுள் குடியிருப்பதில்லை. அப் 17:24, 25; 7:48

உண்மையான சபை உயிருள்ள கற்களால் ஆன ஆவிக்குரிய ஆலயமாகும். 1பே 2:5, 6

கிறிஸ்துவே மூலைக் கல், அப்போஸ்தலர்களோ அஸ்திவார துணைக்கற்கள். எபே 2:20

ஆவியோடும் உண்மையோடும் கடவுளை வழிபட வேண்டும். யோவா 4:24

 ஆ. ஆலயம் பேதுருவின் மேல் கட்டப்படவில்லை

ஆலயம் பேதுருவின் மேல் கட்டப்படுமென இயேசு சொல்லவில்லை. மத் 16:18, NW

இயேசு, தம்மை “கன்மலை” என அடையாளம் காட்டுகிறார். 1கொ 10:4

இயேசுவே அஸ்திவாரம் என்று பேதுரு தெளிவாக அறிந்திருந்தார். 1பே 2:4, 6-8; அப் 4:8-12

8. படைப்பு

  அ. நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தோடு ஒத்திருக்கிறது, பரிணாமத்தை தவறென நிரூபிக்கிறது

படைப்பின் வரிசையை விஞ்ஞானம் ஆதரிக்கிறது. ஆதி 1:11, 12, 21, 24, 25

கடவுளின் கட்டளையினால் “ஜாதியின்படியே” [“இனங்களின்,” NW] உருவாவது இன்றும் தொடர்கிறது. ஆதி 1:11, 12; யாக் 3:12

 ஆ. படைப்பின் நாட்கள் 24 மணிநேரம் கொண்ட நாட்கள் அல்ல

“நாள்” என்பது சாதாரணமாக ஒரு காலப் பகுதியைக்கூட அர்த்தப்படுத்தலாம். ஆதி 2:4

கடவுளின் பார்வையில் ஒரு நாள் நீண்ட காலப் பகுதியாய் இருக்கலாம். சங் 90:4; 2பே 3:8

9. சிலுவை

  அ. இயேசு தண்டிக்கப்படுவதற்காக வாதனையின் கழுமரத்தில் அறையப்பட்டார்

கம்பத்திலோ, கழுமரத்திலோதான் இயேசு அறையப்பட்டார். அப் 5:30; 10:39; கலா 3:13; NW

கழுமரத்தை நிந்தையாக கிறிஸ்தவர்கள் சகிக்க வேண்டும். மத் 10:38; லூ 9:23; NW

 ஆ. வழிபடுவதற்கு உரியதல்ல

இயேசுவின் கழுமரத்தை காட்சி பொருளாக வைப்பது நிந்தனைக்குரியது. எபி 6:6; மத் 27:41, 42; NW

வழிபாட்டில் சிலுவையைப் பயன்படுத்துவது உருவ வழிபாடாகும். யாத் 20:4, 5; எரே 10:3-5

இயேசு ஓர் ஆவி ஆளாக இருக்கிறார். இன்னமும் கழுமரத்திலேயே இல்லை. 1தீ 3:16; 1பே 3:18

10. மரணம்

  அ. மரணத்திற்கான காரணம்

மனிதனின் தொடக்கம் பரிபூரணமாகவும், என்றென்றும் வாழக்கூடிய வாய்ப்புடனும் இருந்தது. ஆதி 1:28, 31

கீழ்ப்படியாமையால் மரண தண்டனை கிடைத்தது. ஆதி 2:16, 17; 3:17, 19

பாவமும் மரணமும் ஆதாமின் எல்லா வாரிசுகளுக்கும் கடத்தப்பட்டன. ரோ 5:12

 ஆ. இறந்தோரின் நிலை

ஆத்துமாவாகவே ஆதாம் படைக்கப்பட்டான், மாறாக அவனுக்கு ஆத்துமா கொடுக்கப்படவில்லை. ஆதி 2:7; 1கொ 15:45

மனிதனே ஆத்துமா. மனிதனாகிய ஆத்துமாவே சாகும். எசே 18:4; ஏசா 53:12; யோபு 11:20, NW

இறந்தோருக்கு உணர்வில்லை, அவர்கள் ஒன்றும் அறியார்கள். பிர 9:5, 10; சங் 146:3, 4

இறந்தோர் உறக்கத்தில் இருக்கின்றனர், உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கின்றனர். யோவா 11:11-14, 23-26; அப் 7:60

 இ. இறந்தவர்களுடன் பேசுவது முடியாத காரியம்

இறந்தோர் ஆவிகளாக கடவுளோடு வாழவில்லை. சங் 115:17; ஏசா 38:18

இறந்தோருடன் உரையாட முயலுவதற்கு எதிராக எச்சரிக்கப்படுகிறோம். ஏசா 8:19; லேவி 19:31

ஆவியுலக மத்தியஸ்தர்கள், குறி சொல்பவர்கள் கண்டனம் செய்யப்படுகின்றனர். உபா 18:10-12; கலா 5:19-21

11. பிசாசு, பேய்கள்

  அ. பிசாசு ஓர் ஆவி ஆள்

சாத்தான் நமக்குள்ளிருக்கும் தீய சக்தியல்ல, ஆனால் ஓர் ஆவி ஆள். 2தீ 2:26

தூதர்கள் எப்படியோ அப்படியே பிசாசும் ஓர் ஆவி ஆள். மத் 4:1, 11; யோபு 1:6

தவறான ஆசையின் மூலம் தன்னை பிசாசாக ஆக்கிக்கொண்டான். யாக் 1:13-15

 ஆ. பிசாசு உலகத்தின் கண்ணுக்குத் தெரியாத அதிபதி

ஒரு கடவுளாக உலகத்தை தன் பிடியில் வைத்திருக்கிறான். 2கொ 4:4; 1யோ 5:19; வெளி 12:9

விவாதம் தீர்க்கப்படும் வரையில் விட்டுவைக்கப்பட்டிருக்கிறான். யாத் 9:16; யோவா 12:31

பாதாளத்திற்குள் தள்ளப்பட்டு, பின் அழிக்கப்படுவான். வெளி 20:2, 3, 10

 இ. பேய்கள் கலகம் பண்ணின தூதர்கள்

ஜலப்பிரளயத்திற்கு முன்பு சாத்தானோடு சேர்ந்துகொண்டனர். ஆதி 6:1, 2; 1பே 3:19, 20

தாழ்த்தப்பட்டனர், அனைத்து ஞானத்திலிருந்தும் விலக்கப்பட்டனர். 2பே 2:4; யூ 6

கடவுளுக்கு எதிராய் போராடுகின்றனர், மனிதவர்க்கத்தை ஒடுக்குகின்றனர். லூ 8:27-29; வெளி 16:13, 14

சாத்தானுடன் சேர்த்து அழிக்கப்படுவர். மத் 25:41; லூ 8:31; வெளி 20:2, 3, 10

12. பூமி

  அ. பூமியைக் குறித்து கடவுளுடைய நோக்கம்

பூமியில் பரதீஸ் பரிபூரண மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. ஆதி 1:28; 2:8-15

கடவுளுடைய நோக்கம் உறுதியானது. ஏசா 55:11; 46:10, 11

பூமியானது, சமாதானமுள்ள பரிபூரண மனிதர்களால் நிரப்பப்படும். ஏசா 45:18; சங் 72:7; ஏசா 9:6, 7

ராஜ்யம் பரதீஸை திரும்ப கொண்டுவரும். மத் 6:9, 10; வெளி 21:3-5

 ஆ. ஒருபோதும் அழிக்கப்படாது, வெறுமையாகவும் இருக்காது

சொல்லர்த்தமான பூமி நிலையானது. பிர 1:4; சங் 104:5

நோவாவின் காலத்தில் அழிக்கப்பட்டது மனிதவர்க்கமே ஒழிய பூமியல்ல. 2பே 3:5-7; ஆதி 7:23

இவ்வுதாரணங்கள் நம்முடைய காலப்பகுதியில் உயிர் தப்பி வாழும் நம்பிக்கையை அளிக்கின்றன. மத் 24:37-39

பொல்லாதவர் அழிக்கப்படுவர்; திரள்கூட்டத்தினர் உயிர் தப்பி வாழ்வர். 2தெ 1:6-9; வெளி 7:9, 14

13. போலி தீர்க்கதரிசிகள்

  அ. போலி தீர்க்கதரிசிகள் இருப்பார்களென முன்னுரைக்கப்பட்டது; அப்போஸ்தலர்களின் நாட்களில் இருந்தனர்

போலி தீர்க்கதரிசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சட்டம். உபா 18:20-22; லூ 6:26

முன்னுரைக்கப்பட்டார்கள்; செயல்களால் அடையாளம் கண்டுகொள்ளலாம். மத் 24:23-26; 7:15-23

14. சுகப்படுத்துதல், அந்நிய பாஷைகள்

  அ. ஆவிக்குரிய சுகப்படுத்துதல் நிரந்தர பயனுள்ளது

ஆவிக்குரிய நோய் அழிவுக்கேதுவானது. ஏசா 1:4-6; 6:10; ஓசி 4:6

ஆவிக்குரிய சுகப்படுத்துதலே முக்கியமாய் கொடுக்கப்பட்ட வேலை. யோவா 6:63; லூ 4:18

பாவத்தை நீக்குகிறது; மகிழ்ச்சியையும் ஜீவனையும் கொடுக்கிறது. யாக் 5:19, 20; வெளி 7:14-17

 ஆ. கடவுளுடைய ராஜ்யம் நிரந்தர சரீர சுகப்படுத்துதலை கொண்டுவரும்

இயேசு நோய்களை சுகப்படுத்தினார், ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பற்றி பிரசங்கித்தார். மத் 4:23

நிரந்தர சுகத்தை அளிப்பதற்காக ராஜ்யம் வாக்களிக்கப்பட்டது. மத் 6:10; ஏசா 9:7

மரணமும் ஒழிக்கப்படும். 1கொ 15:25, 26; வெளி 21:4; 20:14

 இ. இப்போது நடைபெறுகிற விசுவாச சுகப்படுத்துதலுக்கு கடவுளின் அங்கீகாரத்திற்கான சான்று இல்லை

அப்போஸ்தலர்கள் அற்புதம் நடப்பித்து தங்களைத் தாங்களே சுகப்படுத்திக் கொள்ளவில்லை. 2கொ 12:7-9; 1தீ 5:23

அப்போஸ்தலரின் நாட்களுக்குப் பின்னர் அற்புதமான வரங்கள் ஒழிந்துபோயின. 1கொ 13:8-11

சுகப்படுத்துதலுக்கு கடவுளின் அங்கீகாரம் உண்டென்பதற்கு உறுதியான சான்று இல்லை. மத் 7:22, 23; 2தெ 2:9-11

 ஈ. அந்நிய பாஷைகளில் பேசுவது குறுகிய கால ஏற்பாடே

அடையாளமாயிருந்தது; அதைவிட பெரிய ஆசீர்வாதங்களையே நாடவேண்டும். 1கொ 14:22; 12:30, 31

ஆவியின் அற்புத வரங்கள் ஒழியுமென முன்னுரைக்கப்பட்டது. 1கொ 13:8-10

அற்புதமான செயல்கள் கடவுளின் தயவுக்கு சான்றல்ல. மத் 7:22, 23; 24:24

15. பரலோகம்

  அ. 1,44,000 பேர் மாத்திரமே பரலோகத்திற்கு செல்வார்கள்

தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கை; கிறிஸ்துவுடன் ராஜாக்களாய் இருப்பதற்காகவே. வெளி 5:9, 10; 20:4

இயேசு முன்னோடி; அதன்பின் மற்றவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். கொலோ 1:18; 1பே 2:21

மற்ற அநேகர் பூமியில் வாழ்வர். சங் 72:8; வெளி 21:3, 4

1,44,000 பேர் வேறொருவருக்கும் இல்லாத விசேஷ ஸ்தானத்திலிருக்கின்றனர். வெளி 14:1, 3; 7:4, 9

16. நரகம் (ஹேடீஸ், ஷியோல்)

  அ. நெருப்பில் வதைப்பதற்குரிய சொல்லர்த்தமான இடமல்ல

துன்பப்பட்ட யோபு அங்கு செல்வதற்காக ஜெபம் செய்தார். யோபு 14:13

எவ்வித செயலுமற்ற இடம். சங் 6:5; பிர 9:10; ஏசா 38:18, 19

இயேசு கல்லறையிலிருந்து, அதாவது நரகத்திலிருந்து எழுப்பப்பட்டார். அப் 2:27, 31, 32; சங் 16:10

இறந்த அநேகரை நரகம் விடுவிக்கும், அதன்பின் அது அழிக்கப்படும். வெளி 20:13, 14

 ஆ. நெருப்பு நிரந்தர அழிவிற்கான அடையாளம்

மரணத்தால் துண்டிக்கப்படுவதற்கு நெருப்பு ஓர் அடையாளம். மத் 25:41, 46; 13:30

மனம் திரும்பாத பொல்லாதோர் நெருப்பினால் அழிக்கப்படுவதைப்போல நிரந்தர அழிவை அடைவர். எபி 10:26, 27

சாத்தான் நெருப்பினால் “வாதிக்கப்படுவது” என்பது நித்திய மரணமாகும். வெளி 20:10, 14, 15

 இ. ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றிய பைபிளின் உவமை நித்திய வாதைக்கான சான்றல்ல

ஆபிரகாமின் மடியும் நெருப்பும் சொல்லர்த்தமானதல்ல. லூ 16:22-24

ஆபிரகாமின் தயவுக்கு எதிராக இருளும் குறிப்பிடப்படுகிறது. மத் 8:11, 12

பாபிலோன் முற்றிலுமாய் அழிக்கப்படுதல் நெருப்பில் வாதிப்பதாய் சொல்லப்பட்டிருக்கிறது. வெளி 18:8-10, 21

17. விடுமுறை நாட்கள், பிறந்த நாட்கள்

  ஈ. பிறந்த நாட்கள், கிறிஸ்மஸ் போன்றவை பூர்வ கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படவில்லை

அவற்றை பொய் வணக்கத்தார் கொண்டாடினர். ஆதி 40:20; மத் 14:6

இயேசுவின் மரணநாள் நினைவுகூரப்பட வேண்டும். லூ 22:19, 20; 1கொ 11:25, 26

பண்டிகை களியாட்டங்கள் தவறானவையே. ரோ 13:13; கலா 5:21; 1பே 4:3

18. சிலைகள்

  அ. வழிபாட்டில் உருவங்களை, சிலைகளை பயன்படுத்துவது கடவுளை நிந்திப்பதாகிறது

கடவுளுக்கு எவ்வித உருவச்சிலைகளையும் உண்டாக்கமுடியாது. 1யோ 4:12; ஏசா 40:18; 46:5; அப் 17:29

உருவ வழிபாட்டிற்கு எதிராக கிறிஸ்தவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். 1கொ 10:14; 1யோ 5:21

கடவுளை ஆவியோடும் உண்மையோடும் வழிபடவேண்டும். யோவா 4:24

 ஆ. உருவ வழிபாடு இஸ்ரவேலருக்கு அழிவை கொண்டுவந்தது

உருவ வழிபாட்டிற்கு எதிராக யூதர்கள் தடைவிதிக்கப்பட்டிருந்தனர். யாத் 20:4, 5

அவற்றால் கேட்கவோ பேசவோ முடியாது; அவற்றை செய்பவர்களும் அவற்றைப்போல் ஆகிவிடுகிறார்கள். சங் 115:4-8

கண்ணியாகியது; அழிவை வருவித்தது. சங் 106:36, 40-42; எரே 22:8, 9

 இ. “சம்பந்தப்பட்ட” வழிபாடு அங்கீகரிக்கப்பட்டதல்ல

கடவுள் சம்பந்தப்பட்ட முறையில் தம்மை வழிபடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏசா 42:8

