பகுதி 6 • அப்போஸ்தலர் 15:36–18:22
‘நாம் திரும்பிப் போய் சகோதரர்களைப் பார்க்கலாம்’
கிறிஸ்தவச் சபைகளில் வட்டாரக் கண்காணிகளுக்கு இருக்கிற முக்கியப் பொறுப்பு என்ன? கிறிஸ்தவ நியமிப்புகளை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போது என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? பைபிளிலிருந்து நாம் எப்படித் திறமையாக மற்றவர்களிடம் நியாயங்காட்டிப் பேசலாம்? மக்களுக்கு ஏற்ற மாதிரி நாம் பேசும் விதத்தை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கும் வேறுசில கேள்விகளுக்கும் பதிலைத் தெரிந்துகொள்ள, அப்போஸ்தலன் பவுலின் இரண்டாம் மிஷனரி பயணத்தில் அவரோடுகூட பயணம் செய்யலாமா?