Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முழுநேர ஊழியர்கள் முன்னணியிலிருந்து பிரசங்க வேலையை விரைவுபடுத்துகிறார்கள்

முழுநேர ஊழியர்கள் முன்னணியிலிருந்து பிரசங்க வேலையை விரைவுபடுத்துகிறார்கள்

முழுநேர ஊழியர்கள் முன்னணியிலிருந்து பிரசங்க வேலையை விரைவுபடுத்துகிறார்கள்

ங்களை வந்து சந்தித்த முதல் யெகோவாவின் சாட்சி ஒருவேளை முழுநேர பயனியர் ஊழியராக அல்லது மிஷனரியாக இருந்திருக்கலாம். யெகோவாவின் சாட்சிகள் சம்பளம் பெற்றுக்கொண்டு ஊழியஞ் செய்கிறவர்கள் அல்லாததனால், இந்த ஆட்கள் எவ்வாறு ஊழியத்தில் முழுநேரம் ஈடுபட முடியும் என்பதாக ஒருவேளை நீங்கள் யோசித்திருக்கலாம்.

ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் ஊழியரே. ஆனால் பெரும் எண்ணிக்கையான ஆட்களுக்குக் குடும்ப அல்லது மற்ற பொறுப்புகள் இருக்கின்றன. இதனால் வாரத்தில் ஒருசில மணிநேரங்களே அவர்கள் ஊழியத்தில் செலவிட முடிகிறது. என்றபோதிலும் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சாட்சிகள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை குறைத்துக்கொண்டு, இவ்வாறு செலவுகளைக் குறைத்து ஒரு பகுதி நேர வேலையை ஏற்றுக்கொள்கிறார்கள். பின்பு ஊழியத்தில் வருடத்துக்கு 1,000 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாகச் செலவழிக்கிறார்கள்.

உண்மைதான், முழுநேர பயனியர் ஊழியர்களுக்குத் தங்களுக்கென்று செலவிட பணம் அவ்வளவு அதிகம் இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு இதுவே கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடும் வழியாக இருக்கிறது. அவர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு மாதத்தில் 90 மணி நேரங்கள் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி மற்றவர்களிடம் பேசக்கூடியவர்களாக இருப்பதே சிறந்த ஓர் அனுபவமாக இருக்கிறது. முழுநேர ஊழியர், ஊழியத்தில் தன்னுடைய திறமையை அபிவிருத்திச் செய்துகொள்கிறார். அக்கறை காண்பிக்கிறவர்களைத் தகுந்தபடி திரும்பப் போய்ச் சந்திப்பதற்கு அவருக்கு நேரமிருக்கிறது. இது அதிக உற்சாகமளிக்கும் பலன்களைத் தருகிறது. பொருள் சம்பந்தமாக வாழ்க்கைக்கு மிக அவசியமானவை அவர்களுக்கு இருக்கிறது. தங்களுக்கு இருப்பவற்றிற்கு அவர்கள் மிகவும் நன்றியோடிருக்கிறார்கள்.—மத்தேயு 6:33.

பிப்ரவரி 1943-ல் உவாட்ச் டவர் சங்கம் உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆப் கிலியட் என்ற பள்ளியை ஸ்தாபித்தது. அனுபவமுள்ள முழுநேர பயனியர் ஊழியர்களை, அயல் நாடுகளில் மிஷனரிகளாக சேவிப்பதற்குப் பயிற்றுவிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஐந்து மாத பயிற்சியில், பைபிள், பைபிள் சரித்திரம், யெகோவாவின் அமைப்பு மற்றும் அயல் நாட்டுப் பிராந்தியத்தில் ஊழியத்துக்குத் தயார் செய்வது சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றின் பேரில் கருத்தூன்றிய படிப்பு உட்பட்டிருக்கிறது.

மிஷனரிகளாக நியமிக்கப்படும் இடத்துக்குப் பயணச் செலவை சங்கம் கொடுத்து மிஷனரி வீடுகளில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவையும் தங்குவதற்கு எளிமையான இடவசதிகளையும் அளிக்கிறது. சொந்த செலவுகளுக்காக ஒவ்வொரு மிஷனரிக்கும் ஒரு மிதமான செலவீட்டுத் தொகையையும் தருகிறது. கடைக்குப் போவது, உணவு தயாரிப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை மிஷனரிகள் சுற்று முறைப்படி செய்து, வீட்டை நடத்துகிறார்கள். போதிய இந்தக் கவனிப்பின் காரணமாக, மிஷனரிகள் வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதற்கும் அக்கறையுள்ள ஆட்களோடு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 140 மணி நேரங்களைச் செலவழிக்க முடிகிறது.

இந்த மிஷனரிகளில் பலர், தங்கள் வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஊழியஞ்செய்ய நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் வித்தியாசமான வாழ்க்கை தரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் புதிய உணவு பழக்கங்களுக்கும் வித்தியாசமான தட்ப வெப்ப நிலைக்கும் வேறு ஒரு மொழியைப் பேசுவதற்கும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அவர்கள் ஜனங்களை நேசிப்பதாலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஊக்கமாய் விரும்புவதாலும் இந்த வேலையைச் செய்கிறார்கள்.

1943 முதற்கொண்டு 1992 வரையாக தி உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆப் கிலியட் 93 வகுப்புகளை நடத்தி 6,500-க்கும் மேற்பட்ட மிஷனரிகளை வெளியில் அனுப்பியிருக்கிறது. சங்கத்தினுடைய மேற்பார்வையின் கீழ், இவர்கள் ஆப்பிரிக்கா மத்திய மற்றும் தென் அமெரிக்கா, கிழக்கத்திய நாடுகள், தென் பசிபிக் முழுவதிலும் பைபிள் கல்வியைப் பரவச் செய்வதில் முதன்மை பங்கெடுத்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் அவர்கள் அதிகத்தைச் செய்து முடித்திருக்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் பயனியர்களாக அல்லது மிஷனரிகளாக முழுநேரம் ஊழியஞ் செய்தாலும் அல்லது பகுதி நேரமே செய்தாலும் பொருளாதார இலாபமின்றி சேவை செய்கிறார்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை பெற்றுக்கொள்வதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் தங்களுடைய சொந்த நேரத்தையும் பணத்தையும் தங்களையுமே அர்ப்பணிக்கிறார்கள்.—யோவான் 17:3.

● யெகோவாவின் சாட்சிகளில் சிலர், எவ்வாறு ஊழியத்துக்குத் தங்களுடைய முழுநேரத்தையும் ஒதுக்க முடிகிறது? இதை ஏன் அவர்கள் செய்கிறார்கள்?

● மிஷனரி வேலைக்கு ஊழியர்கள் எவ்விதமாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்?

● மிஷனரிகள் தங்கள் அயல் நாட்டு வேலை நியமிப்புகளில் எப்படி ஆதரிக்கப்படுகிறார்கள்?

[பக்கம் 22-ன் படங்கள்]

இடது பக்கம்: கிலியட் பள்ளி வகுப்பறை, புரூக்லின், நியு யார்க், அ.ஐ.மா.

வலது பக்கம்: மிஷனரி, பாப்புவா நியு கினியில் கடவுளுடைய வார்த்தையைப் போதிக்கிறார்

[பக்கம் 23-ன் படங்கள்]

பயனியர் ஊழியர்களும் மிஷனரிகளும் கடவுளுடைய வார்த்தையைப் பல்வேறு தேசங்களில் பிரசங்கிக்கிறார்கள்

பிரேஸில்

டொமினிகன் குடியரசு

ஸ்பெய்ன்

சியர்ரா லியோன், ஆப்பிரிக்கா