யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்
யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்
மால்டோவா
ருமேனிய மன்னர் ஆட்சி, ஃபாசிஸ ஆட்சி, கம்யூனிஸ ஆட்சி ஆகியவற்றின்கீழ், 60 வருடங்களுக்கு மேலாக மால்டோவாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் அவதியுற்றார்கள். அத்துடன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கொடுத்து வந்த தொல்லைகளாலும் கஷ்டப்பட்டார்கள். இருந்தபோதிலும், மொத்த ஜனத்தொகையோடு ஒப்பிட இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் மால்டோவாவும் ஒன்று! யெகோவாவுக்கு பயந்து நடப்பவர்களை அவர் எவ்வாறு பலப்படுத்துகிறார் என்பதையும், மனுஷரைக் கண்டு அஞ்சி நடுங்காமல், தைரியமாக இருப்பவர்களுக்கு அவர் எவ்வாறு வெற்றி அளிக்கிறார் என்பதையும் வாசித்துப் பாருங்கள்.
இரண்டு காங்கோ குடியரசுகள்
“காங்கோ” என்ற பெயரை கேட்டவுடன் உங்கள் மனதிற்கு எது வருகிறது? அநேகருக்கு, படு உஷ்ணமான, சூரிய வெளிச்சமே ஊடுருவ முடியாதளவு அடர்ந்திருக்கும் புதர்க்காடுகளே மனதில் தோன்றலாம். குரங்குகள், பறவைகள் போன்றவற்றின் கர்ணகடூர ஒலிகளுக்கு மத்தியில், ஒதுக்குப்புறமான கிராமங்களிலிருந்து செய்திகளை பறைசாற்றும் முரசொலிகளும் காதுகளில் ஒலிக்கலாம். ஒரு இராட்சச பாம்பைப் போல, ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் மெதுமெதுவாய் வளைந்து நெளிந்து ஓடும் கலங்கிய நீரையுடைய மிகப் பெரிய நதி ஒன்று ஒருவேளை உங்கள் மனத்திரையில் காட்சியளிக்கலாம். இவையெல்லாம் அடங்கியதுதான் காங்கோ; ஆனால் காங்கோவை விவரிக்க இந்த சில வரிகள் மட்டுமே போதாது. இரு நாடுகளை பிரிக்கும் இந்த நதியின் பெயரே அந்நாடுகளுக்கு உள்ளன. பூமியின் இந்த மனங்கவர் பகுதி முழுவதிலும் அஞ்சாநெஞ்சம் படைத்த ஆண்களும் பெண்களும் எப்படி பைபிள் சத்தியங்களை பரப்பினார்கள் என்பதை வாசிக்க வாசிக்க உங்களுடைய விசுவாசம் இன்னும் பலப்படும்.