கல்விபுகட்டும் திட்டங்கள்
கல்விபுகட்டும் திட்டங்கள்
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பைபிள் கல்வி புகட்டும் வேலைக்காக உலகம் முழுவதிலும் அறியப்பட்டிருக்கின்றனர்.
பைபிள் கல்விபுகட்டும் வேலைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக, அவர்களுக்கு உலகப்பிரகாரமான கல்வியில் அக்கறை இல்லை என்பதாக சிலர் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கு, ஒரு ஆசிரியர் முதலில் கற்க வேண்டும்; இது சரியான பயிற்றுவிப்பையும் போதனையையும் தேவைப்படுத்துகிறது. ஆகவே உலகப்பிரகாரமான பள்ளிப் படிப்பை நல்ல விதமாக பயன்படுத்திக்கொள்வதோடுகூட, யெகோவாவின் சாட்சிகள்
உவாட்ச் டவர் சொஸைட்டி நடத்திவரும் பல்வேறு கல்விபுகட்டும் திட்டங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் பல வருடங்களாக நன்மையடைந்து வந்திருக்கிறார்கள். இவை மனதின் பிரகாரமாயும், ஒழுக்கப்பிரகாரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் தங்களை முன்னேற்றுவித்துக்கொள்ள சாட்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் உதவியிருக்கின்றன.உதாரணமாக, அநேக தேசங்களில் சாட்சிகள் விசேஷமான ஒரு சவாலை எதிர்ப்பட்டிருக்கின்றனர்—சரியான பள்ளிப் படிப்பை பெற்றுக்கொள்ள சிறிது வாய்ப்பே அல்லது அறவே வாய்ப்பில்லாத காரணத்தால் எவ்விதமாக வாசிப்பது மற்றும் எழுதுவது என்பதை அறிந்திராத ஆட்களுக்கு எவ்விதமாக போதிப்பது. இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, உவாட்ச் டவர் சொஸைட்டி எழுத்தறிவு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
உதாரணமாக, நைஜீரியாவில் யெகோவாவின் சாட்சிகள் எழுத்தறிவு வகுப்புகளை 1949 முதற்கொண்டு நடத்திவருகின்றனர். இதன் மூலமாக 1961-ற்குள் ஆயிரக்கணக்கான நைஜீரிய மக்கள் வாசிக்க கற்றுக்கொண்டிருக்கின்றனர்; 1962 மற்றும் 1994-க்கு இடையே மொத்தமாக 25,599 கூடுதலான முதியோர் இந்த வகுப்புகளில் வாசிக்கவும் எழுதவும் கற்பிக்கப்பட்டிருக்கின்றனர் என கிடைக்கக்கூடிய பதிவுகள் காண்பிக்கின்றன. நைஜீரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் எழுத்தறிவுள்ளவர்களாக இருக்கையில் மீதமுள்ள ஜனத்தொகையினரில் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே எழுத்தறிவுள்ளவர்களாக இருப்பதை சமீப கால சுற்றாய்வு ஒன்று காண்பித்தது. மெக்ஸிகோவில், உவாட்ச் டவர் சொஸைட்டி 1946 முதற்கொண்டு எழுத்தறிவு வகுப்புகளை நடத்திவந்திருக்கிறது. 1994-ன் போது, 6,500-க்கும் மேலான ஆட்கள் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கப்பட்டனர். 1946 மற்றும் 1994-க்கு இடையே 1,27,000-க்கும் மேலானவர்கள் எழுத்தறிவுள்ளவர்களாக ஆவதற்கு உதவப்பட்டிருக்கின்றனர். பொலிவியா, காமரூன், ஹாண்டுராஸ் மற்றும் ஜாம்பியா போன்ற மற்ற அநேக தேசங்களிலும்கூட எழுத்தறிவு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இத்தகைய எழுத்தறிவு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நாடுகளில் அநேகமாக இவை கல்வித்துறை அதிகாரிகளால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மெக்ஸிகோவில் அரசு அதிகாரி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “உங்கள் ஒத்துழைப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், எழுத்தறிவில்லாதவர்களுக்கு அறிவொளியைக் கொண்டுவருவதில் ஜனங்களின் நன்மைக்காக நீங்கள் செய்துவரும் சிறப்பான முன்னேற்ற வேலைக்காக மாநில அரசு சார்பாக மிகவும் உளங்கனிந்தப் பாராட்டுக்களை நான் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். . . . கல்விபுகட்டும் வேலையில் உங்கள் வெற்றிக்கு என்னுடைய ஆசிகள்.”
