Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்களது நம்பிக்கை என்ன?

அவர்களது நம்பிக்கை என்ன?

அவர்களது நம்பிக்கை என்ன?

யெகோவாவின் சாட்சிகள் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனையே நம்புகின்றனர். நம்மை சுற்றி இந்த அண்டத்தில் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட அதிசயங்கள் இருப்பதுதானே ஈடற்ற புத்திக்கூர்மையும் வல்லமையும் மிக்க படைப்பாளர் ஒருவர் இருப்பதை நியாயமாகவே சுட்டிக்காட்டுகிறது. மனிதருடைய கிரியைகள் அவர்களுடைய பண்புகளை பறைசாற்றுவதைப் போலவே யெகோவா தேவனுடைய கிரியைகளும் அவருடைய பண்புகளைப் பறைசாற்றுகின்றன. “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பைபிள் நமக்கு சொல்கிறது. மேலும், சப்தமோ வார்த்தைகளோ இன்றி, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது.”​—ரோமர் 1:20; சங்கீதம் 19:1-4.

மட்பாண்டங்களையோ டிவி செட்டுகளையோ கம்ப்யூட்டர்களையோ ஒரு நோக்கத்துடன்தான் மக்கள் தயாரிக்கிறார்கள். பூமியும் அதிலுள்ள படைப்புகளாகிய தாவரங்களும் விலங்குகளும் அவற்றைவிட அற்புதமானவை. கோடிக்கணக்கான செல்களைக் கொண்ட மனித உடலின் அமைப்பு நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது​—⁠நாம் யோசிப்பதற்கு பயன்படும் மூளையும் நம் அறிவுக்கெட்டாத அளவு அற்புதமானது! மனிதனுடைய அற்பமான கண்டுபிடிப்புகளுக்கு ஒரு நோக்கமிருக்கிறதென்றால், நிச்சயமாகவே யெகோவா தேவனின் மலைப்பூட்டும் படைப்புகளுக்கும் ஒரு நோக்கம் இருக்கும்! அதைப் பற்றி நீதிமொழிகள் 16:4 (NW) சொல்கிறது: “யெகோவா எல்லாவற்றையும் தமது நோக்கத்திற்கென்று படைத்திருக்கிறார்.”

யெகோவா இந்தப் பூமியை ஒரு நோக்கத்துடன் படைத்தார், அதைக் குறித்து முதல் மனித ஜோடியிடம் இவ்வாறு குறிப்பிட்டார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, . . . சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) அந்தத் தம்பதியினர் கீழ்ப்படியாத காரணத்தால், பூமியையும் அதிலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் அன்புடன் பராமரிக்கும் நீதியுள்ள குடும்பங்களால் இப்பூமியை நிரப்புவதில் தோல்வியுற்றனர். ஆனால் அவர்களுடைய தோல்வி யெகோவாவின் நோக்கத்தை தோல்வியுறச் செய்யப்போவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிற்பாடு இவ்வாறு எழுதப்பட்டது: ‘பூமியை படைத்த கடவுள் அதை வெறுமையாயிருக்கச் சிருஷ்டிக்கவில்லை.’ அவர் “அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்”தார். அது அழிக்கப்படுவதில்லை, ‘பூமி என்றைக்கும் நிலைத்திருக்கிறது.’ (ஏசாயா 45:18; பிரசங்கி 1:4) பூமிக்காக யெகோவா கொண்டுள்ள நோக்கம் நிறைவேறும்; “என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்” என்று அவர் சொல்கிறார்.​—ஏசாயா 46:10.

ஆகவே பூமி என்றைக்கும் நிலைத்திருக்கும் என்றும், அழகுபடுத்தப்பட்ட பூமியில் யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக நடக்கிற எல்லாரும்​—⁠இறந்தோர் உட்பட​—⁠என்றென்றும் வாழலாம் என்றும் யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். மனிதவர்க்கத்தினர் அனைவரும் ஆதாம் ஏவாளிடமிருந்து அபூரணத்தை சுதந்தரித்திருப்பதால் பாவிகளாக இருக்கின்றனர். (ரோமர் 5:12) பைபிள் நமக்கு சொல்கிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (ரோமர் 6:23; பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4, 20) அப்படியென்றால், பூமிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு இறந்தவர்கள் எப்படி மறுபடியும் வாழ முடியும்? கிறிஸ்து இயேசுவின் மீட்கும் பலியின் மூலமாகவே அது சாத்தியமாகும், ஏனென்றால் அவர் சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” ‘பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது [அவர்கள்] . . . எழுந்து வருவார்கள்.’​—யோவான் 11:25; 5:28, 29; மத்தேயு 20:28.