கடவுள் மாத்திரமே ஜெபங்களை கேட்கிறவர். சங். 65:1, 2

19. கலப்புமத விசுவாசம்

  அ. மற்ற மதங்களுடன் சேருவது கடவுளின் வழியல்ல

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, சிலரே அதனைக் கண்டுபிடிப்பர். எபே 4:4-6; மத் 7:13, 14

பொய் கோட்பாடு தூய்மையைக் கெடுக்கும் என எச்சரிக்கிறது. மத் 16:6, 12; கலா 5:9

விலகியிருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. 2தீ 3:5; 2கொ 6:14-17; வெளி 18:4

 ஆ. “எல்லா மதங்களிலும் உண்மையுள்ளது” என்பது உண்மையல்ல

சிலருக்கு வைராக்கியம் உண்டு ஆனால் கடவுளுக்கு ஏற்ற வைராக்கியமல்ல. ரோ 10:2, 3

நல்லதாயிருக்கும் எதையும் தீமை கெடுத்துவிடுகிறது. 1கொ 5:6; மத் 7:15-17

பொய்யை போதிப்பவர்கள் அழிவைக் கொண்டுவருகிறார்கள். 2பே 2:1; மத் 12:30; 15:14

தூய வணக்கம் தனிப்பட்ட பக்தியை வற்புறுத்திக் கேட்கிறது. உபா 6:5, 14, 15

20. யெகோவா, கடவுள்

  அ. கடவுளின் பெயர்

கடவுள் என்பது காரணப்பெயர்; நம்முடைய கர்த்தருக்கோ தனிப்பெயர் உள்ளது. 1கொ 8:5, 6

அவருடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டுமென ஜெபிக்கிறோம். மத் 6:9, 10

யெகோவா என்பது கடவுளின் பெயர். சங் 83:18; யாத் 6:2, 3; 3:15, NW; ஏசா 42:8, NW

தமிழ் யூனியன் பைபிளில் அந்தப் பெயர் யாத் 6:2, 3 (கத்தோலிக்க பைபிளில் அடிக்குறிப்பு) சங் 83:17; ஏசா 12:2; 26:4

கடவுளின் பெயரை இயேசு வெளிப்படுத்தினார். யோவா 17:6, 26; 5:43; 12:12, 13, 28

 ஆ. கடவுள் இருக்கிறார்

கடவுளை கண்டு உயிரோடிருக்க முடியாது. யாத் 33:20; யோவா 1:18; 1யோ 4:12

கடவுளை நம்புவதற்கு அவரை பார்த்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை. எபி 11:1; ரோ 8:24, 25; 10:17

காணக்கூடிய தம்முடைய படைப்புகளால் கடவுள் அறியப்படுகிறார். ரோ 1:20; சங் 19:1, 2

தீர்க்கதரிசன நிறைவேற்றம் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஏசா 46:8-11

 இ. கடவுளின் குணங்கள்

கடவுள் அன்பானவர். 1யோ 4:8, 16; யாத் 34:6; 2கொ 13:11; மீ 7:18

மகா ஞானமுள்ளவர். யோபு 12:13; ரோ 11:33; 1கொ 2:7

நியாயாதிபதி, நீதியை நடப்பிக்கிறவர். உபா 32:4; சங் 37:28

சர்வ வல்லவர், சர்வ சக்தியும் படைத்தவர். யோபு 37:23; வெளி 7:12; 4:11

 ஈ. எல்லாரும் இந்தக் கடவுளை சேவித்துக் கொண்டில்லை

நல்லதுபோல தோன்றும் வழிகளெல்லாம் சரியான வழியல்ல. நீதி 16:25; மத் 7:21

இரண்டு வழிகள் உள்ளன; ஒன்று மாத்திரமே வாழ்விற்கு வழிநடத்துகிறது. மத் 7:13, 14; உபா 30:19

பல கடவுட்கள் இருந்தாலும் ஒருவர் மட்டுமே உண்மையான கடவுள். 1கொ 8:5, 6; சங் 82:1

உண்மையான கடவுளைப் பற்றி அறிவதுதான் வாழ்க்கையில் இன்றியமையாதது. யோவா 17:3; 1யோ 5:20

21. யெகோவாவின் சாட்சிகள்

  அ. யெகோவாவின் சாட்சிகளுடைய ஆரம்பம்

யெகோவா தம்முடைய சொந்த சாட்சிகளை அடையாளம் கண்டுகொள்கிறார். ஏசா 43:10-12; எரே 15:16

உண்மையுள்ள சாட்சிகளின் வரிசை ஆபேலிலிருந்து ஆரம்பித்தது. எபி 11:4, 39; 12:1

இயேசு உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியாயிருந்தார். யோவா 18:37; வெளி 1:5; 3:14

22. இயேசு

  அ. இயேசு கடவுளின் குமாரன், நியமிக்கப்பட்ட அரசர்

கடவுளின் முதற்பேறானவர், சர்வத்தையும் உண்டாக்கினார். வெளி 3:14; கொலோ 1:15-17

தேவதூதர்களிலும் சிறியவராக, பெண்ணிடத்தில் பிறந்த நபரானார். கலா 4:5; எபி 2:9

பரலோகத்துக்கு மீண்டும் செல்வதற்கேதுவாக கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்பட்டார். மத் 3:16, 17

மனிதனாக வருவதற்கு முன்பிருந்த வாழ்க்கையைக் காட்டிலும் இப்போது இன்னமும் உயர்த்தப்பட்டார். பிலி 2:9, 10

 ஆ. இயேசு கிறிஸ்துவை நம்புவது இரட்சிப்புக்கு இன்றியமையாதது

கிறிஸ்து ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து. ஆதி 22:18; கலா 3:16

கிறிஸ்து ஒருவரே பிரதான ஆசாரியர், மீட்கும்பொருள். 1யோ 2:1, 2; எபி 7:25, 26; மத் 20:28

கடவுளையும் கிறிஸ்துவையும் அறிந்து, கீழ்ப்படிவதன் மூலமே ஜீவன். யோவா 17:3; அப் 4:12

 இ. கிறிஸ்துவை வெறுமனே விசுவாசிப்பதைக் காட்டிலும் அதிகம் தேவை

விசுவாசத்துடன் செயல்களும் இணைந்திருக்க வேண்டும். யாக் 2:17-26; 1:22-25

கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும், அவர் செய்த வேலையைச் செய்யவேண்டும். யோவா 14:12, 15; 1யோ 2:3

அவருடைய பெயரை வெறுமனே கூப்பிடுகிற அனைவருக்கும் ராஜ்யத்தில் இடமில்லை. மத் 7:21-23

23. ராஜ்யம்

  அ. கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு என்ன செய்யும்

கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றும். மத் 6:9, 10; சங் 45:6; வெளி 4:11

ராஜாவையும் சட்டதிட்டங்களையும் கொண்ட ஓர் அரசாங்கம். ஏசா 9:6, 7; 2:3; சங் 72:1, 8

துன்மார்க்கத்தை அழிக்கும், முழு பூமியையும் ஆளும். தானி 2:44; சங் 72:8

1,000 வருட ஆட்சி மனிதனை பரிபூரண நிலைக்குக் கொண்டுவரும், பரதீஸை ஸ்தாபிக்கும். வெளி 21:2-4; 20:6

 ஆ. கிறிஸ்துவின் எதிரிகள் செயல்படுகையிலேயே நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்

கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. சங் 110:1; எபி 10:12, 13

ராஜ அதிகாரத்தை ஏற்றார்; சாத்தானோடு போர் செய்தார். சங் 110:2; வெளி 12:7-9; லூ 10:18

அப்போது ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூமியில் வேதனைகள். வெளி 12:10, 12

இப்போது இருக்கும் துன்பங்கள் ராஜ்யத்தை ஆதரிப்பதற்கான காலத்தைக் குறிக்கும். வெளி 11:15-18

 இ. “இருதயங்களில்” இல்லை, மனிதரின் முயற்சிகளினால் உருவாக்கப்பட்டதல்ல

ராஜ்யம் பூமியில் அல்ல பரலோகத்தில் இருக்கிறது. 2தீ 4:18; 1கொ 15:50; சங் 11:4

“இருதயங்களில்” இல்லை; இயேசு பரிசேயர்களிடம் பேசினார். லூ 17:20, 21

இவ்வுலகத்தின் பாகம் அல்ல. யோவா 18:36; லூ 4:5-8; தானி 2:44

ஆட்சி முறைகள், உலக தராதரங்கள் ஆகியவற்றை மாற்றீடு செய்யும். தானி 2:44

24. கடைசி நாட்கள்

  அ. உலகத்தின் முடிவு என்பதன் அர்த்தமென்ன

இந்த காரிய ஒழுங்குமுறை முடிவடையும். மத் 24:3, NW; 2பே 3:5-7; மாற் 13:4

பூமியின் முடிவல்ல, துன்மார்க்க ஒழுங்குமுறையின் முடிவு. 1யோ 2:17

அழிவுக்கு முன் முடிவு காலம் வரும். மத் 24:14

நீதிமான்கள் தப்பி உயிர் வாழ்வர்; புதிய ஒழுங்குமுறை அதைத் தொடரும். 2பே 2:9; வெளி 7:14-17

 ஆ. கடைசி நாட்களின் அடையாளங்களைக் குறித்து விழிப்புடன் இருத்தல்

நம்மை வழிநடத்துவதற்காக கடவுள் அடையாளங்களை அளித்திருக்கிறார். 2தீ 3:1-5; 1தெ 5:1-4

உலகம் ஆபத்தை உணருவதில்லை. 2பே 3:3, 4, 7; மத் 24:39

கடவுள் தாமதிப்பதில்லை, எச்சரிக்கிறார். 2பே 3:9

விழிப்பாய் இருப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார், நம் மேல் அக்கறையோடு இருக்கிறார். லூ 21:34-36

25. ஜீவன்

  அ. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது

பொய்யுரையாத தேவன் நித்திய ஜீவனுக்காக வாக்குறுதி அளித்திருக்கிறார். தீத் 1:3; யோவா 10:27, 28

விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவன் நிச்சயம். யோவா 11:25, 26

மரணம் அழிக்கப்படும். 1கொ 15:26; வெளி 21:4; 20:14; ஏசா 25:8

 ஆ. கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தைச் சேர்ந்தவர்களுக்கே பரலோக வாழ்க்கை

கடவுள் தம் விருப்பத்தின்படி அங்கத்தினரை தெரிந்தெடுக்கிறார். மத் 20:23; 1கொ 12:18

பூமியிலிருந்து 1,44,000 பேர் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படுவர். வெளி 14:1, 4; 7:2-4; 5:9, 10

முழுக்காட்டுபவனாகிய யோவானும்கூட பரலோக ராஜ்யத்தில் இருப்பதில்லை. மத் 11:11

 இ. வரையறுக்கப்படாத “மற்ற ஆடுகளுக்கு” பூமிக்குரிய வாழ்க்கை வாக்களிக்கப்பட்டிருக்கிறது

பரலோகத்தில் இயேசுவுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையினரே இருப்பர். வெளி 14:1, 4; 7:2-4

“மற்ற ஆடுகள்” கிறிஸ்துவின் சகோதரர்கள் அல்ல. யோவா 10:16, NW; மத் 25:32, 40

பூமியில் தப்பி உயிர் வாழ அநேகர் இப்போது திரளாக வருகின்றனர். வெளி 7:9, 15-17

பூமியில் வாழ மற்றவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவர். வெளி 20:12; 21:4

26. திருமணம்

  அ. திருமண பந்தம் கனம்பொருந்தினதாக இருக்கவேண்டும்

கிறிஸ்துவுக்கும் மணவாட்டிக்கும் ஒப்பிடப்படுகிறது. எபே 5:22, 23

விவாக மஞ்சத்தை அசுத்தப்படுத்தக்கூடாது. எபி 13:4

பிரியக்கூடாது என்பது திருமண தம்பதிகளுக்கான ஆலோசனை. 1கொ 7:10-16

விவாகரத்திற்கு வேதப்பூர்வ அடிப்படை போர்நியா (வேசித்தனம்) மட்டுமே. மத் 19:9

 ஆ. தலைமைத்துவம் என்ற நியமம் கிறிஸ்தவர்களால் மதிக்கப்படுகிறது

தலைமையேற்று கணவன் குடும்பத்தை நேசித்து பராமரிக்கவேண்டும். எபே 5:23-31

மனைவி தலைமையை மதித்து கணவனை நேசித்து கீழ்ப்படிகிறாள். 1பே 3:1-7; எபே 5:22

பிள்ளைகள் கீழ்ப்படிய வேண்டும். எபே 6:1-3; கொலோ 3:20

 இ. பிள்ளைகளிடமாக கிறிஸ்தவ பெற்றோரின் கடமை

நேரத்தையும் கவனிப்பையும் கொடுத்து அன்பு காட்டவேண்டும். தீத் 2:4

அவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடாது. கொலோ 3:21

ஆவிக்குரிய காரியங்கள் உட்பட அனைத்தையும் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். 2கொ 12:14; 1தீ 5:8

வாழ்க்கைக்கான பயிற்சியை அளிக்கவேண்டும். எபே 6:4; நீதி 22:6, 15; 23:13, 14

 ஈ. கிறிஸ்தவர்களுக்குள் மாத்திரமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்

கர்த்தருக்குள் மாத்திரமே திருமணம் செய்யவேண்டும். 1கொ 7:39; உபா 7:3, 4; நெ 13:26

 உ. பலமணம் புரிதல் வேத நியமங்களுக்கு எதிரானது

ஆரம்ப நியமத்தின்படி ஒரு மனிதனுக்கு ஒரு மனைவியே. ஆதி 2:18, 22-25

கிறிஸ்தவர்களுக்கு அந்த தராதரத்தையே இயேசு மீண்டும் நிலைநாட்டினார். மத் 19:3-9

ஆதி கிறிஸ்தவர்கள் பலமணம் புரியவில்லை. 1கொ 7:2, 12-16; எபே 5:28-31

27. மரியாள் வழிபாடு

  அ. மரியாள் கிறிஸ்துவின் தாய், ஆனால் “கடவுளின் தாய்” அல்ல

கடவுளுக்கு துவக்கம் இல்லை. சங் 90:2; 1தீ 1:17

பூமியில் தேவனுடைய குமாரன் வாழ்ந்தபோது மரியாள் அவருடைய தாய். லூ 1:35

 ஆ. மரியாள் தொடர்ந்து கன்னியாய் இல்லை

அவர் யோசேப்பை மணந்தார். மத் 1:19, 20, 24, 25

இயேசுவுக்குப்பின் மற்ற பிள்ளைகளை பெற்றெடுத்தார். மத் 13:55, 56; லூ 8:19-21

அவர்கள் அப்போது இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்களாக இல்லை. யோவா 7:3, 5

28. நினைவு நாள் ஆசரிப்பு, பூசை

  அ. கர்த்தருடைய இராப்போஜனத்தின் நினைவு நாள் ஆசரிப்பு

பஸ்கா நாள் ஆண்டுக்கு ஒருமுறை ஆசரிக்கப்படுகிறது. லூ 22:1, 17-20; யாத் 12:14

கிறிஸ்துவினுடைய கிரயபலியை நினைவுபடுத்துகிறது. 1கொ 11:26; மத் 26:28

இதில் பரலோக நம்பிக்கை உரியோர் மட்டுமே பங்கெடுப்பர். லூ 22:29, 30; 12:32, 37

தனக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பது ஒருவருக்கு எவ்வாறு தெரியும்? ரோ 8:15-17

 ஆ. பூசை வேதப்பூர்வமானதல்ல

பாவ மன்னிப்புக்கு இரத்தம் சிந்தப்படுதல் அவசியம். எபி 9:22

கிறிஸ்துவே புதிய உடன்படிக்கையின் ஒரே மத்தியஸ்தர். 1தீ 2:5, 6; யோவா 14:6

கிறிஸ்து பரலோகத்திலிருக்கிறார்; அவரை, பாதிரியால் கீழே கொண்டு வரமுடியாது. அப் 3:19, 21

கிறிஸ்துவின் பலி மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட வேண்டியதில்லை. எபி 9:24-26; 10:11-14

29. ஊழியர்

  அ. எல்லா கிறிஸ்தவர்களும் ஊழியர்களே

கிறிஸ்து கடவுளின் ஊழியர். ரோ 15:8, 9; மத் 20:28

அவருடைய முன்மாதிரியை கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டும். 1பே 2:21; 1கொ 11:1

பிரசங்கிப்பதன் மூலம் ஊழியத்தை நிறைவேற்றவேண்டும். 2தீ 4:2, 5; 1கொ 9:16

 ஆ. ஊழியராவதற்கான தகுதிகள்

கடவுளுடைய ஆவியினாலும் அவருடைய வார்த்தையின் பேரிலுள்ள அறிவினாலும். 2தீ 2:15; ஏசா 61:1-3

பிரசங்கிப்பதில் கிறிஸ்துவின் வழியை பின்பற்றவேண்டும். 1பே 2:21; 2தீ 4:2, 5

கடவுள் தம்முடைய ஆவியின் மூலமும் அமைப்பின் மூலமும் பயிற்றுவிக்கிறார். யோவா 14:26; 2கொ 3:1-3

30. எதிர்ப்பு, துன்புறுத்துதல்

  அ. கிறிஸ்தவர்களை எதிர்ப்பதற்கான காரணம்

இயேசு வெறுக்கப்பட்டார், துன்புறுத்துதலை முன்னறிவித்தார். யோவா 15:18-20; மத் 10:22

நேர்மையான நியமங்கள் கடைப்பிடிப்பதை உலகம் குற்றப்படுத்துகிறது. 1பே 4:1, 4, 12, 13

இந்த ஒழுங்குமுறையின் கடவுளாகிய சாத்தான் ராஜ்யத்தை எதிர்க்கிறான். 2கொ 4:4; 1பே 5:8

கிறிஸ்தவர்கள் அஞ்சுவதில்லை, கடவுள் பலப்படுத்துகிறார். ரோ 8:38, 39; யாக் 4:8

 ஆ. கணவன் கடவுளிடமிருந்து தன்னை பிரிக்க மனைவியானவள் அனுமதிக்கக்கூடாது

முன்னெச்சரிக்கை அளிக்கப்படுகிறது; மற்றவர்கள் அவரிடமாக தப்பான அபிப்பிராயத்தை கொடுக்கலாம். மத் 10:34-38; அப் 28:22

அவள் கிறிஸ்துவையும் கடவுளையும் சார்ந்திருக்க வேண்டும். யோவா 6:68; 17:3

உண்மையாக இருப்பதன் மூலம் தன் கணவனையும் ஒருவேளை ஆதாயப்படுத்த முடியும். 1கொ 7:16; 1பே 3:1-6

குடும்பத்தின் தலைவர் கணவனே, ஆனால் வழிபாடு சம்பந்தமாக கட்டளையிட அதிகாரமில்லை. 1கொ 11:3; அப் 5:29

 இ. தான் கடவுளை சேவிப்பதை மனைவி தடைசெய்யும்படி கணவன் அனுமதிக்கக்கூடாது

மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கவேண்டும், அவர்களும் ஜீவனை பெறவேண்டுமென்கிற ஆவல் வேண்டும். 1கொ 7:16

ஆதரிக்கவும் தீர்மானிக்கவும் கடமைப்பட்டிருக்கிறான். 1கொ 11:3; 1தீ 5:8

சத்தியத்தில் உறுதியாக நிலைத்துநிற்கும் மனிதனிடமாக கடவுள் அன்புகூருகிறார். யாக் 1:12; 5:10, 11

சமாதானத்திற்காக விட்டுக்கொடுத்தால் கடவுளின் தயவு இருக்காது. எபி 10:38

புதிய ஒழுங்கில் சந்தோஷமாய் வாழ குடும்பத்தை வழிநடத்தவேண்டும். வெளி 21:3, 4

31. ஜெபம்

  அ. கடவுள் கேட்கும் ஜெபங்கள்

மனிதரின் ஜெபங்களை கடவுள் கேட்கிறார். சங் 145:18; 1பே 3:12

போக்கை மாற்றிக்கொண்டாலொழிய அநீதியானவர்களின் ஜெபம் கேட்கப்படாது. ஏசா 1:15-17

இயேசுவின் பெயரால் ஜெபிக்கவேண்டும். யோவா 14:13, 14; 2கொ 1:20

கடவுளுடைய சித்தத்திற்கு ஏற்ப ஜெபிக்கவேண்டும். 1யோ 5:14, 15

விசுவாசம் இன்றியமையாதது. யாக் 1:6-8

 ஆ. வீணாய் சொன்னதையே சொல்லுதலும் மரியாள் அல்லது புனிதர்களிடம் ஜெபிப்பதும் கேட்கப்படுவது இல்லை

இயேசுவின் பெயரால் கடவுளிடம் ஜெபிக்கவேண்டும். யோவா 14:6, 14; 16:23, 24

திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகள் கேட்கப்படாது. மத் 6:7

32. முன்தீர்மானித்தல்

  அ. மனிதனுடைய முடிவு முன்பே தீர்மானிக்கப்படுவதில்லை

கடவுளுடைய நோக்கம் நிறைவேறும். ஏசா 55:11; ஆதி 1:28

கடவுளை சேவிக்க தனி நபருக்கு தெரிவு சுயாதீனம் உண்டு. யோவா 3:16; பிலி 2:12

33. மீட்கும் பொருள்

  அ. இயேசுவின் மனித உயிரே “எல்லாரையும் மீட்கும் பொருளாக” கொடுக்கப்பட்டது

அநேகரை மீட்கும் பொருளாக இயேசு தமது உயிரைக் கொடுத்தார். மத் 20:28

சிந்தப்பட்ட இரத்தத்தின் மதிப்பு பாவ மன்னிப்பை அளிக்கிறது. எபி 9:14, 22

எல்லா காலத்துக்கும் ஒரே ஒரு பலி போதுமானது. ரோ 6:10; எபி 9:26

அதனுடைய பயன்கள் தானாகவே கிடைக்காது; முயற்சி தேவை. யோவா 3:16

 ஆ. அதுவே சரிசமமான மீட்பு கிரயம்

ஆதாம் பரிபூரணமாக படைக்கப்பட்டான். உபா 32:4; பிர 7:29; ஆதி 1:31

பாவத்தின்மூலம் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பரிபூரண தன்மையை இழந்தான். ரோ 5:12, 18

பிள்ளைகள் உதவியற்ற நிலையில் இருந்தனர்; ஆதாமுக்கு ஈடான ஒன்று தேவைப்பட்டது. சங் 49:7; உபா 19:21

