Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழு எழுதிய கடிதம்

ஆளும் குழு எழுதிய கடிதம்

அன்பான சகோதர சகோதரிகளே,

நிறைய பேரைப் பற்றி நீங்கள் பைபிளில் படித்திருப்பீர்கள். நம்மைப் போலவே அவர்களும் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். “நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான்” அவர்களுக்கும் இருந்தன. (யாக்கோபு 5:17) கவலைகளாலும் பிரச்சினைகளாலும் சிலர் சோர்ந்துபோனார்கள். சொந்தக் குடும்பத்தில் இருப்பவர்களே சிலசமயங்களில் அவர்களுடைய மனதை நோகடித்தார்கள். தாங்கள் செய்த தவறை நினைத்து சில ஆண்களும் பெண்களும் வேதனைப்பட்டார்கள்.

ஆனால், இவர்கள் யாருமே யெகோவாவை மறக்கவில்லை. சங்கீதம் 119:176-ல் இருப்பதுபோல் இவர்களும் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள். “காணாமல்போன ஆடுபோல் வழிதவறிப் போய்விட்டேன். அடியேனைத் தேடுங்கள். ஏனென்றால், உங்கள் கட்டளைகளை நான் மறக்கவில்லை” என்று அந்த வசனம் சொல்கிறது. இவர்களைப் போல்தான் நீங்களும் நினைக்கிறீர்களா?

வழிதவறிப்போன எந்த ஆட்டையும் யெகோவா மறக்கவில்லை. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அதுவும், அவரை வணங்குகிற மக்களைப் பயன்படுத்தியே அவர்களைத் தேடுகிறார். உதாரணத்துக்கு, யோபுவுக்குச் சோதனைக்கு மேல் சோதனை வந்தது. சொத்து சுகங்களையும் பிள்ளைகளையும் அவர் இழந்தார்; மோசமான வியாதியால் கஷ்டப்பட்டார். அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர்களே அவருடைய மனதை நோகடித்தார்கள். அவருக்கு வந்த கஷ்டத்துக்கெல்லாம் யெகோவாதான் காரணம் என்று யோசிக்கிற அளவுக்குப் போய்விட்டார். ஆனாலும், அவர் யெகோவாவைவிட்டு போய்விடவில்லை. (யோபு 1:22; 2:10) அந்தச் சமயத்தில், யோபுவுக்கு யெகோவா எப்படி உதவினார்?

தன்னை வணங்குபவரான எலிகூவைப் பயன்படுத்தி யெகோவா யோபுவுக்கு உதவினார். மனதில் இருக்கும் வேதனையை எல்லாம் யோபு கொட்டித் தீர்க்கும்வரை எலிகூ பொறுமையாகக் கேட்டார். பிறகு அவர் பேசினார். ஆனால், அவர் ஆறுதலாகப் பேசினாரா அல்லது யோபுவின் மனதை நோகடிப்பதுபோல் பேசினாரா? யோபுவைவிட தான்தான் நல்லவர் என்பதுபோல் காட்டிக்கொண்டாரா? இல்லவே இல்லை! “உண்மைக் கடவுளுக்கு முன்னால் நீங்களும் நானும் ஒன்றுதான். என்னையும் மண்ணிலிருந்துதான் அவர் படைத்தார். அதனால், என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம். நான் சொல்வதைக் கேட்டு ஆடிப்போக வேண்டாம்” என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எலிகூ சொன்னார். (யோபு 33:6, 7) யோபுவின் மனதைக் காயப்படுத்துவதுபோல் பேசாமல், அவருக்கு அன்பாக ஆலோசனை கொடுத்தார். அவருக்குத் தேவையான உற்சாகத்தையும் தந்தார்.

இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்தச் சிற்றேட்டை உங்களுக்காகத் தயாரித்திருக்கிறோம். யெகோவாவைவிட்டுப் போன நிறைய பேரிடம் பேசினோம். அவர்கள் ஏன் அப்படிப் போனார்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டோம். (நீதிமொழிகள் 18:13) பிறகு, இதைப் பற்றி ஜெபம் செய்தோம். இவர்களைப் போலவே யெகோவாவைவிட்டுப் போன கடந்தகால ஊழியர்களுக்கு அவர் எப்படி உதவினார் என்று பைபிளில் படித்தோம். அதையும் இன்றுள்ள அனுபவங்களையும் சேர்த்து இந்தச் சிற்றேட்டைத் தயாரித்திருக்கிறோம். உங்கள்மீது நாங்கள் ரொம்ப அன்பு வைத்திருக்கிறோம். இந்தச் சிற்றேட்டை நீங்கள் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு