Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

டஹிடி

உலகிலேயே மிக அழகிய தீவுகள் பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ளன. அவற்றில் ஒன்றே டஹிடி. அதை ஒரு பரதீஸ் என கவிஞர்களும் எழுத்தாளர்களும் வருணிக்கின்றனர். ஆனால் அதைக் காட்டிலும் அழகிய பரதீஸ் ஒன்று அமைதி தவழும் இப்பசிபிக் தீவுகளில் செழித்தோங்குகிறது. இந்த அதிமுக்கிய பரதீஸ் உருவானதைப் பற்றியும், யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் அபரிமிதமான பலன்களை அது தொடர்ந்து அள்ளித்தரும் விதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

கயானா

கயானா என்ற பெயருக்குத் “தண்ணீர் தேசம்” என்று அர்த்தம். அதன் பெயருக்கு ஏற்றாற்போல் அந்நாடு முழுவதும் ஆறுகள் நாலாபக்கமும் வளைந்து நெளிந்து செல்கின்றன; அவற்றில் அநேகம், உள்நாட்டில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயணப் பாதையாகச் செயல்படுகின்றன. தென் அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஜனங்களையுடைய ஒரே நாடு கயானாதான். இங்குள்ள மனங்கவரும் பல இனத்தாரை ‘ஜீவத் தண்ணீருக்கு’ வழிநடத்த யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு தோணிகளையும், துடுப்புப் படகுகளையும், நீராவிப் படகுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள்.​—⁠யோவா. 4:10.

ஐஸ்லாந்து

வெப்ப மண்டலத்திலிருந்து மிகத் தொலை தூரத்தில், ஆர்க்டிக் வட்டத்திற்கு சற்று தெற்கே ஐஸ்லாந்து அமைந்துள்ளது; இது அழகின் சிகரமாகத் திகழும் நாடு. இதன் கரடுமுரடான நிலத்தைப் பனியாறுகளும் எரிமலைகளும் மலைகளும் அலங்கரிக்கின்றன. ஆனால், இவை எல்லாவற்றையும்விட கொள்ளை அழகு யெகோவாவைச் சேவிக்கும் மக்களிடம் காணப்படுகிறது. இந்த விவரப்பதிவில், கடவுளுடைய ஊழியர்கள் பைபிள் சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு எவ்வாறு மோசமான சூழ்நிலைகளையும் தைரியத்தோடு சமாளிக்கிறார்கள் என்பதைக் காண்பீர்கள்.