Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளைத் துதிக்க பைபிள் பிரசுரங்களைத் தயாரித்தல்

கடவுளைத் துதிக்க பைபிள் பிரசுரங்களைத் தயாரித்தல்

கடவுளைத் துதிக்க பைபிள் பிரசுரங்களைத் தயாரித்தல்

யெகோவாவின் சாட்சிகள் அச்சிட்ட வெளியீடுகளின் மூலமாக கடவுளுடைய ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதை யாவரும் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். 1920 முதற்கொண்டு உவாட்ச் டவர் சங்கம் விநியோகிப்புக்காக பத்திரிகைகளையும் புத்தகங்களையும் தயாரிக்க சாட்சிகள் மத்தியிலிருந்து வேலை செய்ய முன்வரும் வேலையாட்களை உபயோகித்திருக்கிறது. கூடியவரை மிகக் குறைந்த விலையில் பிரசுரங்களை நம்பத்தக்க முறையில் தயாரிப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவே இவ்விதம் செய்கிறது.

சுமார் 70 ஆண்டுகளாக, சங்கம் முதலில் புரூக்லினிலும், பின்னர் மற்ற தேசங்களிலும் பைபிள் பிரசுரங்களின் உற்பத்தியைப் பெருக்கி விரிவாக்கியிருக்கிறது. வேலை அனைத்துமே, வேலை செய்ய அதிகமதிகமாய் முன்வரும் ஆட்களின் தொகுதியாலேயே செய்து முடிக்கப்படுகிறது.

1970-ன் பத்தாண்டுகளின் பிற்பகுதியில் செய்தியை தனி செய்முறையில் கையாண்டு அச்சு செய்யும் பழம்பாணி முறைகள் கைவிடப்பட்டு கம்ப்யூட்டரில் அதைக் கையாண்டு, நிழற்பட அச்சுக்கோப்பு முறையில் அச்சு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இதில் எதிர்ப்பட்ட சிக்கல் என்னவென்றால் வாணிக களத்தில் கிடைக்கக்கூடிய கருவிகள் ஒருசில மொழிகளை மட்டுமே கையாள முடிந்தன. ஆனால் சங்கம் ஏற்கெனவே 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிரசுரங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தது. இன்னும் அதிகமொழிகளில் தயாரிக்க வேண்டியதாயும் இருந்தது.

ஆகவே, பன்மொழி மின்னணு இயக்க நிழற்பட அச்சுக்கோப்பு முறையை உற்பத்தி செய்யும்படி வேலை செய்ய மனமுள்ளவர்கள் அழைக்கப்பட்டார்கள். விளைவு மனநிறைவளிப்பதாக இருந்தது. தேவையான தொழில் நுணுக்கத் தடைகளைத் தகர்த்து வழி உண்டாக்கி, கட்டுரையைப் பதிவு செய்தலும், பக்கங்களாக ஒழுங்கு செய்தமைத்தலும், நிழற்பட அச்சுக்கோப்பு முறை ஒன்றும் அடங்கிய MEPS என்றழைக்கப்படும் முறை தயாரிக்கப்பட்டது. இது 210 மொழிகளுக்கு மேலாக கையாள முடியும். மேலுமதிக மொழிகளையும் இதில் சேர்க்க முடியும்.

இன்று 100-க்கும் மேலான நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்ட வாசகமானது MEPS முறையின்மூலம் கையாளப்படுகிறது. இந்தத் தேசங்களிலிருந்து வேலை செய்ய முன்வரும் ஆட்கள் இந்தக் கருவியை இயக்கவும் பராமரிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். சங்கம் இப்பொழுது 116 மொழிகளில் 33 தேசங்களில் பத்திரிகைகளைத் தயார் செய்கிறது. இவற்றில் 5 தேசங்களில் பெரிய புத்தகங்களும் பைபிள்களுங்கூட தயார் செய்யப்படுகின்றன.

