Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முடிவுரை

முடிவுரை

முடிவுரை

யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா மத நம்பிக்கைகளையும் விரிவாக கலந்தாலோசிப்பது இந்தச் சிற்றேட்டின் நோக்கமல்ல. மாறாக, சாட்சிகள் நம்பும் சில நியமங்களை விளக்கவும், பெற்றோரில் ஒருவரோ இரண்டுபேருமோ சாட்சிகளாக இருக்கையில் என்னவிதமான குடும்ப செல்வாக்குகள் உங்கள் மாணவரைப் பாதிக்கின்றன என்பதை தெளிவாக காண்பிக்கவுமே நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம்.

யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சியின்பேரில் அதிக முக்கியத்துவத்தை வைக்கிறார்கள். மற்ற காரியங்களில் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை இது மேம்படுத்தும் என்பதைக் குறித்து அவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கைகளும், அவர்கள் பின்பற்றும் நியமங்களும் அவர்களுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி அன்றாட பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகின்றன. கூடுதலாக அந்த நம்பிக்கைகளும் நியமங்களும் அவர்களை வாழ்க்கை முழுவதுமாக ஆர்வமுள்ள மாணவர்களாகவும் நல்ல குடிமக்களாகவும் இருக்கும்படி முயற்சிக்க தூண்டவேண்டும்.

சாட்சிகள் வாழ்க்கையைக் குறித்து யதார்த்தமாக இருக்க முயற்சிசெய்கிறார்கள், எனவே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களால் முடிந்தவரை மிகச் சிறந்த விதமாக உங்களுடன் ஒத்துழைக்கவேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமாக இருக்கிறது. அவர்கள் பங்கில், பூமியெங்கும் வீடுகளிலும் வணக்கத்திற்கான இடங்களிலும் இந்தப் பலன்தரும் கூட்டுமுயற்சியில் பிள்ளைகள் தங்கள் பங்கைச் செய்யும்படி அவர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்துவார்கள்.