Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கேட்க வேண்டும் என அவர்கள் விரும்பும் நற்செய்தி

நீங்கள் கேட்க வேண்டும் என அவர்கள் விரும்பும் நற்செய்தி

நீங்கள் கேட்க வேண்டும் என அவர்கள் விரும்பும் நற்செய்தி

இயேசு பூமியில் இருந்தபோது, “உம்முடைய வருகைக்கும் [“பிரசன்னத்திற்கும்,” NW], உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என சீஷர்கள் அவரிடம் கேட்டார்கள். அநேக தேசங்களுக்கு இடையே போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் அதிகரித்தல், அநேகரை தவறாக வழிநடத்தும் பொய் மத போதகர்கள், தம்முடைய உண்மையான சீஷர்கள் பகைக்கப்பட்டு துன்புறுத்தப்படுதல், நீதியின் மேலுள்ள அன்பு தணிந்துபோதல் ஆகியவற்றை அடையாளங்களாக அவர் குறிப்பிட்டார். இந்தக் காரியங்கள் நடைபெற ஆரம்பிப்பது, கிறிஸ்துவின் காணமுடியாத பிரசன்னத்தையும் பரலோக ராஜ்யம் சமீபித்திருப்பதையும் சுட்டிக்காட்டும். இந்தச் செய்தி நற்செய்தியாக இருக்கும்! எனவே அந்த அடையாளத்தின் பாகமாக பின்வரும் வார்த்தைகளை இயேசு குறிப்பிட்டார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”​—மத்தேயு 24:3-14.

சமீபத்தில் நடைபெற்ற உலக சம்பவங்கள் மோசமாக இருந்தாலும், அவை மகிழ்ச்சிக்குரிய விஷயத்தை, அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தை சுட்டிக்காட்டுகின்றன. மிகப் பரவலாக அறிவிக்கப்பட்ட ஆண்டாகிய 1914-ல், மேற்குறிப்பிடப்பட்ட நிலைமைகள் மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன! அது புறஜாதியாருடைய காலங்களின் முடிவையும், மனித ஆட்சிக்கும் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்கும் இடைப்பட்ட காலத்தின் ஆரம்பத்தையும் சுட்டிக்காட்டியது.

இத்தகைய இடைப்பட்ட காலம் இருக்கும் என்பதை சங்கீதம் 110-⁠ம் அதிகாரம் 1, 2 வசனங்களும் வெளிப்படுத்துதல் 12:7-12 வசனங்களும் சுட்டிக்காட்டுகின்றன. கிறிஸ்து ராஜாவாக ஆளுகை செய்ய ஆரம்பிக்கும் வரை பரலோகத்தில் கடவுளுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என அந்த வசனங்கள் காட்டுகின்றன. பின்னர் பரலோகத்தில் நடக்கும் யுத்தத்தில் சாத்தான் பூமிக்குத் தள்ளப்படுவான், அதனால் பூமியில் துன்பம் உண்டாகும், கிறிஸ்துவோ சத்துருக்களின் நடுவில் ஆட்சி செய்வார். துன்மார்க்கத்திற்கு முழு அழிவு ‘மிகுந்த உபத்திரவத்தின்’ மூலம் வரும், இது அர்மகெதோன் யுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடையும். இதற்குப்பின் கிறிஸ்துவின் ஆயிர வருட சமாதான ஆட்சி ஆரம்பமாகும்.​—மத்தேயு 24:21, 33, 34; வெளிப்படுத்துதல் 16:14-16.

“மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” என பைபிள் சொல்கிறது; “எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”​—2 தீமோத்தேயு 3:1-5.

இந்தக் காரியங்கள் மனித வரலாற்றில் முன்பே சம்பவித்திருக்கின்றன என சிலர் வாதாடலாம். ஆனால் இந்தளவுக்கு அவை ஒருபோதும் சம்பவிக்கவில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் உரையாசிரியர்களும் சொல்வது போல, 1914 முதல் இருந்து வருவது போன்ற நிலைமை பூமியில் முன்னொருபோதும் இருந்ததில்லை. (பக்கம் 7-ஐக் காண்க.) முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு துன்பங்கள் மிக அதிகமாக பெருகியிருக்கின்றன. மேலும், கடைசி நாட்களைப் பற்றி கிறிஸ்து தந்த அடையாளத்தின் மற்ற அம்சங்கள் சம்பந்தமான உண்மைகளையும் ஆராய வேண்டும்: கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் ராஜ்யத்தையும் பற்றிய செய்தி வரலாறு காணாத அளவுக்கு உலகெங்கிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசங்கித்த காரணத்திற்காக யெகோவாவின் சாட்சிகளைப் போல் வேறு யாரும் இந்தளவு துன்புறுத்தப்படவில்லை. அவர்களில் நூற்றுக்கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் கொலை செய்யப்பட்டனர். சில இடங்களில் இன்று வரை யெகோவாவின் சாட்சிகள் தடையுத்தரவின்கீழ் இருக்கின்றனர், வேறு இடங்களிலோ கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் இயேசு கொடுத்த அடையாளத்தின் பாகமாக இருக்கின்றன.

