Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தம்முடைய ஜனங்களைவேலைக்காக கூட்டிச்சேர்த்து தயார் செய்கிறார்

யெகோவா தம்முடைய ஜனங்களைவேலைக்காக கூட்டிச்சேர்த்து தயார் செய்கிறார்

யெகோவா தம்முடைய ஜனங்களைவேலைக்காக கூட்டிச்சேர்த்து தயார் செய்கிறார்

நூற்றாண்டுகளிணூடே விசுவாச துரோகம் உலகம் முழுவதிலும் பரவி விட்டிருந்தது. மிகுதியான சர்ச் பிரிவுகள், ஒருசில பைபிள் போதகங்களைப் பற்றிக்கொண்டு, ஆனால், பெரும்பாலும் மனித பாரம்பரியங்களையும், புறமத ஆரம்பத்தைக் கொண்ட பல பழக்கவழக்கங்களையும் பின்பற்றின. கிறிஸ்து திரும்பி வருதலைப்பற்றிய எதிர்பார்ப்புகள் பொதுவாக மறந்துவிடப்பட்டிருந்தன.—மத்தேயு 13:24-30, 37-43 ஒப்பிடவும்.

என்றபோதிலும் இயேசு தம்முடைய திரும்பி வருதலுக்காக விழித்துக் காத்திருக்கும்படி சொல்லியிருந்தார்! இவ்வாறு செய்து கொண்டிருந்த ஒரு தொகுதியினர், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள பென்சில்வேனியாவின் அலிகெனியில் இருந்தார்கள். 1870-ன் பத்தாண்டுகளின் முற்பகுதியில், சார்ல்ஸ் டேஸ் ரஸ்ஸலும் அவருடைய நண்பர்களில் சிலரும், கிறிஸ்துவின் திரும்பி வருதலைக் குறித்து, எந்தப் பிரிவுகளையும் சேராமல் பைபிளை நுட்ப விவரமாய் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். மற்ற அநேக அடிப்படை போதகங்கள் பேரிலும் பைபிள் சத்தியத்தை ஆராய்ந்து கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். இது தற்கால யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளின் ஆரம்பமாக இருந்தது.—மத்தேயு 24:42.

இந்தத் தொகுதியினர், திருத்துவக் கோட்பாடு பைபிளில் ஆதாரங்கொண்டில்லை எனவும் யெகோவா ஒருவரே சர்வ வல்லமையுள்ள தேவனும் சிருஷ்டிகருமாக இருக்கிறார்; இயேசு கிறிஸ்து அவருடைய முதல் சிருஷ்டியாகவும் ஒரே பேறான குமாரனாகவும் இருக்கிறார்; பரிசுத்த ஆவி ஒரு நபர் அல்ல, அது கடவுளுடைய காணக்கூடாத கிரியை செய்யும் சக்தியாக இருக்கிறது என்பவற்றை புரிந்துகொண்டார்கள். மேலும் ஆத்துமா அழியாமையுள்ளதல்ல ஆனால் அழிவுள்ளது. மரித்தோரின் நம்பிக்கை உயிர்த்தெழுதல். மனந்திரும்பாத அக்கிரமத்துக்குத் தண்டனை நித்திய வாதனை அல்ல ஆனால் நித்திய அழிவே என்பவற்றையும் இந்தத் தொகுதியினர் கண்டறிந்தனர்.

இயேசு தம்முடைய ஜீவனை மனிதவர்க்கத்துக்கு மீட்கும் பொருளாக கொடுத்தது பைபிளின் அடிப்படை போதகமெனக் கண்டார்கள். முதலாவதாக, முதல் நூற்றாண்டிலிருந்து நம்முடைய நாள் வரையில் தெரிந்துகொள்ளப்பட்ட 1,44,000 ஆண்களும் பெண்களும் பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடன் சுதந்தரவாளிகளாக இருக்கும் பொருட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவார்கள். பின்பு இயேசுவின் மீட்பின் பலியின் மூலமாக கோடிக்கணக்கான மனிதர்கள் ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியில் நித்தியமாய் வாழும் எதிர்நோக்கோடு மனிதப் பரிபூரண நிலையை அடைவார்கள். இவர்களில் பெரும்பான்மையர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டிருப்பர்.

