யெகோவாவின் சாட்சிகள் கல்வியை எவ்வாறு கருதுகிறார்கள்
யெகோவாவின் சாட்சிகள் கல்வியை எவ்வாறு கருதுகிறார்கள்
எல்லா பெற்றோரையும் போலவே, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். “சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினர்களாவதற்கு கல்வி மக்களுக்கு உதவி செய்யவேண்டும். தங்களுடைய கலாச்சார பாரம்பரியத்துக்குப் போற்றுதலை வளர்த்துக்கொள்ளவும் அதிக திருப்தியான வாழ்க்கையை வாழ்வதற்கும்கூட அது அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.”
தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்ட இந்த மேற்கோள் குறிப்பிடும் விதமாகவே, அன்றாட வாழ்க்கைக்குப் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதே கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இது என்றாவது ஒரு நாள் ஒரு குடும்பத்தின் தேவைகளைப் பராமரிப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்வதையும் உட்படுத்துகிறது. இது ஒரு புனிதமான பொறுப்பு என்பதாக யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். பைபிள்தானே இவ்வாறு சொல்கிறது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) பள்ளியில் செலவிடப்படும் ஆண்டுகள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்கவிருக்கும் பொறுப்புகளுக்கு அவர்களைத் தயார் செய்கின்றன. ஆதலால், கல்வி மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதாக சாட்சிகள் கருதுகிறார்கள்.
சாட்சிகள் பின்வரும் பைபிள் கட்டளைக்கு இசைவாக வாழ முயற்சிசெய்கிறார்கள்: “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:24) பள்ளி உட்பட அனுதின வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் இந்த நியமம் பொருந்துகிறது. இதன் காரணமாக ஊக்கமாக படிக்கும்படியும், பள்ளியில் கொடுக்கப்படும் வேலைகளைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளும்படியும் சாட்சிகள் தங்கள் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.
ஒருவர் வாழ்ந்துவரும் தேசத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருக்கும்படியும்கூட பைபிள் போதிக்கிறது. ஆகவே குறிப்பிட்ட ஒரு வயதுவரையாக, பள்ளியில் கற்பது கட்டாயமானதாக இருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் இந்தச் சட்டத்துக்கு உடன்படுகிறார்கள்.—ரோமர் 13:1-7.
அனுதின வாழ்க்கைக்காக பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக்கூறாத அதேசமயத்தில், இதுவே கல்வியின் ஒரே இலக்காகவோ முக்கிய இலக்காகவோ இல்லை என்பதை பைபிள் காட்டுகிறது. வெற்றிகரமான ஒரு கல்வி, வாழ்வதிலிருக்கும் சந்தோஷத்தைப் பிள்ளைகளில் வளர்த்து, நல்ல சமநிலையுள்ள நபர்களாக சமுதாயத்தில் அவர்களுடைய இடத்தை ஏற்க அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். இதன் காரணமாக, வகுப்பறைக்கு வெளியே தெரிந்துகொள்ளப்படும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றனர். ஆரோக்கியமான பொழுதுபோக்கு, இசை, விருப்பவேலைகள், உடற்பயிற்சி, நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு விஜயம் ஆகியவை சமநிலையுள்ள கல்வியில் முக்கியமான பங்கை வகிக்கின்றன என்பதை அவர்கள் நம்புகிறார்கள். மேலுமாக, வயதில் பெரியவர்களை மதிப்பதற்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனர்.
துணைக் கல்வியைப் பற்றி என்ன?
புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக, வேலை சந்தை எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக அநேக இளைஞர் திட்டவட்டமான பயிற்சியைப் பெற்றில்லாத துறைகளில் அல்லது தொழில்களில் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கும். நிலைமை அவ்வாறு இருப்பதன் காரணமாக, அவர்களுடைய வேலைப் பழக்கங்களும், தனிப்பட்ட பயிற்சியும் குறிப்பாக மாற்றத்துக்கு தக்கவாறு அமைத்துக்கொள்ளும் திறமையும் அவர்களுக்கு இன்னும்
அதிக மதிப்புள்ளவையாக இருக்கும். ஆதலால், மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த கட்டுரையாளர் மான்டேன் சொன்ன விதமாக, மாணவர்கள் ‘நன்றாக நிரப்பப்பட்ட மூளைக்குப் பதிலாக நன்றாக உருபடுத்தப்பட்ட மூளையைக்’ கொண்டிருக்கும் பெரியவர்களாவதே மேலானதாகும்.பணக்கார நாடுகளையும் ஏழை நாடுகளையும் பாதித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், போதியளவு தகுதி பெற்றிராத இளைஞர்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே சட்டம் தேவைப்படுத்தும் குறைந்தப்பட்சத்திற்கும் கூடுதலான பயிற்சியை வேலைச் சந்தையானது தேவைப்படுத்தினால், துணைக் கல்வியைக் குறித்து ஒரு தீர்மானத்தைச் செய்வதில் பிள்ளைகளை வழிநடத்துவது பெற்றோரின் பொறுப்பாகும். இப்படிப்பட்ட கூடுதலான படிப்பு கொண்டுவரக்கூடிய நன்மைகளையும், அது உட்படுத்தக்கூடிய தியாகங்களையும் அவர்கள் தீர சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
இருப்பினும் வாழ்க்கையில் வெற்றி என்பது வெறும் பொருளாதார செழுமையைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்பதை நீங்கள் ஒருவேளை ஒப்புக்கொள்வீர்கள். சமீப காலங்களில் தங்கள் வாழ்நாள் முழுவதிலும் வாழ்க்கைத் தொழிலிலேயே மூழ்கிவிட்டிருந்த ஆண்களும் பெண்களும் தங்கள் வேலைகளை இழந்துவிட்டபோது, எல்லாவற்றையும் இழந்துபோனார்கள். சில பெற்றோர் தங்கள் குடும்ப வாழ்க்கையையும் தங்களுடைய பிள்ளைகளோடு செலவிட்டிருக்கக்கூடிய நேரத்தையும் தியாகம் செய்துவிட்டு, வேலைப்பித்தர்களாக இருந்த காரணத்தால், தங்கள் பிள்ளைகள் முதிர்ச்சியுள்ளவர்களாக வளருவதற்கு உதவிசெய்யும் வாய்ப்பை இழந்துவிட்டிருக்கிறார்கள்.
தெளிவாகவே, நம்மை உண்மையில் சந்தோஷமுள்ளவர்களாக்குவதற்கு பொருளாதார செழுமையைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுவதை சமநிலையுள்ள ஒரு கல்வி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து சொன்னார்: “மனுஷன் மத்தேயு 4:4) கிறிஸ்தவர்களாக, தார்மீக மற்றும் ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்வதனுடைய முக்கியத்துவத்தையும் தங்கள் பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக தயாரித்துக்கொள்வதனுடைய முக்கியத்துவத்தையும் யெகோவாவின் சாட்சிகள் போற்றுகிறார்கள்.
அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” ([பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:24
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினர்களாவதற்கு கல்வி மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும். தங்களுடைய கலாச்சார பாரம்பரியத்துக்குப் போற்றுதலை வளர்த்துக்கொள்ளவும் அதிக திருப்தியான வாழ்க்கையை வாழ்வதற்கும்கூட அது அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.”—தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா
[[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
ஆரோக்கியமான பொழுதுபோக்கு, இசை, விருப்பவேலைகள், உடற்பயிற்சி, நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு விஜயம் ஆகிய அனைத்தும் சமநிலையுள்ள கல்வியில் முக்கியமான பங்கை வகிக்கின்றன
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]
பைபிள் காலங்களில் கல்வி
கல்வி அதிக முக்கியத்துவமுள்ளது என்பதாக பைபிள் போதிக்கிறது. அது, கடவுளை தம்முடைய ஜனத்தின் “மகத்தான போதகர்” என்பதாக வருணிக்கிறது, அதனுடைய பக்கங்கள் முழுவதிலும் அவரைப் பற்றிய அறிவில் பெருகும்படியாக அவருடைய ஊழியர்களுக்கு அழைப்புவிடுக்கிறது.—ஏசாயா 30:20, NW.
பைபிள் காலங்களில், மெசபொத்தோமியா மற்றும் எகிப்திலிருந்த வேதபாரகர் போன்ற சலுகைப்பெற்ற குறிப்பிட்ட சில சமூகத்தினர் மாத்திரமே கல்வியறிவுள்ளவர்களாக இருந்தனர். இதற்கு நேர் எதிர்மாறாக, பண்டைய இஸ்ரவேலில் அனைவருமே எழுத, படிக்க கற்றுக்கொள்ளும்படியாக உற்சாகப்படுத்தப்பட்டனர். “எபிரெயர் எளிமையான அகரவரிசை எழுத்துமுறையைப் பயன்படுத்தியதே வித்தியாசத்துக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. . . . கல்வியின் வரலாற்றில் அகரவரிசை எழுத்துமுறையின் முக்கியத்துவத்தை அசட்டை செய்துவிடக்கூடாது. இது எகிப்து, மெசபொத்தோமியா மற்றும் இரண்டாம் ஆயிரமாண்டின் கானான் ஆகியவற்றின் பாரம்பரிய வேதபாரக கலாச்சாரத்திற்கு ஒரு திடீர் மாற்றத்தைக் கொண்டுவந்தது. கல்வியறிவுடையவர்களாக இருப்பது, இனிமேலும் எளிதில் அறியமுடியாத ஆப்பு வடிவ எழுத்துக்கள் மற்றும் பொருள்வடிவ எழுத்து முறையை நன்குணர்ந்த தேர்ச்சிபெற்ற வேதபாரகர் மற்றும் ஆசாரிய வகுப்பின் அடையாளமாகவும் பிரத்தியேகமான சிறப்புப்பண்பாகவும் இருக்கவில்லை.”—என்ஸைக்ளோப்பீடியா ஜூடேயிக்கா.
போதனா முறைகள்
பூர்வ இஸ்ரவேலில் பிள்ளைகள் சின்னஞ்சிறு வயது முதற்கொண்டே தாய், தந்தை ஆகிய இருவராலும் போதிக்கப்பட்டனர். (உபாகமம் 11:19, 20; நீதிமொழிகள் 1:8; 31:26) டிக்ஸியோநார் டி லா பெபெல்-ல் பைபிள் கல்விமான் ஈ மான்ஸனோ எழுதினார்: “பேச ஆரம்பித்தவுடனே, பிள்ளை நியாயப்பிரமாணத்திலிருந்து ஒருசில பகுதிகளைக் கற்றுக்கொண்டான். அவனுடைய தாய் ஒரு வசனத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவாள்; அதை அவன் தெரிந்துகொண்ட பின்னர் அவள் அவனுக்கு மற்றொரு வசனத்தைக் கொடுப்பாள். பின்னர், மனப்பாடமாக அவர்கள் ஏற்கெனவே கற்றிருந்த வசனங்கள் எழுதப்பட்டு பிள்ளைகளின் கைகளில் கொடுக்கப்படும். இவ்விதமாக வாசிப்பு அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னர் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை வாசிப்பதன் மூலமும் தியானிப்பதன் மூலமும் தொடர்ந்து மதசம்பந்தமான போதனையைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள்.”
நினைவில் வைக்க இளைஞருக்கும் முதியோருக்கும் உதவிசெய்வதற்கு பல்வேறு மனப்பாட ஏதுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில், அகரவரிசை கரந்துறை பாட்டு (alphabetic acrostics) (ஒரு செய்யுளில் அடுத்தடுத்துவரும் வரிகள் அகரவரிசையில் வித்தியாசமான ஓர் எழுத்தில் துவங்குவது), எதுகைமோனை, எண்களின் உபயோகம் போன்றவை அடங்கும். மிகப் பண்டைய எபிரெய எழுத்தின் உதாரணமாக இருக்கும் கீஸர் நாட்காட்டியை
(இஸ்தான்புல் புதைப்பொருள் ஆய்வு அருங்காட்சியகம்) ஒரு பள்ளி பையனின் மனப்பாட பயிற்சியாக ஒருசில கல்விமான்கள் கருதுவது அக்கறையூட்டுவதாக உள்ளது.பாடத்திட்டம்
பைபிள் காலங்களில் பெற்றோர் அளித்த கல்வி நடைமுறை பயிற்சியையும் உட்படுத்தியது. பெண்பிள்ளைகளுக்கு வீட்டுவேலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இவை மிகப்பலவாகவும் பல்வகைப்பட்டவையாகவும் இருந்ததாக நீதிமொழிகள் புத்தகத்தின் கடைசி அதிகாரம் காண்பிக்கிறது; அவற்றில் வீட்டுமனை வாங்கல்விற்றல், சிறு தொழில் நடத்துதல் ஆகியவற்றோடுகூட நூற்றல், நெய்தல், சமைத்தல், வியாபாரம் செய்தல் மற்றும் பொதுவான வீட்டு நிர்வாகம் ஆகியவையும் உட்பட்டிருந்தன. ஆண்பிள்ளைகளுக்குப் பிழைப்புக்காக தந்தை செய்யும் வேலையான வேளாண்மையோ ஏதோவொரு தொழிலோ கைத்தொழிலோ பொதுவாக கற்றுக்கொடுக்கப்பட்டது. யூதர்களின் மத வட்டாரங்களில், பின்வருமாறு சொல்வது வழக்கமாயிருந்தது: “பிரயோஜனமான ஒரு தொழிலைத் தன் மகனுக்கு கற்பிக்காதவன் அவனை ஒரு திருடனாக வளர்க்கிறான்.”
இவ்விதமாக பைபிள் காலங்களில், கல்வி மிக உயர்வாக மதிக்கப்பட்டது.
[படத்திற்கான நன்றி]
பள்ளிச் சிறுவனின் பலகைத்துண்டு: பிரிட்டிஷ் நூலகத்தின் அனுமதியுடன்; சுருள்: Bibelmuseum, Münster
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
Galleria degli Uffizi, Firenze