இது எப்படி நடைபெறும்? அது இயேசு பூமியில் இருந்தபோது அறிவிக்க ஆரம்பித்த ‘ராஜ்யத்தினுடைய சுவிசேஷத்தில்’ விளக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 4:17-23) இன்று யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை மிகவும் விசேஷித்த முறையில் பிரசங்கித்து வருகிறார்கள்.

[பக்கம் 13-ன் அட்டவணை]

யெகோவாவின் சாட்சிகள் நம்புவது

நம்பிக்கை வேதப்பூர்வ காரணம்

பைபிள் கடவுளுடைய வார்த்தை, சத்தியம் 2 தீ. 3:16, 17; 2 பே. 1:20,21; யோவா. 17:17

பாரம்பரியத்தைவிட பைபிள் அதிக நம்பகமானது மத். 15:3; கொலோ. 2:8

கடவுளுடைய பெயர் யெகோவா சங். 83:17; ஏசா.26:4; 42:8, NW; யாத். 6:3

கிறிஸ்து கடவுளுடைய குமாரன், அவருக்கு கீழானவர் மத். 3:17; யோவா. 8:42; 14:28; யோவா.20:17;

1 கொ. 11:3; 15:28

கிறிஸ்து கடவுளுடைய படைப்புகளில் முதலானவர் கொலோ. 1:15; வெளி. 3:14

கிறிஸ்து கழுமரத்தில் மரித்தார், சிலுவையில் அல்ல கலா. 3:13; அப். 5:30

கிறிஸ்துவின் மனித ஜீவன் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்காக மத். 20:28; 1 தீ. 2:5, 6; 1 பே. 2:24

மீட்கும்பொருளாக செலுத்தப்பட்டது

கிறிஸ்துவின் ஒரே பலி போதுமானது ரோ. 6:10; எபி. 9:25-28

கிறிஸ்து மரித்தோரிலிருந்து 1 பே. 3:18; ரோ. 6:9; வெளி.1:17, 18

சாவாமையுள்ள ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்பட்டார்

கிறிஸ்துவின் பிரசன்னம் ஆவியில் இருக்கும் யோவா. 14:19; மத். 24:3, NW; 2 கொ. 5:16; சங். 110:1, 2

நாம் இப்பொழுது ‘முடிவின் காலத்தில்’ வாழ்கிறோம் மத். 24:3-14; 2 தீ 3:1-5; லூக். 17:26-30

கிறிஸ்துவின் ராஜ்யம் ஏசா. 9:6, 7; 11:1-5; தானி. 7:13, 14; மத். 6:10

பூமியை நீதியோடும் சமாதானத்தோடும் ஆளுகை செய்யும்

பூமியில் முழு நிறைவான வாழ்க்கை சூழலை சங். 72:1-4; வெளி. 7:9, 10, 13-17; 21:3, 4

ராஜ்யம் கொண்டுவரும்

பூமி ஒருபோதும் அழிக்கப்படாது குடியிருப்பார் இன்றியும் இராது பிர. 1:4; ஏசா. 45:18; சங். 78:69

தற்போதைய ஒழுங்குமுறையை அர்மகெதோன் யுத்தத்தில் வெளி. 16:14, 16; செப். 3:8; தானி. 2:44;

கடவுள் அழிப்பார் ஏசா. 34:2; 55:10, 11

பொல்லாதவர்கள் நித்தியமாக அழிக்கப்படுவர் மத். 25:41-46; 2 தெ. 1:6-10

கடவுள் அங்கீகரிக்கும் மக்கள் நித்திய ஜீவனைப் பெறுவர் யோவா. 3:16; 10:27, 28; 17:3; மாற். 10:29, 30

ஜீவனுக்குப் போக ஒரேவொரு வழிதான் இருக்கிறது மத். 7:13, 14; எபே. 4:4, 5

ஆதாமின் பாவமே மனிதரின் மரணத்துக்கு காரணம் ரோ. 5:12; 6:23

மரணத்தின் போது மனித ஆத்துமா மரித்துவிடுகிறது எசே. 18:4; பிர. 9:10; சங். 6:5; 146:4; யோவா. 11:11-14

நரகம் மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழி யோபு 14:13; வெளி. 20:13, 14