ரஸ்ஸலும் அவருடைய கூட்டாளிகளும் கிறிஸ்துவின் வந்திருக்கைக் காணக்கூடாமல், ஆவியிலிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்கள். கடவுளுடைய அரசாட்சி பூமியில் எந்த அரசாங்கத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்தப்படாத காலமாகிய புறஜாதியாரின் காலங்கள் 1914-ல் முடிவடைய வேண்டும். அப்பொழுது கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்படும். இதே போதகங்கள் இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய போதகமென அடையாளங் கண்டுகொள்ளப்படுகின்றன.

ரஸ்ஸலும் அவருடைய நண்பர்களும் இந்தச் சத்தியங்களைப் பேச்சுகள் கொடுத்தும் அச்சிட்டு வெளியிட்டும் எல்லா இடங்களிலும் விரிவாக அறிவித்தார்கள், 1879-ன் ஜூலை மாதத்தில் ரஸ்ஸல் ஜயன்ஸ் உவாட்ச் டவர் பத்திரிகையை (இப்பொழுது தமிழில் காவற்கோபுரம் என்றழைக்கப்படுகிறது) வெளியிட ஆரம்பித்தார். பைபிள் மாணாக்கர்களின் பிரசங்க வேலைகள், மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளைக் கொண்டே செய்யப்பட வேண்டும், காணிக்கைகள் வாங்கக்கூடாது என்று அவர் தீர்மானித்தார். மேலும், விசுவாசிகள் ஊதியமில்லாமல் தாங்களாக மனமுவந்து எடுக்கும் முயற்சிகளால் இந்தச் செய்தி சுற்றிப்பரவச் செய்யப்பட வேண்டும். ரஸ்ஸல் தாமே அந்தச் சமயம் வரையில் வியாபாரத்தில் தாம் சேகரித்து வைத்திருந்த செல்வத்திலிருந்து நன்கொடை அளித்தார்.

பைபிள் மாணாக்கர்கள் தங்கள் சபைகள் அப்பொழுது அழைக்கப்பட்டபடி வகுப்புகளாக ஒன்று கூடினர். பேச்சுகளுக்காகவும், வேதாகமப் படிப்புகளுக்காகவும், சாட்சி கூட்டங்களுக்காகவும் அவர்கள் வாரத்தில் மூன்று முறை கூடினர். ஒவ்வொரு வகுப்பின் ஆவிக்குரிய நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்ய பொறுப்புள்ள மனிதர்களை மூப்பர்களாக அவர்கள் வழக்கமாக தேர்ந்தெடுத்தார்கள்.

1884-ல் ஜயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸையிட்டி please make this spelling standardபென்சில்வேனியாவில், லாபந்தேடாத ஒரு கழகமாக அமைக்கப்பட்டது. வருடந்தோறும் கழகத்துக்கு ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பைபிள் கல்வி புகட்டும் வேலையைத் தொடர்ந்து முன்னேற்றுவிக்க இது, தனிப்பட்ட எந்த நபரின் வாழ்க்கையின் மீதும் சார்ந்திராத சட்டரீதியான ஒரு கருவியை அளித்தது. சார்லஸ் T. ரஸ்ஸல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அலுவலகம் தலைமைக் காரியாலயமாகக் கருதப்பட்டது.

