Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

ருமேனியா

உளவாளிகள், தகவல் கொடுப்பவர்கள், கள்ளச் சகோதரர்கள், சித்திரவதை, சிறைவாசம், கட்டாய உழைப்பு​—⁠இவையெல்லாம் யெகோவாவின் சாட்சிகளைத் தனிப்பட்ட விதமாக தைரியமிழக்கச் செய்வதற்கும் ருமேனியாவில் அவர்களுடைய அமைப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கும் சாத்தான் பயன்படுத்திய வழிகளில் சில. ஆனால் அவனுடைய இந்த முயற்சிகளெல்லாம் மண்ணைக் கவ்வின. துப்பாக்கிப் படைக்கு முன்பு சத்தமாய் ஜெபம் செய்த யவன் என்பவரைப் பற்றி வாசித்துப் பாருங்கள். தங்களைச் சுற்றிலும் குண்டுமழை பொழிகையில் மற்ற சாட்சிகளுடன் சேர்ந்து ராஜ்ய பாடல்களைப் பாடிய டீயாடார் என்பவரைச் சந்தியுங்கள். கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வெறுங்காலில் ஏறக்குறைய 100 கிலோமீட்டர் நடந்துசென்ற ஆட்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். “டாடி, உங்களிடம் தினவசன புத்தகத்தின் வாசனை வருகிறது” என்று ஏன் ஒரு குட்டிப்பையன் சொன்னான் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

ஜாம்பியா

அரசாங்க தடைகள், மிஷனரிகளை வெளியேற்றுதல், பள்ளியிலிருந்து நீக்குதல்​—⁠இவையெல்லாம் ஜாம்பியாவிலிருந்த நமது சகோதரர்கள் எதிர்ப்பட்ட சவால்களில் சில. நீதிமன்றத்தில் நற்செய்தியை ஆதரித்து தைரியமாய் பேசிய பள்ளி சிறுமியையும், “கழுகுகளைவிட வேகமாக” சென்ற ஊனமுற்ற அகதியையும், சவுக்கடி வாங்கிய ஆரம்பகால பைபிள் மாணாக்கர் ஒருவரையும் பற்றி இதில் நீங்கள் படிப்பீர்கள். தீப்பற்றி எரிந்த “லேண்ட் ரோவர்,” தகர்க்கப்பட்ட கரையான் புற்று, கறுப்புக் குதிரை போல் காட்சி அளித்த ராஜ்ய மன்றம் ஆகியவற்றைப் பற்றியும் வாசிப்பீர்கள். கொசுக்கள், செட்ஸி ஈக்கள், பாம்புகள், சிங்கங்கள்​—⁠இவையெல்லாம் இந்த அழகிய ஆப்பிரிக்க நாடு முழுவதும் நற்செய்தியை அறிவிப்பதற்கு நமது சகோதரர்கள் எடுத்த பிரயாசத்தைப் பற்றிய அனுபவங்களில் வருபவை.