மரித்தவர்களுக்கு நம்பிக்கை உயிர்த்தெழுதல் 1 கொ. 15:20-22; யோவா. 5:28, 29; 11:25, 26

ஆதாமினால் வந்த மரணம் ஒழிந்துபோகும் 1 கொ. 15:26, 54; வெளி. 21:4; ஏசா. 25:8

கிறிஸ்துவோடு ஆட்சி செய்ய 1,44,000 பேர் அடங்கிய லூக். 12:32; வெளி. 14:1, 3; 1 கொ. 15:40-53;

சிறு மந்தையே பரலோகத்துக்குச் செல்கிறது வெளி. 5:9, 10

1,44,000 பேர் கடவுளுடைய ஆவிக் குமாரர்களாக 1 பே. 1:23; யோவா. 3:3; வெளி. 7:3, 4

மறுபடியும் பிறக்கிறார்கள்

ஆவிக்குரிய இஸ்ரவேலோடு எரே. 31:31; எபி. 8:10-13

புதிய உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது

கிறிஸ்துவின் சபை அவர் மீதே கட்டப்பட்டுள்ளது எபே. 2:20; ஏசா. 28:16; மத். 21:42

கிறிஸ்துவின் மூலம் யெகோவாவிடம் மட்டுமே யோவா. 14:6, 13, 14; 1 தீ. 2:5

ஜெபங்கள் ஏறெடுக்கப்பட வேண்டும்

வணக்கத்தில் சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது யாத். 20:4, 5; லேவி. 26:1; 1 கொ. 10:14; சங். 115:4-8

ஆவிகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும் உபா. 18:10-12; கலா. 5:19-21; லேவி. 19:31

சாத்தான் இந்த உலகத்தின் காணக்கூடாத அதிபதி 1 யோ. 5:19; 2 கொ. 4:4; யோவா. 12:31

கிறிஸ்தவர் கலப்பு-விசுவாச இயக்கங்களில் 2 கொ. 6:14-17; 11:13-15; கலா. 5:9; உபா. 7:1-5

எந்தப் பங்கும் வகிக்கக் கூடாது

இந்த உலகத்திலிருந்து கிறிஸ்தவர் பிரிந்திருக்க வேண்டும் யாக். 4:4; 1 யோ. 2:15; யோவா. 15:19; 17:16

கடவுளுடைய சட்டங்களுடன் முரண்படாத மத். 22:20, 21; 1 பே. 2:12; 4:15

மனித சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

வாய்வழியாக அல்லது சிரை வழியாக இரத்தத்தை ஏற்றுக்கொள்வது ஆதி. 9:3, 4; லேவி. 17:14; அப். 15:28, 29

கடவுளுடைய சட்டங்களை மீறுவதாகும்

ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பைபிள் சட்டங்களுக்குக் 1 கொ. 6:9, 10; எபி. 13:4; 1 தீ. 3:2; நீதி. 5:1-23

கீழ்ப்படிய வேண்டும்

ஓய்வுநாள் சட்டம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே, உபா. 5:15; யாத். 31:13; ரோ. 10:4; கலா. 4:9, 10;

அது மோசேயின் நியாயப்பிரமாணத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது கொலோ. 2:16, 17

குருவர்க்கமும் விசேஷ பட்டப்பெயர்களும் தவறானவை மத். 23:8-12; 20:25-27; யோபு 32:21, 22, NW

மனிதன் பரிணமிக்கவில்லை, ஆனால் படைக்கப்பட்டான் ஏசா. 45:12; ஆதி. 1:27; மத். 19:4

கடவுளைச் சேவிப்பதில் கிறிஸ்து வைத்த முன்மாதிரியைப் 1 பே. 2:21; எபி. 10:7; யோவா. 4:34; 6:38

பின்பற்ற வேண்டும்

முழுக்கு ஞானஸ்நானம் ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளம் மாற். 1:9, 10; யோவா. 3:23; அப். 19:4, 5

கிறிஸ்தவர்கள் பைபிள் சத்தியத்திற்கு ரோ. 10:10; எபி. 13:15; ஏசா. 43:10-12

மகிழ்ச்சியுடன் சாட்சி கொடுக்கிறார்கள்

[பக்கம் 12-ன் படம்]

பூமி . . . யெகோவாவால் படைக்கப்பட்டது . . . மனிதனால் பராமரிக்கப்படும் . . . என்றென்றும் குடியிருக்கப்படும்