இயேசுவின் பரிபூரண மனித உயிரே மீட்கும் பொருள். 1தீ 2:5, 6; 1பே 1:18, 19

34. மதம்

  அ. ஒரே ஒரு மதமே உண்மையானது

ஒரே நம்பிக்கை, ஒரே விசுவாசம், ஒரே முழுக்காட்டுதல். எபே 4:5, 11

சீஷர்களை உண்டாக்கும்படி கட்டளையிடப்பட்டது. மத் 28:19; அப் 8:12; 14:21

செயல்கள் மூலம் அடையாளம் கண்டுகொள்ளப்படும். மத் 7:19, 20; லூ 6:43, 44; யோவா 15:8

அங்கத்தினரிடையே அன்பும் ஒற்றுமையும் இருக்கும். யோவா 13:35; 1கொ 1:10; 1யோ 4:20

 ஆ. பொருத்தமாகவே பொய் போதனை கண்டனம் செய்யப்படுகிறது

இயேசு பொய் போதனையை கண்டனம் செய்தார். மத் 23:15, 23, 24; 15:4-9

குருடாக்கப்பட்டவர்களை பாதுகாக்கவே அவ்வாறு செய்தார். மத் 15:14

இயேசுவின் சீஷராவதற்கு சத்தியம் உதவியது. யோவா 8:31, 32

 இ. தவறென நிரூபிக்கப்பட்டால் தன் மதத்தை மாற்றிக்கொள்வது அவசியம்

சத்தியம் விடுதலை ஆக்குகிறது; பலரின் வழிகளை தவறென நிரூபிக்கிறது. யோவா 8:31, 32

இஸ்ரவேலரும் மற்றவர்களும் முந்தின வழிபாட்டை விட்டுவிட்டனர். யோசு 24:15; 2இரா 5:17

பூர்வ கிறிஸ்தவர்கள் கொள்கைகளை மாற்றிக்கொண்டனர். கலா 1:13, 14; அப் 3:17, 19

பவுல் மதம் மாறினார். அப் 26:4-6

உலகம் முழுவதும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது; மனதை மாற்றிக்கொள்வது அவசியம். வெளி 12:9; ரோ 12:2

 ஈ. “எல்லா மதங்களிலும் நல்லது உள்ளது” போல் தோன்றுவதால் கடவுளின் தயவை பெற்றுவிட முடியாது

வழிபாட்டிற்கென கடவுள் சில தராதரங்களை வகுத்துள்ளார். யோவா 4:23, 24; யாக் 1:27

கடவுளின் சித்தத்திற்கிசைய இல்லையென்றால் அது சரியானதல்ல. ரோ 10:2, 3

“நல்ல செயல்களும்” ஏற்றுக்கொள்ளப்படாது. மத் 7:21-23

கனிகளினால் கண்டுகொள்ளலாம். மத் 7:20

35. உயிர்த்தெழுதல்

  அ. மரித்தோருக்கான நம்பிக்கை

பிரேதக் குழிகளிலிருக்கும் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவர். யோவா 5:28, 29

இயேசுவின் உயிர்த்தெழுதல் இதற்கோர் சான்று. 1கொ 15:20-22; அப் 17:31

பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம் செய்தவர்கள் எழுப்பப்படார். மத் 12:31, 32

விசுவாசிப்போருக்கு அது நிச்சயம். யோவா 11:25

 ஆ. பரலோகத்திலோ பூமியிலோ ஜீவனைப் பெற உயிர்த்தெழுதல்

எல்லாரும் ஆதாமுக்குள் மரிக்கிறார்கள்; இயேசுவிலோ உயிர்த்தெழுதல் அடைவர். 1கொ 15:20-22; ரோ 5:19

உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களின் தன்மையில் வித்தியாசம். 1கொ 15:40, 42, 44

இயேசுவோடு இருப்போர் அவரைப்போல் இருப்பர். 1கொ 15:49; பிலி 3:20, 21

அரசாளாதவர்கள் பூமியில் இருப்பர். வெளி 20:4ஆ, 5, 13; 21:3, 4

36. கிறிஸ்து திரும்ப வருதல்

  அ. திரும்ப வருதல் மனிதக் கண்களுக்கு தெரியாது

உலகம் தம்மைக் காணாது என சீஷர்களிடம் கூறினார். யோவா 14:19

சீஷர்கள் மாத்திரமே பரலோகத்திற்கு சென்றதை கண்டார்கள்; அதைப்போன்றதே வருகையும். அப் 1:6, 10, 11

பரலோகத்தில் காணக்கூடாத ஓர் ஆவி. 1தீ 6:14-16; எபி 1:3

பரலோக ராஜ்யத்தின் அதிகாரத்தோடு திரும்பி வருகிறார். தானி 7:13, 14

 ஆ. காணக்கூடிய உண்மைகளால் அடையாளம் கண்டுகொள்ளல்

சீஷர்கள் வந்திருத்தலின் அடையாளத்தைக் கேட்டார்கள். மத் 24:3, NW

கிறிஸ்தவர்கள் வந்திருத்தலின் அடையாளத்தை புரிந்துகொள்ளுதலின் மூலம் “பார்க்க” முடியும். எபே 1:18, NW

அநேக நிகழ்ச்சிகள் வந்திருத்தலுக்கு சான்றாய் அமைகின்றன. லூ 21:10, 11

எதிரிகள் அழிவின் கோரப்பிடியில் சிக்கும்போது “காண்பார்கள்.” வெளி 1:7

37. ஓய்வுநாள்

  அ. ஓய்வுநாளை அனுசரிக்க கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டில்லை

இயேசுவினுடைய மரணத்தின் அடிப்படையில் நியாயப்பிரமாணம் ஒழிக்கப்பட்டது. எபே 2:15

கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை கடைப்பிடிக்க வேண்டியதில்லை. கொலோ 2:16, 17; ரோ 14:5, 10

ஓய்வுநாளை கடைப்பிடிப்பதற்காக கண்டிக்கப்பட்டார்கள். கலா 4:9-11; ரோ 10:2-4

விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் மூலம் கடவுளின் இளைப்பாறுதலில் நுழைகிறோம். எபி 4:9-11

 ஆ. ஓய்வுநாள் பூர்வ இஸ்ரவேலர்கள் அனுசரிக்கும்படி மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது

எகிப்திலிருந்து வெளிவந்த பிறகே ஓய்வுநாள் முதன்முதல் ஆசரிக்கப்பட்டது. யாத் 16:26, 27, 29, 30

மாம்ச இஸ்ரவேலருக்கு பிரத்தியேக அடையாளமாய் இருந்தது. யாத் 31:16, 17; சங் 147:19, 20

நியாயப்பிரமாணத்தில் ஓய்வு வருடங்களும் இருந்தன. யாத் 23:10, 11; லேவி 25:3, 4

ஓய்வுநாள் கிறிஸ்தவர்களுக்கு அவசியமானதல்ல. ரோ 14:5, 10; கலா 4:9-11

 இ. கடவுளின் ஓய்வுநாள் (படைப்பின் வாரத்தில் 7-வது நாள்)

பூமிக்குரிய படைப்பின் முடிவில் ஆரம்பமானது. ஆதி 2:2, 3; எபி 4:3-5

பூமியில் இயேசு இருந்த காலத்திற்கு பின்னும் தொடர்ந்தது. எபி 4:6-8; சங் 95:7-9, 11

தன்னல செயல்களிலிருந்து கிறிஸ்தவர்கள் ஓய்ந்திருக்கிறார்கள். எபி 4:9, 10

பூமியிடம் ராஜ்யம் அதன் வேலையை முடிக்கும்போது நிறைவுறும். 1கொ 15:24, 28

38. இரட்சிப்பு

  அ. இரட்சிப்பு கடவுளிடமிருந்து இயேசு கிறிஸ்துவின் கிரயபலியின் அடிப்படையில் கிடைக்கிறது

கடவுளின் ஒப்பற்ற பரிசாய் அவருடைய குமாரன் மூலம் ஜீவன் கிடைக்கிறது. 1யோ 4:9, 14; ரோ 6:23

இயேசு கிறிஸ்துவினுடைய கிரயபலியின் அடிப்படையில் மாத்திரம் இரட்சிப்பு சாத்தியம். அப் 4:12

“மரண படுக்கையில் மனந்திரும்புவதால்” எந்த கிரியையும் செய்ய முடியாது. யாக் 2:14, 26

அதற்கு சுறுசுறுப்பாய் உழைக்கவேண்டும். லூ 13:23, 24; 1தீ 4:10

 ஆ. “ஒரு தரம் இரட்சிக்கப்பட்டோர் என்றும் இரட்சிக்கப்பட்டோர்” என்பது வேதத்துக்கு புறம்பானது

