Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாங்கள் உதவியாகஇருக்க விரும்புகிறோம்

நாங்கள் உதவியாகஇருக்க விரும்புகிறோம்

நாங்கள் உதவியாகஇருக்க விரும்புகிறோம்

ந்தச் சிறு புத்தகம் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளையும் பைபிள் அறிவில் வளர உங்களுக்கு உதவி செய்யும்படி அவர்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளையும் நீங்கள் நன்றாய்த் தெரிந்துகொள்ளச் செய்ய தயாரிக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் பலமுறை உங்களை வந்து சந்தித்திருக்கலாம், அல்லது தெருவிலோ மற்ற இடங்களிலோ அவர்களோடு நீங்கள் பேசியிருக்கலாம். சாட்சிகளில் ஒருவர் இப்பொழுது உங்களோடு ஒருவேளை படித்துக் கொண்டிருக்கலாம்.

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அவர்களுடைய செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியுமா? ஏன்? இது ஏனென்றால் நம்முடைய சிருஷ்டிகராகிய கடவுள், எல்லா ஜாதிகளிலுமிருந்து வரும் ஜனங்கள் தம்மைத் தொழுதுகொள்வதில் ஒன்றுபடும்படி விரும்புகிறார். நம்முடைய காலத்தைக் குறித்து அவர் இவ்வாறு முன்னறிவித்தார்: “பல ஜாதிகள் புறப்பட்டு வந்து, ‘நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்’ என்பார்கள்.”—ஏசாயா 2:2, 3.

யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய வழிகளைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்கு எடுக்கும் நடவடிக்கை இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும். இந்த வேலை ஏன் இப்பொழுது முக்கியம், இதிலிருந்து நீங்கள் எவ்வாறு நன்மையடையலாம் என்பவற்றைப் பின்வரும் பக்கங்கள் காண்பிக்கும்.

மொழிபயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை