Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்களது உலகளாவிய அமைப்பும் வேலையும்

அவர்களது உலகளாவிய அமைப்பும் வேலையும்

அவர்களது உலகளாவிய அமைப்பும் வேலையும்

இப்பொழுது 235-க்கும் மேற்பட்ட நாடுகளில் சாட்சி கொடுக்கும் வேலையை வழிநடத்துவதற்கு சங்கிலி போன்ற பல்வேறு தொடர்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நியூ யார்க், புரூக்லினில் உள்ள உலக தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஆளும் குழுவிலிருந்து வழிநடத்துதல் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பிரதிநிதிகளை ஆளும் குழு அனுப்பி வைப்பதன் மூலம் அங்குள்ள கிளை அலுவலக பிரதிநிதிகளோடு தொடர்பு கொள்கிறது. கிளை அலுவலகங்களில் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாடுகளில் நடைபெறும் வேலையை மேற்பார்வையிட மூன்றிலிருந்து ஏழு பேர் கொண்ட கிளை அலுவலக குழுக்கள் உள்ளன. இந்தக் கிளை அலுவலகங்களில் சில, அச்சக வசதி கொண்டவை; சில அதிவேக ரோட்டரி அச்சு இயந்திரங்கள் உடையவை. ஒவ்வொரு கிளை அலுவலகத்தின் கீழுள்ள நாடு அல்லது பிராந்தியம் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும் சுமார் 20 சபைகள் உள்ளன. மாவட்டக் கண்காணி தன்னுடைய மாவட்டத்திலுள்ள வட்டாரங்களை சுற்றுமுறையில் சந்திக்கிறார். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆண்டுதோறும் இரண்டு அசெம்பிளிகள் நடத்தப்படுகின்றன. ஒரு வட்டாரக் கண்காணியும் இருக்கிறார். இவர் தன்னுடைய வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் பொதுவாக வருடத்தில் இருமுறை சந்திக்கிறார்; பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதிலும் சபைக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் அந்த வேலையை செய்வதிலும் சாட்சிகளுக்கு உதவுகிறார்.

ராஜ்ய மன்றத்தைக் கொண்ட உள்ளூர் சபை உங்கள் சமுதாயத்தில் நற்செய்தியை அறிவிக்கும் மையமாக விளங்குகிறது. ஒவ்வொரு சபைக்கும் ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிறு பிராந்தியங்களாக வரைபடத்தில் பிரிக்கப்படுகின்றன. இவை அங்குள்ள ஒவ்வொரு வீட்டாரையும் சந்தித்துப் பேசும் தனிப்பட்ட சாட்சிகளுக்கு நியமிக்கப்படுகின்றன. சில சாட்சிகள் முதல் சுமார் 200 சாட்சிகள் வரை உள்ள ஒவ்வொரு சபையிலும் பல்வேறு பொறுப்புக்களைக் கவனிப்பதற்கு மூப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நற்செய்தியை அறிவிக்கும் தனிப்பட்ட நபர்களே யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பில் முக்கியமானவர்கள். உலக தலைமை அலுவலகத்தில், கிளை அலுவலகங்களில், அல்லது சபைகளில் என எங்கு சேவை செய்தாலும்சரி, ஒவ்வொரு சாட்சியும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தனிப்பட்ட விதமாக மற்றவர்களுக்கு அறிவிக்கும் இந்த வெளி ஊழியத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த ஊழியத்தைப் பற்றிய அறிக்கைகள் கடைசியில் உலக தலைமை அலுவலகத்தை வந்தடைகின்றன, பின்பு வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் பிரசுரிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 1 காவற்கோபுர பத்திரிகையில் ஒவ்வொரு வருடமும் ஓர் அட்டவணை பிரசுரிக்கப்படுகிறது. யெகோவாவையும் கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் அவருடைய ராஜ்யத்தையும் குறித்து ஒவ்வொரு ஆண்டும் எந்தளவு சாட்சி கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிய விவரமான அறிக்கைகளை இவ்விரண்டு பிரசுரங்களும் தருகின்றன. சமீப வருடங்களில், இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பில் ஆண்டுதோறும் சுமார் 1,50,00,000 சாட்சிகளும் ஆர்வமுள்ளோரும் ஆஜராகியிருக்கிறார்கள். நற்செய்தியை அறிவிப்பதற்கு 100,00,00,000-க்கும் அதிகமான மணிநேரத்தை யெகோவாவின் சாட்சிகள் ஓராண்டில் செலவழிக்கிறார்கள், 2,50,000-⁠க்கும் அதிகமான புதியவர்கள் முழுக்காட்டப்படுகிறார்கள். பிரசுரங்கள் கோடிக்கணக்கில் விநியோகிக்கப்படுகின்றன.