இந்த வேலையைச் செய்வதற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்—எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அச்சுப்பார்வைப்படி திருத்துபவர்கள், அச்சு செய்பவர்கள், ஏடு கட்டுபவர்கள், பிரசுரங்களை அனுப்பி வைப்பவர்கள் மற்றவர்கள் சபைகளோடு கடித போக்குவரத்துக்களைக் கையாள வேண்டும். சிலர், உணவு உற்பத்தி செய்வது, சாப்பாடு தயார் செய்வது, சுத்தம் செய்வது, சலவை செய்வது போன்றவற்றைச் செய்கிறார்கள். இவை அனைத்துமே பல்வேறு தேசங்களிலும் வேலை செய்வதற்கு முன்வந்து தங்களை இதற்காக அளிக்கும் ஆட்களாலே செய்யப்படுகிறது. 1992-ன் போது உலகம் முழுவதிலும் பல்வேறு அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும், பண்ணைகளிலும் மனமுவந்து உழைத்தவர்கள் ஏறக்குறைய 13,000 பேர்.

இந்த ஆட்கள் யார்? ஆண்களும் பெண்களும், விவாகமாகாதவர்களும், விவாகமானவர்களும் இளைஞர்களும் முதியவர்களுமான இவர்கள் அனைவரும் யெகோவாவின் ஒப்புக்கொடுத்தச் சாட்சிகள். சிலர் இந்த வேலையில் 40, 50, 60 வருடங்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் சராசரி வாரத்துக்கு குறைந்த பட்சம் 44 மணிநேரங்களும், தேவைப்பட்டால் அதிகமான நேரத்தையும் செலவழிக்கிறார்கள். மாலை வேளைகளும் வாரத்தின் இறுதி நாட்களும் வீட்டுக்கு வீடு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் சபை சம்பந்தமான மற்ற நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.

உலகம் முழுவதில் இந்த வேலையாட்களுக்குப் பெத்தேல் வீடுகள் என்றழைக்கப்படும் சங்கத்தின் குடியிருப்பு நிறுவனங்கள் ஒன்றில் எளிமையான அறைவசதியும் உணவும் அளிக்கப்படுகின்றன. இதோடுகூட, தங்களுடைய ஊழியத்தில் பிரயாணச் செலவுக்காகவும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் ஒரு மிதமான செலவீட்டுத் தொகையை இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

1920 முதற்கொண்டு, வேலை செய்ய முன்வந்துள்ள இந்த வேலையாட்கள் 900 கோடிக்கு மேற்பட்ட பைபிள்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் கைப்பிரதிகள் ஆகியவற்றை 200-க்கும் மேற்பட்ட மொழிகளில், உலகம் முழுவதிலும் விநியோகிப்பதற்காக உற்பத்தி செய்திருக்கிறார்கள். நித்திய நற்செய்தி சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் சந்தோஷ செய்தியாக அறிவிக்கப்படும் பொருட்டு இவர்கள் தங்களுடைய பங்கைச் செய்கிறார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 14:6, 7.

● உவாட்ச் டவர் சங்கம் என்ன அச்சுமுறைகளை கொண்டிருக்கிறது? ஏன்?

● இந்த எல்லா வேலையையும் யார் செய்கிறார்கள்? அவர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறார்கள்?

[பக்கம் 24-ன் படங்கள்]

நியு யார்க், அ.ஐ.மா.-வில் புரூக்லினிலும் உவால்கில்லிலும் உள்ள தொழிற்சாலை, வீடு, அலுவலகம் மற்றும் பண்ணை. இங்கு பைபிள் பிரசுரங்களின் தயாரிப்போடு சம்பந்தப்பட்ட வேலைகளை மனமுவந்த ஆட்கள் செய்கிறார்கள்

[பக்கம் 25-ன் படங்கள்]

பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்களின் தயாரிப்பில் நேரடியாக அல்லது மறைமுகமாக உட்பட்டிருக்கும் பல்வேறு வேலைகளை மனமுவந்த ஆட்கள் செய்கிறார்கள்

ஸ்பெய்ன்

ஜெர்மனி

பின்லாந்து

கனடா

டென்மார்க்

ஸ்வீடன்

தென் ஆப்பிரிக்கா

பிரேஸில்

நெதர்லாந்து

ஆஸ்திரேலியா