Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுதல்

நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுதல்

நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுதல்

யெகோவாவின் சாட்சிகள் சட்டத்தின் சம்பந்தமாக தொந்தரவுக்குள்ளாகிறார்கள்,check sentence சில அரசாங்கங்கள் அவர்கள் பேரில் தடையுத்தரவு போட்டிருக்கின்றன, அல்லது அவர்கள் வேறு எவ்வாறோ கெட்ட ஆட்கள் என்பதாக நண்பர்களும் உறவினர்களும் சொல்வதை நீங்கள் கேள்விப்படக்கூடும். அவர்களைக் குறித்து ஏன் இந்த முரண்பாடான பேச்சு?

இது, சாட்சிகள் சட்டத்தை அவமதிக்கிறார்கள் என்ற எந்தக் காரணத்துக்காகவும் அல்ல, அவர்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதே இதற்குக் காரணம். இயேசு தம்முடைய சீஷர்களிடம் மனிதர்கள் அவர்களை நிந்தித்து, துன்புறுத்தி, அவர்களுக்கு எதிராக எல்லா வித பொல்லாப்பான காரியங்களையும் பொய்யாய்ச் சொல்வார்கள் என்பதாகச் சொன்னார். இது ஏனென்றால், கடவுளுடைய பிரதான சத்துருவாகிய சாத்தான் இந்த உலகத்தின் கடவுளாக இருக்கிறான். கடவுளைச் சேவிப்பதிலிருந்து மனிதர்களைத் திருப்புவதற்கு அவன் விரும்புகிறான்.—மத்தேயு 5:10-12; 10:16-22, 34-39; 24:9, 10; யோவான் 15:17—16:3; 2 தீமோத்தேயு 3:12; 1 பேதுரு 5:8; வெளிப்படுத்தின விசேஷம் 12:17.

அப்போஸ்தலர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது, அவர்கள் குற்றவாளிகள் அல்லது வன்முறையாளர்கள் அல்லது கிளர்ச்சியாளர்கள் என்பதற்காக அல்ல, நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காகவே அவ்வாறு செய்யப்பட்டார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய வழக்கை உயர் நீதிமன்றங்களுக்கு முறையிட்டபோது, நற்செய்தியை பிரசங்கிக்கக் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டவுமே அவ்வாறு செய்தான்.—அப்போஸ்தலர் 4:18-20; 5:28-32; பிலிப்பியர் 1:7.

இன்று யெகோவாவின் சாட்சிகள், சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் கிறிஸ்தவர்களாகத் தங்கள் வரிகளைச் செலுத்தி அதிகாரத்திலிருப்பவர்களுக்கு மரியாதையைக் காண்பிக்கிறார்கள். அவர்கள் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துகிறார்கள். ஏதாவது அரசாங்க அதிகாரத்தோடு அவர்களுக்குப் போராட்டம் இருக்குமானால், அரசாங்கம் அவர்களுடைய பிரசங்க வேலையை ஒப்புக்கொள்ளாததே அல்லது தேசங்களிடையே நடைபெறும் விவகாரங்களில் சாட்சிகள் நடுநிலைமை வகிப்பதே அதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இதில் பின்வருமாறு சொன்ன அப்போஸ்தலர்களின் அதே நிலைநிற்கையை யெகோவாவின் சாட்சிகளும் எடுக்க வேண்டும்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப்போஸ்தலர் 5:29; மாற்கு 12:17; யோவான் 18:36; தீத்து 3:1, 2.

யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தலை விரும்புவதில்லை, அவர்கள் சஞ்சலமில்லாமலும் அமைதியாகவுமே வாழ விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளுடைய சட்டத்தையும் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியையும் பின்பற்றுவதற்காகத் துன்புறுத்தப்பட்டால் அதைச் சகித்துக்கொள்ள சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—மத்தேயு 5:10-12; அப்போஸ்தலர் 5:40, 41; 1 கொரிந்தியர் 4:12; 1 தீமோத்தேயு 2:2; 1 பேதுரு 3:14, 15; 4:12-16.

● யெகோவாவின் ஊழியர்கள் ஏன் நிந்திக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வருகிறார்கள்?

● கிறிஸ்தவ அப்போஸ்தலருக்கு ஏற்பட்டது போலவே யெகோவாவின் சாட்சிகளும் சில சமயங்களில் அரசாங்க அதிகாரிகளோடு போராட வேண்டிய நிலைமைக்குள் வருவதேன்?

● யெகோவாவின் ஊழியர்கள் துன்புறுத்தலை எவ்வாறு நோக்குகிறார்கள்?

[பக்கம் 29-ன் படங்கள்]

கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்ததனால் இயேசு பிலாத்துவுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டார். அப்போஸ்தலனாகிய பவுல் சிறையில் அடைக்கப்பட்டான்