வெளிப்படுத்துதல் 11:18-ல் முன்னுரைக்கப்பட்டபடி, யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளுக்கு எதிராக ‘தேசங்கள் கோபமுற்றிருக்கின்றன,’ இதனால், யெகோவாவின் “கோபம்” அந்தத் தேசங்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்படும் என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. “பூமியைக் கெடுத்தவர்களைக் [கடவுள்] கெடுப்”பார் என அதே வசனம் சொல்கிறது. ஜீவராசிகளை காக்கும் பூமியின் ஆற்றலுக்கு மனித வரலாற்றில் முன்னொருபோதும் இந்தளவுக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை. ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு! மனிதன் தொடர்ந்து பூமியை மாசுபடுத்தி வந்தால் அது குடியிருக்க லாயக்கற்ற இடமாகிவிடும் என அநேக விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் யெகோவா அதை ‘குடியிருப்புக்காகச் செய்து படைத்தார்.’ மாசுபடுத்துகிறவர்கள் பூமியை முழுமையாக நாசம் செய்வதற்கு முன்பு அவர்களை அவர் அழித்துவிடுவார்.​—ஏசாயா 45:18.

அந்த ராஜ்யத்தில் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்

இரட்சிக்கப்பட்ட அனைவருமே பரலோகத்துக்குப் போவதாக பைபிளை நம்பும் பலர் நினைப்பதால், கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக இந்தப் பூமியிலேயே மக்கள் வாழ்வார்கள் என்ற கருத்து அவர்களுக்கு விநோதமாக தொனிக்கலாம். ஆகிலும் குறிப்பிட்ட சிலரே பரலோகத்துக்குச் செல்வார்கள் என்றும், எண்ணற்ற திரள் கூட்டத்தார் இதே பூமியில்தான் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் பைபிள் காட்டுகிறது. (சங்கீதம் 37:11, 29; வெளிப்படுத்துதல் 7:9; 14:1-5) கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யம் பூமி முழுவதையும் ஆளுகை செய்யும் என்பதை பைபிளில் தானியேல் என்ற புத்தகத்தில் ஒரு தீர்க்கதரிசனம் காட்டுகிறது.

அதில் கிறிஸ்துவின் ராஜ்யம் யெகோவாவின் மலை போன்ற பேரரசாட்சியிலிருந்து பெயர்க்கப்பட்ட ஒரு கல்லாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறது. பூமியிலுள்ள பலமிக்க தேசங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிலையின் மீது அந்தக் கல் மோதி அதை நொறுக்கிப் போடுகிறது. அந்தச் “சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.” அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”​—தானியேல் 2:34, 35, 44.

இந்த ராஜ்யத்தையும், சுத்திகரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட பூமியில் நித்திய காலமாக வாழும் நம்பிக்கையையும் பற்றியே யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்கள். இப்பொழுது உயிர்வாழும் லட்சக்கணக்கானோரும் பிரேதக் குழிகளில் இருக்கும் இன்னும் பல லட்சக்கணக்கானோரும் அங்கே என்றென்றும் வாழும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள். பூமியைப் படைத்து அதில் முதல் மனித ஜோடியை குடி வைத்தபோது யெகோவா கொண்டிருந்த ஆதி நோக்கம், கிறிஸ்து இயேசுவின் ஆயிர வருட ஆட்சியில் நிறைவேறும். இந்தப் பூமிக்குரிய பரதீஸில் வாழ்க்கை ஒருபோதும் சலிக்கவே சலிக்காது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு வேலை கொடுக்கப்பட்டதைப் போலவே, பூமியையும் அதிலுள்ள தாவரங்களையும் விலங்கினங்களையும் பராமரிப்பதில் சவால் நிறைந்த திட்டங்கள் மனிதகுலத்திற்கு முன்னால் இருக்கும். அவர்கள் “தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”​—ஏசாயா 65:22; ஆதியாகமம் 2:15.

“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என இயேசு நமக்குக் கற்பித்த ஜெபம் பதிலளிக்கப்படும்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்க அநேக வேதவசனங்களை சுட்டிக்காட்ட முடியும். (மத்தேயு 6:10) இருந்தாலும், தற்சமயத்திற்கு இது ஒன்றே போதும்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ் சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”​—வெளிப்படுத்துதல் 21:3-5.

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

“கொடிய காலங்கள்,”

ஆனால் “அப்போது முடிவு வரும்”

[பக்கம் 18-ன் படம்]

நெதர்லாந்து

[பக்கம் 18-ன் படம்]

நைஜீரியா