உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்—2008 மொத்த எண்ணிக்கை
உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்—2008 மொத்த எண்ணிக்கை
கடவுளாகிய யெகோவாவைப் பற்றி மக்கள் கற்றுக்கொண்டு அவரை நேசிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் கடினமாய் உழைத்து வருகிறார்கள்; இதைப் பற்றி ஒவ்வொரு வருடமும் இந்தப் புத்தகத்திலிருந்து நாம் வாசிக்கிறோம். முன்னொருபோதும் இல்லாதளவுக்கு இந்த வேலை இப்போது அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஒரு நிறுவனம் ஏதோவொரு செய்தியைச் சர்வதேச அளவில் அறிவிக்க வேண்டுமென்றால், லட்சக்கணக்கான மக்களைச் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்த வேண்டியிருக்கும்; அது கட்டுப்படி ஆகாது என்பதால் எந்தவொரு நிறுவனமும் அவ்வாறு செய்வதில்லை. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் காசுபணம் எதையும் எதிர்பார்க்காமல் பைபிள் சார்ந்த கல்விபுகட்டும் வேலையைச் செய்து வருகிறார்கள். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு தமது சீடர்களுக்குக் கொடுத்த அறிவுரையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். (மத். 10:8) கடந்த ஊழிய ஆண்டில் செய்யப்பட்டிருக்கும் வேலைகளைச் சற்று நிதானமாய்ச் சிந்தித்துப் பாருங்கள்; இவையெல்லாம், சுய லாபத்திற்காகச் செய்யப்பட்டவை அல்ல, மனமுவந்து செய்யப்பட்டவை என்பதை அறிந்து அசந்துபோவீர்கள். அதோடு, கடவுள் காட்டிய அன்புக்குக் கைமாறாகச் செய்யப்பட்டவை என்பதை அறிந்து பூரித்துப்போவீர்கள்.
2008 மொத்த எண்ணிக்கை
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 115
அறிக்கை செய்யும் நாடுகள்: 236
சபைகள்: 1,03,267
நினைவு அனுசரிப்புக்கு வந்திருந்தவர்கள்: 1,77,90,631
நினைவு அனுசரிப்பில் பங்கெடுத்தவர்கள்: 9,986
ராஜ்ய சேவையில் பிரஸ்தாபிகளின் உச்சநிலை: 71,24,443
பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 68,29,455
2007-ஐ விட சதவீத அதிகரிப்பு: 2.1
ஞானஸ்நானம் பெற்றவர்கள்: 2,89,678
துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 3,21,986
பயனியர்களின் மாதாந்தர சராசரி: 7,32,912
ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 148,86,58,249
பைபிள் படிப்புகளின் மாதாந்தர சராசரி: 71,33,760
2008 ஊழிய ஆண்டில், விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 141 மில்லியன் டாலருக்கும் மேலாகச் செலவிட்டார்கள்.
◼ உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களில் மொத்தம் 19,820 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் ஆவர்.
[பக்கம் 32-39-ன் அட்டவணை]
யெகோவாவின் சாட்சிகளுடைய 2008 ஊழிய ஆண்டு அறிக்கை
(பிரசுரத்தைக் காண்க)
[பக்கம் 40-42-ன் தேசப்படங்கள்]
(பிரசுரத்தைக் காண்க)