பரிசுத்த ஆவியை பெற்றவர்களில்கூட சிலர் விழுந்துவிடக்கூடும். எபி 6:4, 6; 1கொ 9:27

எகிப்திலிருந்து இரட்சிக்கப்பட்ட இஸ்ரவேலரில் பலர் அழிக்கப்பட்டனர். யூ 5

இரட்சிப்பு திடீரென ஏற்படுவது கிடையாது. பிலி 2:12; 3:12-14; மத் 10:22

வழுவிப்போகிறவர்களின் நிலைமை முன்னிலைமையிலும் மோசம். 2பே 2:20, 21

 இ. “அனைவருக்கும் இரட்சிப்பு” என்பது வேதப்பூர்வமானதல்ல

மனந்திரும்புதல் சிலருக்கு கூடாதகாரியம். எபி 6:4-6

பொல்லாதவர்கள் சாவில்கூட கடவுளுக்கு பிரியமில்லை. எசே 33:11; 18:32

ஆனால், அன்பு நேர்மைகேட்டை கண்டும் காணாமல் விட்டு விடாது. எபி 1:9

பொல்லாதோர் அழிக்கப்படுவர். எபி 10:26-29; வெளி 20:7-15

39. பாவம்

  அ. பாவம் என்றால் என்ன

கடவுளின் சட்டத்திற்கும் அவருடைய பூரண தராதரங்களுக்கும் எதிராக செய்யப்படுகிற கலகம். 1யோ 3:4; 5:17

மனிதன் கடவுளின் படைப்பாயிருக்கிறபடியால் கணக்கு கொடுக்கவேண்டும். ரோ 14:12; 2:12-15

நியாயப்பிரமாணம் பாவத்தை விளக்கியது, மனிதருக்கு பாவத்தை உணர்த்தியது. கலா 3:19; ரோ 3:20

எல்லாரும் பாவத்திலிருக்கிறோம், கடவுளின் பூரண தராதரங்களுக்கு குறைவுபடுகிறோம். ரோ 3:23; சங் 51:5

 ஆ. ஆதாமிய பாவத்தினால் ஏன் நாம் எல்லாரும் துன்பப்படுகிறோம்

ஆதாம் அபூரண தன்மையையும் மரணத்தையும் எல்லாருக்கும் கடத்தினான். ரோ 5:12, 18

கடவுள் இரக்கத்தோடு மனிதவர்க்கத்தை சகித்தார். சங் 103:8, 10, 14, 17

இயேசுவின் மீட்கும் பொருள் பிராயசித்தம் செய்கிறது. 1யோ 2:2

பாவம் மற்றும் சாத்தானின் அனைத்து கிரியைகளும் அழிக்கப்படும். 1யோ 3:8

 இ. விலக்கப்பட்ட கனி கீழ்ப்படியாமையை குறிக்கிறது, பாலுறவையல்ல

ஏவாள் படைக்கப்படுவதற்கு முன்பே மரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆதி 2:17, 18

ஆதாம் ஏவாளிடம் பிள்ளைகளை பெற்றெடுக்கும்படி சொல்லப்பட்டது. ஆதி 1:28

பிள்ளைகள் பாவத்தின் விளைவு அல்ல மாறாக கடவுளின் ஆசீர்வாதம். சங் 127:4, 5

ஆதாம் இல்லாதபோது ஏவாள் பாவம் செய்தாள்; கணவனைக் கேட்காமல் தானாகவே முடிவெடுத்தாள். ஆதி 3:6; 1தீ 2:11-14

தலைமை ஸ்தானத்திலிருந்த ஆதாமும் கடவுளின் சட்டத்திற்கு விரோதமாய் கலகம் செய்தான். ரோ 5:12, 19

 ஈ. பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பாவம் செய்தல் என்றால் என்ன? (மத் 12:32; மாற் 3:28, 29)

சுதந்தரிக்கப்பட்ட பாவத்தை அர்த்தப்படுத்தாது. ரோ 5:8 12, 18; 1யோ 5:17

ஒருமுறை ஆவிக்கு விரோதமாய் பாவம் செய்தாலும் ஒருவரால் குணமடைய முடியும். எபே 4:30; யாக் 5:19, 20

வேண்டுமென்றே பாவத்தை பழக்கமாக செய்வது மரணத்திற்கு வழிநடத்தும். 1யோ 3:6-9

கடவுள் அவர்களை நியாயம் தீர்க்கிறார், பரிசுத்த ஆவியை அவர்களிடமிருந்து நீக்குகிறார். எபி 6:4-8

அப்படிப்பட்ட மனம் திரும்பாத ஆட்களுக்காக ஜெபிக்கக்கூடாது. 1யோ 5:16, 17

40. ஆத்துமா

  அ. ஆத்துமா என்றால் என்ன?

மனிதனே ஆத்துமா. ஆதி 2:7; 1கொ 15:45; யோசு 11:11, NW; அப் 27:37, NW

விலங்குகளும் ஆத்துமாக்கள் என்பதாகவே அழைக்கப்படுகின்றன. எண் 31:28; வெளி 16:3; லேவி 24:18, NW

ஆத்துமாவிற்கு இரத்தம் உண்டு, அது சாப்பிடுகிறது, மரிக்கிறது. எரே 2:34; லேவி 7:18, NW; எசே 18:4

உயிருள்ள மனிதன் ஆத்துமாவாய் இருப்பதாக சொல்லப்படுகிறது. மாற் 8:36; யோவா 10:15

 ஆ. ஆத்துமாவிற்கும் ஆவிக்கும் இடையே உள்ள வித்தியாசம்

உயிருள்ள ஓர் ஆள் அல்லது பிராணியே ஆத்துமா. யோவா 10:15, NW; லேவி 17:11

ஆத்துமாக்களை செயல்படுத்தும் உயிர்சக்தியே “ஆவி.” சங் 146:4; 104:29

இறக்கும்போது உயிர்சக்தியின் மீதான அதிகாரம் கடவுளிடம் திரும்புகிறது. பிர 12:7

கடவுளால் மாத்திரமே உயிர்சக்தியை மீண்டும் செயல்பட வைக்கமுடியும். எசே 37:12-14

41. ஆவி, ஆவிக்கொள்கை

  அ. பரிசுத்த ஆவி என்பது என்ன?

கடவுளின் செயல் நடப்பிக்கும் சக்தி; ஓர் ஆள் அல்ல. அப் 2:2, 3, 33; யோவா 14:17

பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டது; உதாரணமாக படைப்பின்போதும் பைபிளை எழுதும்படி ஏவும்போதும். ஆதி 1:2; எசே 11:5, NW

கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர் தோன்ற ஏதுவாக இருக்கிறது, அவர்களை அபிஷேகம் செய்கிறது. யோவா 3:5-8; 2கொ 1:21, 22

கடவுளின் மக்களுக்கு வழிநடத்துதலையும் வல்லமையையும் கொடுக்கிறது. கலா 5:16, 18

 ஆ. உயிர்சக்தி ஆவி என்றழைக்கப்படுகிறது

உயிர்சக்தி சுவாசிப்பதால் காக்கப்படுகிறது. யாக் 2:26; யோபு 27:2

உயிர்சக்தியின் மீதான அதிகாரம் கடவுளிடம் உள்ளது. சக 12:1; பிர 8:8

மனிதர், மிருகம் ஆகியவற்றின் உயிர்சக்தி கடவுளுக்கு உரியது. பிர 3:19-21

உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையுடன் ஆவி கடவுளிடம் செல்கிறது. லூ 23:46

 இ. ஆவியுலக தொடர்பு சாத்தானின் கிரியையாகவே இருப்பதால் வெறுக்க வேண்டும்

கடவுளுடைய வார்த்தை தடை செய்கிறது. ஏசா 8:19, 20; லேவி 19:31; 20:6, 27

குறிசொல்லுதல் பேய்களோடு தொடர்பு கொள்வதாகும், கண்டனம் செய்யப்படுகிறது. அப் 16:16-18

