Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒற்றுமையாய்க் கடவுளுடையமந்தையை மேய்த்தல்

ஒற்றுமையாய்க் கடவுளுடையமந்தையை மேய்த்தல்

ஒற்றுமையாய்க் கடவுளுடையமந்தையை மேய்த்தல்

யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சபை எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்று சிலர் கேட்கிறார்கள். எங்களுடைய பதில்: நிர்வாக ஏற்பாடு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையினுடைய மாதிரியின்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

1870-ன் பத்தாண்டுகளில் சார்லஸ் T. ரஸ்ஸலும் அவருடைய கூட்டாளிகளும் தங்கள் பைபிள் ஆராய்ச்சியின் பலனாக அறிந்தவற்றைப் பேச்சுக்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் மூலம் பரப்பும் முயற்சியில் துணிந்து இறங்கினார்கள். தேசம் முழுவதிலும் இந்த வேலையில் பங்குகொள்வதைத் தெரிந்து கொண்டவர்கள் ரஸ்ஸலையும் அவருடைய நெருங்கிய கூட்டாளிகளையும் கர்த்தருடைய வேலையைச் செய்வதில் மிக அதிக அனுபவமுள்ள மனிதராலாகிய ஒரு குழுவெனவும் தங்களுடைய வேலைகளின் சம்பந்தமாக புத்திமதிகளை இவர்களிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொள்ளக் கூடுமெனவும் கருதினார்கள்.

1884-ல் ஜயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸையிட்டி, பென்சில்வேனியாவின் காமன்வெல்த் சட்டங்களின் கீழ் கூட்டிணைப்பு கழகமாகச் செய்யப்பட்டது. ரஸ்ஸலும் பொறுப்புள்ள அவருடைய கூட்டாளிகளும் இந்தச் சங்கத்தையும் பைபிள் மாணாக்கர்களின் வேலையையும் இயக்குவதில் மிகவும் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார்கள். 1909-ல் அவர்கள் தங்களுடைய தலைமைக் காரியாலயத்தை நியு யார்க்கிலுள்ள புரூக்லினுக்கு மாற்றினார்கள். வருடங்களினூடாக உவாட்ச் டவர் சங்கத்தின் இயக்குநர்களும், நெருக்கமாக கூட்டுறவுக்கொண்ட, ஆவிக்குரிய தகுதிப் பெற்ற அபிஷேகம் பண்ணப்பட்ட மற்ற மனிதர்களும் யெகோவாவின் சாட்சிகளுக்கு நிர்வாகக் குழுவாக சேவித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிர்வாகக் குழு அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ ஆண்களடங்கிய ஒரு தொகுதியாலாகியது. (1992-ல் 12 பேர்), இவர்களில் 7 பேர் உவாட்ச் டவர் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவில் சேவை செய்கிறார்கள். இவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளைத் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். இவர்கள் கடவுளால் ஏவப்பட்டவர்கள் அல்ல. ஆகவே, அவர்கள் தவறு செய்யக்கூடாதவர்கள் அல்ல. ஆனால் பூமியில் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த அதிகாரத்துவமான கடவுளுடைய தவறாத வார்த்தையின் மீது அவர்கள் சார்ந்திருக்கிறார்கள். மேலும் கடவுளுடைய சித்தத்துக்கு வாழ்நாள் முழுவதும் கீழ்ப்பட்டிருக்கும் அனுபவமும் அவர்களுக்கு உண்டு. ஒவ்வொருவருக்கும் யெகோவாவின் சாட்சிகளோடு முழுநேர ஊழியத்தில் சுமார் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவித்த பதிவு உண்டு.