தேவராஜ்ய ஊழியப் பள்ளி
தங்கள் பைபிள் கல்விபுகட்டும் வேலைக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுப்பதன் காரணமாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிள் போதனைகளை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவதற்கான தங்களுடைய திறமையை முன்னேற்றுவித்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். இவ்விதமான உதவியை அளிப்பதற்கு, உலகம் முழுவதிலுமுள்ள 75,000-க்கும் மேலான சபைகள் ஒவ்வொன்றிலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்றழைக்கப்படும் ஒரு கூட்டம் வாரந்தோறும் நடத்தப்படுகிறது. சாட்சிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்பள்ளியில் பெயர் கொடுத்திருக்கும் அனைவரும், ஏற்கெனவே தெரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு தலைப்பின்பேரில் தங்கள் முறை வரும்போது சுருக்கமான ஒரு அளிப்பை பார்வையாளர் முன் கொடுக்கின்றனர். அதன்பின் அவர்களுடைய வயது என்னவாயிருப்பினும், மாணவர்கள் பொது வாசிப்பு மற்றும் பேச்சு திறமைகளில் பயிற்றுவிக்கப்படும் நோக்கத்துக்காக போதனையாளரிடமிருந்து ஆலோசனைப் பெற்றுக்கொள்கின்றனர். மிகச் சிறியவர்களும்கூட, வாசிக்க கற்றுக்கொண்ட உடனே, பெயர்களைப் பதிவு செய்துகொண்டு
இந்தப் பயிற்சியைப் பெறலாம்; இது அவர்களுடைய உலகப்பிரகாரமான பள்ளிப் படிப்பு உட்பட மற்றத் துறைகளிலும்கூட அவர்களுக்குப் பயனுள்ளதாக நிரூபிக்கிறது. சாட்சி மாணவர்கள் தங்கள் கருத்துக்களை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் அநேகர் சொல்லியிருக்கின்றனர்.மேலுமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒவ்வொரு சபையும், அதனுடைய ராஜ்ய மன்றம் அல்லது கூடுமிடத்தில் பைபிள் படிப்பு உதவி புத்தகங்கள், அகராதிகள் மற்றும் பிற நோக்கீட்டுப் புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகத்தைக் கொண்டிருக்க உற்சாகப்படுத்தப்படுகிறது. ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு வரும் அனைவரும் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களுடைய சபைகளினுள்ளே வாசிப்பது மனமார ஊக்குவிக்கப்படுகிறது; அதேவிதமாக ஒவ்வொரு குடும்பமும், பிள்ளைகள் மற்றும் பெரியவர்களின் தேவைகளுக்கேற்ப
பல்வேறு வித்தியாசமான பிரசுரங்களைக் கொண்ட ஒரு குடும்ப நூலகத்தைக் கொண்டிருக்கும்படியாக உற்சாகப்படுத்தப்படுகிறது.மற்ற பள்ளிகள்
உவாட்ச் டவர் சொஸைட்டி, ஆண்களையும் பெண்களையும் மிஷனரிகளாகப் பயிற்றுவிப்பதற்கும் பள்ளிகளை நடத்திவருகிறது, உள்ளூர் சபைகளில் ஊழியப் பொறுப்புகளிலுள்ள ஆண்களைப் பயிற்றுவிப்பதற்கும் பள்ளிகளை நடத்திவருகிறது. யெகோவாவின் சாட்சிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள் என்பதற்கு இந்தப் பள்ளிகள் கூடுதலான அத்தாட்சியாக இருக்கின்றன.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
அவர்களுடைய சபைகளினுள்ளே வாசிப்பது மனமார ஊக்குவிக்கப்படுகிறது, அதேவிதமாக ஒவ்வொரு குடும்பமும் பல்வேறு வித்தியாசமான பிரசுரங்களைக் கொண்ட ஒரு குடும்ப நூலகத்தைக் கொண்டிருக்கும்படியாக உற்சாகப்படுத்தப்படுகிறது
[[பக்கம் 12-ன் படம்]
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணவர்கள் பொது வாசிப்பிலும் பேசும் திறமையிலும் பயிற்றுவிப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள்