Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்—2009 மொத்த எண்ணிக்கை

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்—2009 மொத்த எண்ணிக்கை

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்​—2009 மொத்த எண்ணிக்கை

யெகோவா தம்முடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அரும்பெரும் பரிசாக எங்குமுள்ள மக்களுக்குக் கொடுக்கிறார். யெகோவாவை நேசிக்கிறவர்களும் அந்தப் பரிசை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்களுமான நாம், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். அப்படிப் பகிர்ந்துகொள்ளும்போது, அந்தப் பரிசைக் கொடுத்தவரையும் அதை ஏற்றுக்கொள்கிறவர்களையும் மகிழ்விக்கிற சந்தோஷத்தை ருசிக்கிறோம். நற்செய்தியை அறிவிப்பது உண்மையில், கடவுளிடமும் சக மனிதரிடமும் உள்ள அன்பை வெளிக்காட்டுவதற்கான வழியாக இருக்கிறது. (மத். 22:37-40) யெகோவாவின் மக்கள் உலகெங்கும் நற்செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் அறிவிப்பதன் மூலம் அந்த அன்பை எப்படிக் காட்டுகிறார்கள் என்பதை இனிவரும் பக்கங்களில் வாசித்துப் பாருங்கள்.

2009 மொத்த எண்ணிக்கை

யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 118

அறிக்கை செய்யும் நாடுகள்: 236

சபைகள்: 1,05,298

நினைவு அனுசரிப்புக்கு வந்திருந்தவர்கள்: 1,81,68,323

நினைவு அனுசரிப்பில் பங்கெடுத்தவர்கள்: 10,857

பிரஸ்தாபிகளின் உச்சநிலை: 73,13,173

பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 70,46,419

2008-ஐவிட சதவீத அதிகரிப்பு: 3.2

ஞானஸ்நானம் பெற்றவர்கள்: 2,76,233

துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 3,04,551

பயனியர்களின் மாதாந்தர சராசரி: 7,94,317

ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 155,77,88,344

பைபிள் படிப்புகளின் மாதாந்தர சராசரி: 76,19,270

2009 ஊழிய ஆண்டில், விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 140 மில்லியன் டாலருக்கும் மேலாகச் செலவிட்டார்கள்.

◼ உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களில் மொத்தம் 19,829 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் ஆவர்.

[பக்கம் 32-39-ன் அட்டவணை]

யெகோவாவின் சாட்சிகளுடைய 2009 ஊழிய ஆண்டு அறிக்கை

(பிரசுரத்தைக் காண்க)

[பக்கம் 40-42-ன் தேசப்படங்கள்]

(பிரசுரத்தைக் காண்க)