அழிவுக்கு வழிநடத்துகிறது. கலா 5:19-21; வெளி 21:8; 22:15

வானசாஸ்திரம் கண்டனம் செய்யப்படுகிறது. உபா 18:10-12; எரே 10:24

42. திரித்துவம்

  அ. பிதாவாகிய கடவுள் ஓர் ஆவி ஆள், பூமியனைத்தின் மேலும் உன்னதர்

கடவுள் திரித்துவம் அல்ல. உபா 6:4; மல் 2:10; மாற் 10:18; ரோ 3:29, 30

தேவன் குமாரனை படைத்தார்; அதற்கும் முன்பாக கடவுள் தனிமையாய் இருந்தார். வெளி 3:14; கொலோ 1:15; ஏசா 44:6

பிரபஞ்சத்திற்கு எல்லா சமயங்களிலும் கடவுளே ஆட்சியாளர். பிலி 2:5, 6; தானி 4:35

கடவுள் எல்லாருக்கும் மேலாக உயர்த்தப்பட வேண்டும். பிலி 2:10, 11

 ஆ. பூமிக்கு வருமுன்னும் வந்த பின்னும் குமாரன் பிதாவுக்கு கீழ்ப்பட்டிருந்தார்

குமாரன் பரலோகத்திலிருந்தபோது கீழ்ப்படிந்திருந்தார், பிதாவினால் அனுப்பப்பட்டார். யோவா 8:42; 12:49

பூமியிலிருக்கும்போதும் கீழ்ப்படிந்திருந்தார், பிதாவே பெரியவர். யோவா 14:28; 5:19; எபி 5:8

பரலோகத்தில் உயர்த்தப்பட்ட நிலையிலிருக்கிறார், இன்றும் கீழ்ப்படிந்திருக்கிறார். பிலி 2:9; 1கொ 15:28; மத் 20:23

கிறிஸ்துவிற்கு தலையாயும் கடவுளாயும் யெகோவா இருக்கிறார். 1கொ 11:3; யோவா 20:17; வெளி 1:6

 இ. கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள ஒற்றுமை

எப்போதும் முழுமையான ஒத்திசைவு. யோவா 8:28, 29; 14:10

இவ்வொருமைப்பாடு கணவன் மனைவிக்கு ஒப்பானது. யோவா 10:30; மத் 19:4-6

அனைத்து விசுவாசிகளும் இதே ஒருமைப்பாட்டுடன் இருக்கவேண்டும். யோவா 17:20-22; 1கொ 1:10

கிறிஸ்துவின் மூலமாய் யெகோவாவிற்கு என்றென்றும் ஒரே வழிபாடு. யோவா 4:23, 24

 ஈ. பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி

ஒரு சக்தி, ஓர் ஆள் அல்ல. மத் 3:16; யோவா 20:22; அப் 2:4, 17, 33

கடவுளோடும் கிறிஸ்துவோடும் பரலோகத்திலிருக்கும் ஓர் ஆளல்ல. அப் 7:55, 56; வெளி 7:10

கடவுளின் நோக்கத்தை நிறைவேற்ற கடவுளால் அனுப்பப்படுகிறது. சங் 104:30; 1கொ 12:4-11

கடவுளின் ஊழியர்கள் பெற்றுக்கொள்கின்றனர், வழிநடத்தப்படுகின்றனர். 1கொ 2:12, 13; கலா 5:16

43. பொல்லாத்தனம், உலகளாவிய வேதனை

  அ. உலகளாவிய வேதனைக்கு யார் காரணம்?

பொல்லாதவர்களின் ஆட்சி இன்றிருக்கும் தீமைகளுக்கு காரணம். நீதி 29:2; 28:28

உலகத்தின் அதிபதி கடவுளுக்கு எதிரி. 2கொ 4:4; 1யோ 5:19; யோவா 12:31

துயரங்களுக்கு காரணம் பிசாசு, அவனுக்கு கொஞ்சம் காலம்தான் இருக்கிறது. வெளி 12:9, 12

பிசாசு செயல்படா வண்ணம் கட்டப்படுவான், மகத்தான சமாதானம் தொடரும். வெளி 20:1-3; 21:3, 4

 ஆ. பொல்லாத்தனம் அனுமதிக்கப்படுவதற்கு காரணம் என்ன?

கடவுளிடமாக சிருஷ்டிகளின் உண்மைத் தன்மையைக் குறித்து சாத்தான் சவால் விட்டான். யோபு 1:11, 12

தங்களுடைய உண்மைத் தன்மையை நிரூபிக்க விசுவாசிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ரோ 9:17; நீதி 27:11

பிசாசு பொய்யன் என்று நிரூபிக்கப்பட்டான், விவாதம் இனி தீர்க்கப்படும். யோவா 12:31

உண்மையுள்ள விசுவாசிகளுக்கு நித்திய வாழ்க்கையே பரிசு. ரோ 2:6, 7; வெளி 21:3-5

 இ. முடிவு காலம் நீடித்திருப்பது ஓர் இரக்கமுள்ள ஏற்பாடு

எச்சரிப்பு கொடுக்க நோவாவின் நாட்களில் காலம் தேவைப்பட்டது. மத் 24:14, 37-39

கடவுள் தாமதிக்கிறவர் அல்ல, இரக்கமுள்ளவர். 2பே 3:9; ஏசா 30:18

திடீரென அகப்பட்டுக் கொள்வதைத் தவிர்க்க பைபிள் உதவுகிறது. லூ 21:36; 1தெ 5:4

பாதுகாப்பிற்கான கடவுளின் ஏற்பாட்டை இப்போதே நாடுங்கள். ஏசா 2:2-4; செப் 2:3

 ஈ. உலக துயரங்களுக்கான முடிவு மனிதன் மூலமல்ல

மனிதர் அதிக திகிலும் குழப்பமும் நிறைந்து இருக்கின்றனர். லூ 21:10, 11; 2தீ 3:1-5

மனித ராஜ்யமல்ல கடவுளின் ராஜ்யமே வெற்றிபெறும். தானி 2:44; மத் 6:10

உயிருடன் இருக்க ராஜாவுடன் இப்போதே சமாதானம் செய்துகொள்ளுங்கள். சங் 2:9, 11, 12

44. சாட்சி கொடுத்தல்

  அ. அனைத்து கிறிஸ்தவர்களும் சாட்சி கொடுக்க வேண்டும், நற்செய்தியை சொல்லவேண்டும்

கடவுளால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் மனிதர் முன்பாக இயேசுவை அறிக்கை செய்யவேண்டும். மத் 10:32

விசுவாசத்தை செயல்முறையில் காட்டவும், திருவசனத்தின்படி செய்கிறவர்களாயும் இருக்கவேண்டும். யாக் 1:22-24; 2:24

புதியவர்களும்கூட கற்பிக்கிறவர்களாக வேண்டும். மத் 28:19, 20

வெளிப்படையாய் யாவரறிய அறிக்கை செய்வது இரட்சிப்புக்கு வழிநடத்துகிறது. ரோ 10:10

 ஆ. அடிக்கடி சென்று சந்திப்பதும் தொடர்ந்து சாட்சி கொடுப்பதும் அவசியம்

முடிவைப் பற்றி எச்சரிக்க வேண்டும். மத் 24:14

எரேமியா எருசலேமின் முடிவைப் பற்றி அநேக ஆண்டுகளாய் அறிவித்தார். எரே 25:3

பூர்வ கிறிஸ்தவர்களைப் போல நாம் சாட்சி கொடுப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். அப் 4:18-20; 5:28, 29

 இ. இரத்தப் பழியிலிருந்து நீங்குவதற்கு சாட்சி கொடுக்க வேண்டும்

நெருங்கி வரும் முடிவைக் குறித்து எச்சரிக்க வேண்டும். எசே 33:7; மத் 24:14

செய்யாமலிருப்பது இரத்தப் பழியைக் கொண்டு வரும். எசே 33:8, 9; 3:18, 19

பவுல் சத்தியத்தை முழுமையாய் எடுத்துரைத்தார்; இரத்தப் பழிக்கு நீங்கலானார். அப் 20:26, 27; 1கொ 9:16

சாட்சி கொடுப்போரையும் கேட்போரையும் இரட்சிக்கிறது. 1தீ 4:16; 1கொ 9:22