இந்தச் சிற்றேட்டின் நோக்கம்
இந்தச் சிற்றேட்டின் நோக்கம்
டச்சு நாட்டு தத்துவஞானி ஸ்பினோசா எழுதினார்: “மனிதரின் செயல்களைப் பார்த்து நகைக்கவோ, அவற்றைப் பார்த்து அழவோ அல்லது அவற்றை வெறுக்கவோ செய்யாமல் அவற்றைப் புரிந்துகொள்ளவே நான் முயற்சி செய்துவந்திருக்கிறேன்.” ஒரு கல்வியாளராக, உங்கள் பொறுப்பில் இருக்கும் மாணவர்களின் கருத்துக்களையும் பின்னணிகளையும் நம்பிக்கைகளையும் புரிந்துகொள்ளும் சவாலை நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள். இவர்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளாக இருக்கும் மாணவர்களும் அடங்குவர். சில சமயங்களில், இத்தகைய மாணவர்கள் ஒருசில விஷயங்களின்பேரில் வழக்கத்துக்கு மாறானதாக தோன்றும் நிலைநிற்கையை எடுக்கக்கூடும். ஆனால் இப்படிப்பட்ட செயல்கள் சந்தேகமில்லாமல் ஒரு மாணவரின் மத மற்றும் தார்மீக நம்பிக்கைகளின் காரணமாக இருக்குமேயானால் அவை உங்கள் கவனத்தைப் பெற தகுதியுள்ளவையாக இருக்கின்றன. இந்தச் சிற்றேடு (யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரிக்கும் ஏஜென்ஸியான) உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியினால் தயாரிக்கப்பட்டு, சாட்சி மாணவர்களை நல்ல விதமாக புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவிசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கவனமாக வாசிக்க நீங்கள் நேரமெடுத்துக்கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மற்றவர்களின் மத நம்பிக்கைகளைப் புரிந்துகொள்வதானது நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவோ பின்பற்றவோ வேண்டும் என்பதை தேவைப்படுத்துவதில்லை. தகவல் அளிப்பது மதமாற்றம் செய்வதையும் அர்த்தப்படுத்துவதில்லை. இந்தச் சிற்றேடு சாட்சிகளுடைய மத கருத்துக்களை உங்கள் மீதோ உங்கள் மாணவர்கள் மீதோ திணிக்க முற்படுவதில்லை. நீங்கள் சாட்சி பிள்ளைகளைப் புரிந்துகொள்வதையும் அவர்களோடு ஒத்துழைப்பதையும் சுலபமாக காணும்பொருட்டு உங்கள் மாணவர்களில் சிலருக்கு அவர்களுடைய பெற்றோர் கற்பித்துவரும் நியமங்களையும் நம்பிக்கைகளையும் குறித்து உங்களுக்கு தெரிவிப்பது மாத்திரமே எங்கள் ஆசையாக உள்ளது. நிச்சயமாகவே ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய சொந்த மனச்சாட்சியை வளர்த்துக்கொள்ள கற்றுவருவதால் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படுகிறவையும் அவர்கள் செய்யும் காரியங்களும் எப்பொழுதுமே இணக்கமாக இல்லாமல் இருக்கலாம்.
பெரும்பாலான பெற்றோரைப் போலவே, தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய பள்ளிப்படிப்பிலிருந்து மிகச் சிறந்த பயனை அடையவேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் விரும்புகின்றனர். அதன் காரணமாக, அவர்களுடைய ஆசிரியர்களோடு ஒத்துழைக்கும்படியாக தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கிறார்கள். பிரதிபலனாக, கல்வியாளர்கள் அவர்களைப் புரிந்துகொள்ளுதலோடும் மரியாதையோடும் நடத்தும்போது சாட்சி பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் அதைப் போற்றுகிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் அறியப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள். இருப்பினும் சில சமயங்களில் அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். ஆகவே உங்கள் பொறுப்பிலிருக்கும் சாட்சி பிள்ளைகளை நல்ல விதமாக நீங்கள் புரிந்துகொள்ள, இந்தச் சிற்றேடு உங்களுக்கு உதவிசெய்யும் என்பது எங்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக, சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் சாட்சி பிள்ளைகள் வித்தியாசமாக இருப்பதற்குரிய உரிமையை ஏன் வற்புறுத்தக்கூடும் என்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: பார்வோன்: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck. பின் அட்டை: பிரமிடுகள்: The Pictorial History of the World புத்தகத்திலிருந்து; வண்ணத்துப்பூச்சி: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck