பகுதி 7 • அப்போஸ்தலர் 18:23–21:17
‘பொது இடங்களிலும் வீடு வீடாகவும் கற்பிப்பது’
கற்றுக்கொடுக்கும்போது நாம் ஏன் மனத்தாழ்மையைக் காட்ட வேண்டும்? மற்றவர்களுக்கு ஏற்ற மாதிரி நாம் பேசும் விதத்தை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான முக்கிய வழி எது? நம்முடைய சொந்த விருப்பங்களைவிட கடவுளுடைய விருப்பம்தான் முக்கியம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? பவுலின் கடைசி மிஷனரி பயணமான மூன்றாம் மிஷனரி பயணத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பதிவு, இந்த முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தரும்.