Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்

தென் ஆப்பிரிக்கா

மொழி வேறுபாடுகள் காரணமாக மட்டுமல்ல, இன ஒதுக்கீட்டுக் கொள்கைகளாலும் இந்நாட்டிலிருந்தவர்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். இனம் சார்ந்த கண்டிப்புமிக்க சட்டங்கள், ஒருவர் எங்கே வாழ வேண்டும், எங்கே பயணம் செய்ய வேண்டும், எங்கே வேலை செய்ய வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்பவற்றைக் கட்டுப்படுத்தின. இந்தப் பதிவில், யெகோவாவின் சாட்சிகள் ஆன்மீக ரீதியில் எவ்வாறு செழித்தோங்கினார்கள் என்பதைப் பற்றியும், இனவெறி, பிரிவினை, உள்நாட்டுக் கலகம் ஆகிய பிரச்சினைகளின் மத்தியிலும் தொடர்ந்து எவ்வாறு அசைக்க முடியாத ஐக்கியத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றியும் வாசிக்கப் போகிறீர்கள்.

லாட்வியா

கொடூரமான கம்யூனிஸ சகாப்தத்தில், யெகோவாவின் சாட்சிகளில் சிலர் எவ்வாறு கைது செய்யப்படாமல் தப்பினார்கள்? “உழைப்பாளர் முகாமுக்குச் செல்லும்படி கடவுள் என்னை அனுமதித்ததற்காக நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்” என்று ஒருவர் ஏன் சொன்னார்? தேசிய விருதுபெற்ற பளு தூக்கும் சாம்பியன் ஒருவர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டபோது என்ன நடந்தது? பல பத்தாண்டுகளாக எதிர்ப்பின் மத்தியிலும் லாட்வியாவிலுள்ள கடவுளுடைய ஜனங்கள் ஒருவித விடுதலையை, ஆம் ஆன்மீக விடுதலையை ருசித்து வந்ததைப் பற்றி இந்தப் பதிவில் படிப்பீர்கள்.

ரீயூனியன்

1961-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பம் ஒன்று இந்த வெப்பமண்டலத் தீவுக்கு வந்தபோது இங்கு ஊழியம் செய்வது ஆரம்பமானது. நற்செய்தியிடம் ஆட்கள் காட்டிய ஆர்வத்தை அவர்கள் எப்படி வளர்த்தார்கள் என்பதைப் பாருங்கள். எதிர்ப்பு தெரிவித்த ஒருவரை, கடவுளுடைய ஜனங்கள் சொல்வதைக் கேட்கும்படி ஒரு கப் சூப்பு எப்படி மாற்றியது என்பதை வாசியுங்கள். ரீயூனியனின் செயலிழந்த எரிமலைப் பெருவாய்க்குள் செல்ல துணிச்சல்மிக்க நான்கு ராஜ்ய பிரஸ்தாபிகள் ஏன் பயணப்பட்டார்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்.