கடவுளுடைய நோக்கம் இப்பொழுது அதன் உச்சநிலையை எட்டுகிறது
கடவுளுடைய நோக்கம் இப்பொழுது அதன் உச்சநிலையை எட்டுகிறது
பூமியைச் சிருஷ்டித்ததில் கடவுளுடைய நோக்கமானது சந்தோஷமான மக்கள் நீதியுள்ள நிலைமைகளின் கீழ் வாழும்படி அதைக் குடியிருக்கச் செய்ய வேண்டுமென்பதே. தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு மனிதவர்க்கத்தினர் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால் முதல் மனித ஜோடி கீழ்ப்படியாமல் பாவிகளாகி, மரணத்தீர்ப்பளிக்கப்பட்டார்கள். இது அவர்களுடைய சந்ததி முழுவதற்கும் பாவத்தையும் மரணத்தையும் கொண்டு வந்தது.—ஆதியாகமம் 1:27, 28; 2:16, 17; 3:1-19; ரோமர் 5:12.
கடவுள், அவருடைய பெயர் யெகோவா, கீழ்ப்படியாமையினாலும் பாவத்தினாலும் ஏற்பட்ட விளைவுகளைப் பூமியிலிருந்து நீக்கிவிட தீர்மானித்தார். சிறிது காலத்துக்குப் பின் அவர் பூமியின்மேல் பார்வையைச் செலுத்தி மனிதவர்க்கத்தில் ஆபிராம் என்ற விசுவாசமுள்ள ஒரு மனிதனைக் கண்டார், இவனுடைய பெயரை அவர் ஆபிரகாம் என்று மாற்றினார். இவனுடைய சந்ததி ஒரு பெரிய ஜாதியாகும் என்றும் அந்த ஜாதியின் மூலமாய்க் கடவுள் ஒரு வித்தை அளிப்பார், அந்த வித்தைக் கொண்டு பூமியின் வம்சங்களெல்லாம் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள் என்றும் கடவுள் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்தார்.—ஆதியாகமம் 12:1-3; 18:18, 19; 22:18; சங்கீதம் 83:18; எபிரெயர் 11:8-16.
பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டின் முடிவு பகுதியில் ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபின் அல்லது இஸ்ரவேலின் சந்ததி 12 கோத்திரங்களாகி, எகிப்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யெகோவா இந்த இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுதலைசெய்து, அவர்களை ஒரு ஜனமாக அமைத்தார். சீனாய் மலையில் மோசேயின் மூலமாய் நியாயப்பிரமாணத்தை அவர்களுடைய தேசீய அரசியல் சட்ட அமைப்பாக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். யெகோவாவே அவர்களுடைய அரசரும் நியாயாதிபதியும், நியாயப்பிரமாணிகருமாக இருந்தார். இஸ்ரவேலர், கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்ற ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமும், சாட்சிகளுமானார்கள். அவர்கள் மூலம் மேசியா வருவார், அவர் சகல ஜாதிகளின் ஜனங்களுடைய நன்மைக்காகவும் ஒரு நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார்.—யாத்திராகமம் 19:5, 6; 1 நாளாகமம் 17:7-14; 1 இராஜாக்கள் 4:20, 25; ஏசாயா 33:22; 43:10-12; ரோமர் 9:4, 5.
15 நூற்றாண்டுகளுக்கு பின்பு, அல்லது சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னால், கடவுள் தம்முடைய ஒரே பேறான குமாரனை, வாலிப யூதக் கன்னிகையாகிய மரியாளிடம் பிறக்கும்படி பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பினார். அவர் இயேசு என்று பெயரிடப்பட்டார். கடவுள் அவருடைய முற்பிதாவாகிய தாவீதுக்கு வாக்கு கொடுத்திருந்த ராஜ்யத்தை இவர் சுதந்தரிக்க வேண்டும். 30-வது வயதில் இயேசு முழுக்காட்டுபவனாகிய யோவானால் முழுக்காட்டப்பட்டு கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கத் தொடங்கினார். நோயுற்றோரைச் சுகப்படுத்துவதன் மூலம், வரப்போகும் அந்த ராஜ்யம் எவ்வாறு மத்தேயு 1:18-24; 3:13-16; 4:17-23; 6:9, 10; அதிகாரம் 13; 20:28; லூக்கா 1:26-37; 2:14; 4:43, 44; 8:1; யோவான் 3:16; அப்போஸ்தலர் 10:37-39.
மனிதவர்க்கத்தை ஆசீர்வதிக்கும் என்பதை அவர் காண்பித்தார். நித்திய ஜீவனை விரும்பும் அனைவரிடமும் தேவைப்படுவது என்ன என்பதை உவமைகளின் மூலம் விளக்கினார். பின்பு இயேசு கழுமரத்தில் கொல்லப்பட்டார். அவருடைய பரிபூரண மானிட ஜீவன் மனிதவர்க்கத்தை மீட்கும் பொருளாயிற்று.—மேசியானிய ராஜ்யம் நெடுங்காலத்துக்குப் பின்னான எதிர் காலத்தில், காரிய ஒழுங்கினுடைய முடிவின் சமயத்தில் ஸ்தாபிக்கப்படுமென இயேசு விளக்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அவர் ஆளும் அரசராகப் பரலோகங்களில் காணக்கூடாதவராய் வந்திருப்பார். மேலும் பூமிக்குத் தம்முடைய கவனத்தைச் செலுத்துவதனால் தாம் வந்திருப்பதைத் தெரியச் செய்வார். நாம் 1914 முதற்கொண்டு இந்தக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உலக சம்பவங்கள் காண்பிக்கின்றன. இயேசு முன்னறிவித்தப்படி ராஜ்யத்தின் நற்செய்தி பூலோகமெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக எல்லா ஜாதிகளிலுமுள்ள ஆட்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் பக்கமாக கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தற்போதைய காரிய ஒழுங்கின் முடிவை தப்பிப்பிழைத்து மேசியானிய ராஜ்யத்தின் கீழ், பூமியில் நித்திய ஜீவனை அடைவார்கள்.—மத்தேயு அதிகாரங்கள் 24 மற்றும் 25; வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17.
இன்று கடவுளுடைய சித்தத்தைச் செய்வதாக அநேக சர்ச்சுகள் சொல்லுகின்றன. ஆனால் நீங்கள் எவ்வாறு மெய்யான கிறிஸ்தவ சபையை அடையாளங் கண்டுகொள்ளலாம்? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையைப் பற்றி வேத எழுத்துக்களில் ஆராய்ந்து பார்த்து, அதே மாதிரியை இன்று பின்பற்றுகிறவர்கள் யாரெனக் காண்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
● கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில் ஆபிரகாமும் இஸ்ரவேலும் என்ன பங்கை வகித்தார்கள்?
● இயேசு தம்முடைய ஊழியத்தினாலும் மரணத்தினாலும் எதை நிறைவேற்றினார்?
● நம்முடைய தற்போதைய காலத்தை அடையாளங் குறிப்பிட என்ன சம்பவங்கள் முன்னறிவிக்கப்பட்டன?