உலகெங்கும் பிரசங்கித்தலும் கற்பித்தலும்—2007 மொத்த எண்ணிக்கை
உலகெங்கும் பிரசங்கித்தலும் கற்பித்தலும்—2007 மொத்த எண்ணிக்கை
கடந்த ஊழிய ஆண்டின் பின்வரும் அறிக்கை சுவாரஸ்யமற்ற புள்ளிவிவரங்கள் அடங்கிய பதிவு அல்ல. மாறாக, இது உலகெங்கும் உள்ள தேவபயமிக்க ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரின் அன்பையும் பக்தியையும் வெளிக்காட்டும் அறிக்கை ஆகும். ஆம், நம் சகோதர சகோதரிகள் செய்துள்ள தியாகங்களை உன்னிப்பாய் கவனிக்க இது உதவுகிறது; அதோடு, அவர்கள் நற்செய்தியை “பூமியின் கடைசிபரியந்தமும்” பிரசங்கிப்பதற்கு தங்களுடைய சக்தியையும் வளங்களையும் செலவிட்டிருப்பதையும் இது காட்டுகிறது. (அப். 1:8) அவர்கள் செய்துள்ள தியாகங்கள் பெரியவையாக இருந்தாலும் சரி சிறியவையாக இருந்தாலும் சரி, அவை யெகோவா தேவனுக்கும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுக்கும் மிகவும் அருமையானவை. (சங். 50:14; லூக். 21:1-4) உயிர்காக்கும் இந்த வேலையை ‘தேவன் தந்தருளும் பெலத்தினால்’ மட்டுமே செய்ய முடியும் என்பதையும் இந்த வருடாந்தர அறிக்கை நமக்கு நினைப்பூட்டுகிறது. (1 பே. 4:11) ஆகவே, இந்த அறிக்கையையும், அதைத் தொடர்ந்து வரும் அனுபவங்களையும் நீங்கள் தியானித்துப் பார்க்கையில் ‘கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுவீர்களாக.’—எபே. 6:10.
2007 மொத்த எண்ணிக்கை
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 113
அறிக்கை செய்யும் நாடுகள்: 236
சபைகள்: 1,01,376
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள்: 1,76,72,443
நினைவு ஆசரிப்பில் பங்கெடுத்தவர்கள்: 9,105
ராஜ்ய சேவையில் பிரஸ்தாபிகளின் உச்சநிலை: 69,57,854
பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 66,91,790
2006-ஐ விட சதவிகித அதிகரிப்பு: 3.1
முழுக்காட்டப்பட்டவர்கள்: 2,98,304
துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 3,12,741
பயனியர்களின் மாதாந்தர சராசரி: 6,78,638
ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 143,17,61,554
பைபிள் படிப்புகளின் மாதாந்தர சராசரி: 65,61,426
2007 ஊழிய ஆண்டில், விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 121 மில்லியன் டாலருக்கும் மேலாக செலவிட்டார்கள்.
◼ உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களில் மொத்தம் 19,581 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் அடங்கிய உலகளாவிய அணியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
[பக்கம் 32-39-ன் அட்டவணை]
யெகோவாவின் சாட்சிகளுடைய 2007 ஊழிய ஆண்டு அறிக்கை
(பிரசுரத்தைக் காண்க)
[பக்கம் 40-42-ன் தேசப்படங்கள்]
(பிரசுரத்தைக் காண்க)