Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாநாடுகளில் களிகூருவதும் கடவுளைத் துதிப்பதும்

மாநாடுகளில் களிகூருவதும் கடவுளைத் துதிப்பதும்

மாநாடுகளில் களிகூருவதும் கடவுளைத் துதிப்பதும்

1880-ன் பத்தாண்டுகளின் ஆரம்ப காலம் முதற்கொண்டே பைபிள் மாணாக்கர்கள் உள்ளூரில் கூடி வருவதோடுகூட, மற்றப் பிராந்தியங்களிலுள்ள தங்களுடைய உடன் விசுவாசிகளோடு அறிமுகமாவது தங்களுக்கு நன்மை பயக்குமெனக் கண்டார்கள். ஆகவே அவர்கள் ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலிருந்தும், பின்னால் கானடாவிலிருந்தும் ஒன்றுகூடிவரும் பைபிள் மாணாக்கர்களின் வருடாந்தர மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். இவை ஆவிக்குரிய புத்துயிரளிக்கும் காலங்களாக இருந்தன; ஆழ்ந்த பைபிள் போதனைகள் பல நாட்கள் அளிக்கப்பட்டன. அனைவரும் உற்சாகத்தை மகிழ்ச்சியோடே பரிமாறிக்கொள்வதை அனுபவித்துக் களித்தார்கள். புதிய விசுவாசிகளை முழுக்காட்டுவது மாநாடுகளில் ஒரு வழக்கமான அம்சமாயிற்று. மேலும் பொது மக்களுக்கு அதிக விரிவாக சாட்சி கொடுப்பதற்கும் மாநாடுகள் பயன்படுத்தப்பட்டன.—ரோமர் 1:11, 12.

இன்று யெகோவாவின் சாட்சிகள் ஒழுங்காக மாநாடுகளை அனுபவித்துக் களிக்கிறார்கள். பொதுவாக சுமார் 18-25 சபைகள், ஒரு தொகுதியாகச் சேர்க்கப்படுகின்றன, இத்தொகுதிகள் வட்டாரங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயணக் கண்காணிகள் சந்திக்கிறார்கள் அல்லது அவற்றிற்குச் சேவை செய்கிறார்கள். வருடத்துக்கு இருமுறை மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கே ஒரு வட்டாரத்திலுள்ள சபைகளோ, அல்லது அந்த வட்டாரத்தின் ஒரு பகுதியோ, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது அதில் ஒரு தினத்தன்று ஒன்றுகூடிவருகின்றனர்.

வருடத்துக்கு ஒருமுறை மூன்று அல்லது நான்கு நாட்கள் நடக்கும் பெரிய மாநாடுகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை மாவட்ட மாநாடுகளென அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூட முடியும். இந்த மாநாடுகள், யெகோவாவின் சாட்சிகளுக்கும் அவர்களுடைய நடவடிக்கைகளில் அக்கறையுள்ள மற்றவர்களுக்கும் ஆவிக்குரிய கட்டியெழுப்புதலை அளிக்கின்றன, மேலும் அவை பொதுமக்களுக்கும் சாட்சி பகருகின்றன.

இந்த மாநாடுகளுக்குரிய நிகழ்ச்சிநிரலை யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழு உலகம் முழுவதிலுமுள்ள சாட்சிகளுடைய தேவைகளை மனதில் கொண்டு தயாரிக்கிறது. இதில் பேச்சுகள், கலந்தாலோசிப்புகள் உண்மையை நேரடியாய் நடித்துக் காட்டும் நடிப்புகள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. இவற்றைப் பயணக் கண்காணிகளும் சபைகளிலிருந்து வரும் தகுதிபெற்ற சாட்சிகளும் கையாளுவார்கள். கடவுள் பயமற்ற உலகில் கிறிஸ்தவர்களாக வாழும் சவாலைத் தாங்கள் எவ்வாறு வெற்றிகரமாய் எதிர்ப்படுகிறார்கள் என்பது பற்றியும் ஊழியத்தில் தங்களுக்குக் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பல்வேறு ஆட்கள் அனுபவங்களையும் கூறுகிறார்கள். மாவட்ட மாநாடுகளில் கூடுதலான ஓர் அம்சம் இருக்கிறது—பைபிள் நாடகங்கள் அல்லது இன்றைய காட்சி அமைப்பில் நாடகங்கள் நேரே மேடையில் நடித்துக் காட்டப்படுகின்றன. இவை, கிறிஸ்தவர்கள் எவ்விதமாக தாங்கள் இன்று எதிர்ப்படும் பிரச்னைகளைச் சமாளிக்கலாம் என்பதை விளக்கிக் காட்டுகின்றன.

உணவும் சிற்றுண்டியும் அளிக்கப்படுகிறது. கூட்டங்களுக்கு இடைப்பட்ட ஓய்வு நேரங்களில் தோழமையை அனுபவித்துக்களிக்க இது அனுமதிக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் உட்பட்டிருக்கும் எல்லா வேலைகளும் வேலை செய்ய தாங்களாக முன்வரும் யெகோவாவின் சாட்சிகளாலேயே செய்து முடிக்கப்படுகின்றன. மன்றங்களுக்கும் மற்றவற்றிற்கும் ஏற்படும் செலவுகள், மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளைக் கொண்டே தீர்க்கப்படுகின்றன. அனுமதி இலவசம், காணிக்கைகள் வாங்கப்படுவதில்லை.

உங்களுடைய பிராந்தியத்தில் இந்தக் கூட்டங்கள் எப்பொழுது எங்கே நடக்கும்படி திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பதை யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையை கேட்டு நீங்கள் தெரிந்துகொள்ளலாம். பிரயாண ஏற்பாடுகளையும் அறை வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் முறையையும் பற்றிய தகவலும் அளிப்பார்கள்.

இந்த மாநாடுகள் யெகோவாவின் சாட்சிகளுக்கும் அவர்களோடு கூட்டுறவு கொள்ளும் அனைவருக்கும், தங்களுடைய உள்ளுர் சபைக்கு அப்பால் இருக்கும் மற்ற சகோதரர்களைக் காணவும், உலகிலுள்ள தங்களுடைய சகோதரர்களின் முழு கூட்டுறவைப் போற்றுவதற்கும் உதவி செய்கின்றன.—1 பேதுரு 2:17.

● ஆரம்ப கால பைபிள் மாணாக்கர்கள் தங்களுடைய மாநாடுகளிலிருந்து என்ன நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள்?

● வட்டார மற்றும் மாவட்ட மாநாடுகளுக்குச் செய்யப்படும் ஏற்பாடுகளையும் நிகழ்ச்சிநிரலையும் விவரிக்கவும்.

[பக்கம் 18-ன் படங்கள்]

மாவட்ட மாநாட்டில் பைபிள் நாடகம், ஐக்கிய மாகாணங்கள்

சர்வதேச மாநாடு, போலாந்து

சர்வதேச மாநாடு, அர்ஜன்டினா

வட்டார மாநாடு, ஜப்பான்

மாநாடு பிரதிநிதிகள் பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள், ஸ்விட்ஸர்லாந்து

சர்வதேச மாநாட்டில் முழுக்காட்டுதல், தென் ஆப்பிரிக்கா

புதிய பைபிள் பிரசுரத்தை வெளியிடுதல், கனடா

மாநாடு பிரதிநிதிகள் சேர்ந்து பாடுகிறார்கள், ஸ்பெய்ன்