நிர்வாகக்குழு, சங்கம், பிரசுரிக்கின்றவற்றை மேற்பார்வை செய்கிறது. எழுதப்படுவது, மந்தையின் ஆவிக்குரிய தேவைகளைக் கூர்ந்து கவனித்து அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது, மேலும் இது கடவுளுடைய வார்த்தையை ஜெபத்தோடு தீர்க்கமாக படித்து, ஆராய்ச்சி செய்வதன் பலனாக இருக்கிறது. இந்த மனிதர்கள் தொடர்ந்து பைபிளை ஆராய்ச்சி செய்துகொண்டும் கடவுளுடைய நோக்கங்களின் படிப்படியான நிறைவேற்றத்தையும், உலக சம்பவங்களில் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தையும், உலகத்தில் கடவுளுடைய ஜனங்களின் சூழ்நிலைமையையும் கவனித்தும் வருகையில் சில போதகங்களின் விளக்கத்தில் இப்போது தெளிவாகிய அறிவுக்கேற்ப சரிப்படுத்தல்களைச் செய்வதைச் சில சமயங்களில் அவசியமாய்க் காணலாம். இவ்வகையில் சத்தியத்தின் அறிவு மேலும் மேலுமாகப் பெருகுகிறது.—சங்கீதம் 97:11; நீதிமொழிகள் 4:18; தானியேல் 12:4.

200-க்கும் மிக அதிகமான தேசங்களிலும் தீவுதொகுதிகளிலும் நடைபெறும் வேலைகளைக் கண்காணிக்க பூமி முழுவதிலுமிருக்கும் ஏறக்குறைய 100 கிளைக்காரியாலயங்கள் ஒவ்வொன்றிலும் ஆவிக்குரிய தகுதியுள்ள மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களடங்கிய ஒரு கிளைக்காரியாலய குழுவை நிர்வாகக் குழு நியமனம் செய்திருக்கிறது. கிளைக்காரியாலயங்கள் தங்களுடைய மேற்பார்வையின் கீழ்வரும் சபைகளோடு தொடர்புகொள்கின்றன. நிர்வாகக் குழுவுக்கும் கிளைக்காரியாலய குழுக்களுக்குமிடையே ஒழுங்காக செய்திப் போக்குவரத்து இருந்து வருகிறது. மேலும் நிலைமைகளைத் தெரிந்துகொள்வதற்கு நிர்வாகக் குழுவின் அங்கத்தினர்கள் தாமே ஒவ்வொரு வருடமும் பல கிளைக்காரியாலயங்களை நேரில் சென்று சந்திக்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களுடைய விசுவாசத்தின் பேரில் எஜமானராயிராமல், இன்னும் அநேகர் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி கற்றறியும் பொருட்டு கடினமாக உழைக்கும் ஊழியர்களாக இருக்கிறார்கள். பொருளாதார ஆதாயத்துக்காக அவர்கள் சேவை செய்வது கிடையாது. ஆனால் பெத்தேல் குடும்பங்களிலுள்ள மற்ற எல்லா அங்கத்தினர்களையும் போலவே இவர்களுடைய பொருளாதார தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அவர்கள் உண்மையுடன் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி, உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் வெளிப்படுத்திவரும் ஆர்வம், ஒற்றுமை, உயர்ந்த ஒழுக்கத் தராதரங்கள், பைபிள் போதகங்களுக்குப் பற்றுமாறாமை, ஆகியவற்றில் காணப்படுகிறது.—1 கொரிந்தியர் 3:5-9; 4:1,2; 2 கொரிந்தியர்: 1:24; 3:1-3; 1 பேதுரு 5:2, 3.

● என்ன நிர்வாக ஏற்பாடு உருவானது?

● நிர்வாகக் குழுவில் இன்று சேவிப்பது யார்? அவர்களுடைய பொறுப்புகள் யாவை?

● மற்ற தேசங்களில் வேலை எவ்வாறு மேற்பார்வை செய்யப்படுகிறது?

[பக்கம் 27-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய சித்தத்தை செய்துகொண்டிருக்கும் இடங்கd

[பக்கம் 26-ன் படங்கள்]

உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைமை பொறுப்பாளர்கள்

C. T. ரஸ்ஸல், 1884-1916

J. F. ரதர்ஃபோர்ட், 1916-1942

N. H. நார், 1942-1977

F. W. பிரான்ஸ், 1977-1992

[பக்கம் 27-ன் படங்கள்]

ஏறக்குறைய 100 கிளை அலுவலகங்களில் இவை சில. இவற்றின் மூலமாய் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக மெங்கும் விரிவான வேலைகள் கண்காணிக்கப்படுகின்றன

கனடா

ஸாம்பியா

ஜெர்மனி

ஜப்பான்

ஆஸ்திரேலியா

பிரேஸில்