பட அட்டவணை
பக்கங்களின் எண்களுடன்
அட்டைப் படங்கள் பவுல், தபீத்தாள், கல்லியோன், லூக்கா, அப்போஸ்தலர்களோடு ஆலய அதிகாரி, சதுசேயர், செசரியாவுக்கு பவுல் கொண்டு செல்லப்படுவது, நவீன காலத்தில் ஊழியத்தில் பயன்படுத்தப்பட்ட ஃபோனோகிராஃப், ‘சவுண்டு’ கார்.
பக்கம் 1 விலங்கிடப்பட்ட பவுலும் லூக்காவும் ரோமுக்குப் போகும் சரக்குக் கப்பலில்.
பக்கங்கள் 2, 3 உலக வரைபடம் பக்கத்தில் ஆளும் குழுவின் முன்னாள் அங்கத்தினர்கள் ஜெ. ஈ. பார் & டி. ஜாரஸ்.
பக்கம் 11 அப்போஸ்தலர்களுக்கும் மற்ற சீஷர்களுக்கும் கலிலேய மலையில் பிரசங்கிக்கும் பொறுப்பை இயேசு அளிக்கிறார்.
பக்கம் 14 இயேசு பரலோகத்துக்கு ஏறிப் போவதை அப்போஸ்தலர்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பக்கம் 20 பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு வந்தவர்களிடம் அவர்களுடைய மொழிகளிலேயே சீஷர்கள் பேசுகிறார்கள்.
பக்கம் 36 கோபத்தில் கொந்தளிக்கும் காய்பாவின் முன் அப்போஸ்தலர்கள். கைதுசெய்ய நியாயசங்கத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் ஆலய அதிகாரிகள்.
பக்கம் 44 கீழே: இரண்டாம் உலகப் போருக்குப்பின், யெகோவாவின் சாட்சிகளை அமெரிக்க உளவாளிகள் என்று கிழக்கு ஜெர்மனி நீதிமன்றம் பொய்யாகக் குற்றம் சாட்டியது.—அக். 3, 1950 நெயு பெர்லினர் இல்லஸ்ட்ரியேட் இதழ்.
பக்கம் 46 நியாயசங்கத்துக்குமுன் குற்றவாளியாக ஸ்தேவான். பின்புறம் பணபலம் படைத்த சதுசேயர்கள், முன்புறம் பாரம்பரியத்தில் ஊறிய பரிசேயர்கள்.
பக்கம் 54 புதிய சீஷர்மீது பேதுரு கையை வைக்கிறார்; பக்கத்தில் சீமோன் பணப்பையுடன்.
பக்கம் 75 கொர்நேலியுவின் வீட்டுக்குள் பேதுருவும் மிஷனரி தோழர்களும். நூறு வீரர்களுக்கு அதிகாரி என்பதற்கு அடையாளமாக கொர்நேலியுவின் இடது தோளில் ஒரு விசேஷ சால்வை.
பக்கம் 83 பேதுருவை ஒரு தேவதூதர் வழிநடத்துகிறார்; அன்டோனியா கோட்டையில் பேதுரு அடைக்கப்பட்டிருக்கலாம்.
பக்கம் 84 கீழே: 1945-ல் கியுபெக், மான்ட்ரீல் அருகே கலகக் கும்பலின் தாக்குதல்.—வீக்கெண்ட் மேகஸின், ஜூலை 1956.
பக்கம் 91 பவுலும் பர்னபாவும் பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவைவிட்டு தள்ளப்படுகிறார்கள். பின்புறத்தில் புதிய கால்வாய்-பாலம்; கி.பி. முதலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.
பக்கம் 94 லீஸ்திரா மக்கள் தங்களைத் தெய்வங்களாக வணங்குவதை பவுலும் பர்னபாவும் மறுக்கிறார்கள். மேளதாளங்களுடன் கோலாகலமாக பலிகள் செலுத்தப்பட்டன.
பக்கம் 100 மேலே: சீரியாவிலிருந்த அந்தியோகியா சபையை சீலாவும் யூதாவும் உற்சாகப்படுத்துகிறார்கள். (அப். 15:30-32) கீழே: உகாண்டாவில் ஒரு சபையில் வட்டாரக் கண்காணி பேச்சு கொடுக்கிறார்.
பக்கம் 107 எருசலேம் சபையில் இருந்தவர்கள் ஒரு வீட்டில் கூடுகிறார்கள்.
பக்கம் 124 பவுலும் தீமோத்தேயுவும் ரோம வணிகக் கப்பலில் பயணம் செய்யும் காட்சி. தூரத்தில் கலங்கரைவிளக்கம்.
பக்கம் 139 பொங்கியெழும் கலகக் கும்பலிடமிருந்து முற்றம் வழியாக பவுலும் சீலாவும் தப்பி செல்லும் காட்சி.
பக்கம் 155 பவுல்மீது குற்றம் சாட்டுகிறவர்களை கல்லியோன் கண்டிக்கிறார். பதவிக்குப் பொருத்தமான உடை: வெள்ளை நிற ராஜ உடை, அதன் ஓரங்களில் ஊதா நிறம் இருக்கிறது, கால்ஸி என்ற ஒருவித காலணி.
பக்கம் 158 எபேசுவில் வெள்ளி ஆசாரி கடையில் தெமேத்திரியு. அர்த்தமி கோவிலின் வெள்ளி சிலைகள் நினைவுச் சின்னங்களாக விற்கப்படுகின்றன.
பக்கம் 171 பவுலும் மிஷனரி தோழர்களும் கப்பல் ஏறுகிறார்கள். பின்புறத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு துறைமுகச் சின்னம்.
பக்கம் 180 கீழே: 1940-களில் கனடாவில் பிரசுரங்கள் தடை செய்யப்பட்டிருந்தபோது ஒரு இளம் சாட்சி அவற்றை ரகசியமாகக் கொண்டுசெல்கிறார். (சித்தரிக்கப்பட்டது.)
பக்கம் 182 மூப்பர்களின் வேண்டுகோளுக்கு பவுல் இணங்குகிறார். பின்பக்கத்தில் லூக்காவும் தீமோத்தேயுவும்; நன்கொடைகளைக் கொண்டுபோக உதவுகிறார்கள்.
பக்கம் 190 அன்டோனியா கோட்டையில் கிலவுதியு லீசியாவிடம் பவுலின் சகோதரி மகன் பேசுகிறார்; இங்கே பவுல் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம். பின்புறத்தில் ஏரோது கட்டிய ஆலயம்.
பக்கம் 206 சரக்குக் கப்பலில் களைத்துப்போன பயணிகளுக்காக பவுல் ஜெபிக்கிறார்.
பக்கம் 222 ரோமப் படைவீரனின் கையுடன் விலங்கு போடப்பட்டிருக்கும் பவுல், ரோம் நகரைப் பார்க்கிறார்.