மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளைக்கொண்டே பண சம்பந்தமாய் ஆதரிக்கப்படுகிறது
மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளைக்கொண்டே பண சம்பந்தமாய் ஆதரிக்கப்படுகிறது
முன்னால் விவரிக்கப்பட்ட அனைத்து வேலைகளும், மனமுவந்து முன்வரும் ஆட்களாலேயே ஆதரிக்கப்படுகிறது. இவ்வாறு செலவு குறைக்கப்படுகிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்தையும் பிரசுரங்களின் விநியோகிப்பையும் யெகோவாவின் சாட்சிகள் தாங்களே முன்வந்து செய்கிறார்கள். தங்களுடைய சொந்த செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்கிறார்கள். சபையைக் கண்காணிக்கும் மூப்பர்களும் அவர்களுக்கு உதவி செய்யும் உதவி ஊழியர்களும் தங்களுடைய சேவைக்காக எந்த ஊதியத்தையும் பெற்றுக்கொள்வதில்லை. தங்களுடைய எல்லா சொந்த செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
நிர்வாகக் குழுவின் அங்கத்தினர்களும், பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் தயாரிப்பதிலும் உற்பத்தி செய்வதிலும் முழுநேரமாக வேலை செய்யும் மற்ற எல்லாரும், இட வசதியையும் உணவையும் செலவுகளுக்காக ஒரு சிறிய செலவீட்டுத் தொகையையும் மாத்திரமே பெற்றுக்கொள்கிறார்கள். முழுநேர பயணக் கண்காணிகளின் விஷயத்திலும் இவ்வாறே இருக்கிறது.
எங்களுடைய பிரசுரங்கள் பிரசுரிக்கப்படுவதானது, பைபிளில் உண்மையான அக்கறை காண்பிக்கிற ஆட்களுக்கு உதவுவதற்காகும். பொருட்கள், உற்பத்தி மற்றும் அனுப்புதலுக்கான அடிப்படைச் செலவுகள், அக்கறையுள்ள ஆட்களினால் அளிக்கப்படுகிற மனமுவந்தளிக்கப்படும் நன்கொடைகளினால் பூர்த்திச்செய்யப்படுகின்றன. மேலும் யெகோவாவின் சாட்சிகள்தாமே அளிக்கிற நன்கொடைகள், விருப்ப ஆவணவழிக் கொடைகள் மற்றும் பிறவற்றினால் குறைவானது ஈடுசெய்யப்படுகின்றன.
நன்கொடை அளிக்க விரும்புகிறவர்களுக்காக யெகோவாவின் சாட்சிகளுடைய அனைத்துக் கூட்டங்களிலும் உள்ளூர் சபைக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. காணிக்கைகள் வசூலிக்கப்படுகிறதில்லை. தீர்வையோ தசம பாகமோ செலுத்த வேண்டியதில்லை. வேத எழுத்துக்களில் பதிவுசெய்திருக்கிறபடி ஒவ்வொருவரும் தன்னுடைய இருதயத்தில் தீர்மானித்திருக்கிறபடியே நன்கொடை அளிக்கலாம்.—2 கொரிந்தியர் 8:12; 9:7.
● யெகோவாவின் சாட்சிகளுடைய அனைத்து வேலைகளும் பண சம்பந்தமாய் எவ்வாறு ஆதரிக்கப்படுகின்றன?
சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14
ஜான் A. விட்னஸ்-ன் கடைசி உயிலும் விருப்ப ஆவணமும்
ஜான் A. விட்னஸ் என்னும் நான்