மற்ற தேசங்களுக்கும் வேலையை விரிவாக்கப் பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. 1880-ம் பத்தாண்டுகளின் முற்பகுதியில் வேலை கானடாவையும் இங்கிலாந்தையும் எட்டியது. 1891-ல் ரஸ்ஸல் ஐரோப்பாவிலும் மத்தியகிழக்கிலும் சத்தியத்தை மேலுமாகப் பரப்புவதற்கு என்ன செய்யலாமென ஆராய, அவ்விடங்களுக்குப் பிரயாணம் செய்தார். 1900-ன் பத்தாண்டுகளின் ஆரம்பப் பகுதியில், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் சங்கத்தின் கிளைக்காரியாலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

1909-ல் சர்வதேசமும் எட்டும் அளவில் பிரசங்க வேலையை மேலும் விரிவாக்குவதற்காக உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைமைக் காரியாலயம் நியு யார்க்கிலுள்ள புரூக்லினுக்கு மாற்றப்பட்டது. நியு யார்க் நகர சட்டத்தின் கீழ் இணைப்பு கழகம் ஒன்று அமைப்பது அவசியமாயிற்று, இப்பொழுது அது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆப் நியு யார்க் இன்கார்ப்பரேட்டட் என்றறியப்படுகிறது. 1914-ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் முழுவதிலும் பைபிள் மாணாக்கரின் நடவடிக்கைகளை முன்னேற்றுவிக்க இங்கிலாந்திலுள்ள இலண்டனில், இன்டர்நாஷனல் பைபிள் ஸ்டூடண்ட்ஸ் அசோசியேஷன் அமைக்கப்பட்டது. தற்சமயம் உலகம் முழுவதிலும் அநேக தேசங்களில், சட்டப்படி அமைக்கப்பட்ட சுமார் 70 கழகங்களும் சங்கங்களும் உவாட்ச் டவர் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றன. இவை அனைத்துமே பிறர் நலனுக்காக உழைக்கின்றன, விரும்பி கொடுக்கப்படும் நன்கொடைகளாலும் மனமுவந்து தாங்களாகவே வேலை செய்ய முன்வரும் ஆட்களாலும் ஆதரிக்கப்பட்டு வருகின்றன.

1916-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸ்ஸல் மரித்தார். அவருக்குப் பின் ஜோஸப் ப்ராங்லின் ரதர்ஃபோர்ட் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவரானார். முதல் உலக யுத்தம் முடிவடையும் ஆண்டுகளின்போது பைபிள் மாணாக்கர்கள் துன்புறுத்துதலால் கடுமையாகச் சோதிக்கப்பட்டார்கள். இது, அமெரிக்காவில் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் சேவித்துக்கொண்டிருந்த எட்டு சகோதரர்களை அநீதியாகக் கைது செய்வதில் உச்சநிலையை அடைந்தது. பைபிள் மாணாக்கர்களின் வேலை ஆபத்தில் இருந்ததுபோல் தோன்றியது. என்றபோதிலும், 1919-ல் இந்தச் சகோதரர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்; இப்பொழுது பிரசங்க வேலையை மேலுமதிகம் விரிவாக்குவது தொடங்கிற்று.

அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ பைபிள் மாணாக்கரின் ஒன்றுபட்ட குழு, அமைப்போடு கூட்டுறவுகொண்ட எல்லா ஆட்களுக்கும் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தின் மூலமாக ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவைத் தொடர்ந்து அளித்து வந்தது. முதல் நூற்றாண்டில் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை, இயேசு குறிப்பிட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாக அமைந்ததைப் போலவே, நம்முடைய காலத்திலும் ராஜ்ய வேலையில் ஈடுபடும் ஒப்புக்கொடுத்த பைபிள் மாணாக்கர்களின் அபிஷேகம் பண்ணப்பட்ட தொகுதி “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாக அமைந்திருக்கிறது. சபையை விசாரணை செய்ய இயேசு வந்தபோது, இந்த வகுப்பு வீட்டு வேலைக்காரருக்கு உணவளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்; அப்பொழுது அவர் அதைத் தம்முடைய உடைமைகள் எல்லாவற்றின் மேலும் விசாரணைக்காரனாக வைத்தார்.—மத்தேயு 24:45-47; லூக்கா 12:42.

முதல் உலக யுத்தம் முடிந்தவுடன், கிறிஸ்து இயேசு ஆளும் கடவுளுடைய ராஜ்யம் பரலோகங்களில் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டாயிற்று என்பது தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்டது. ஆகவே இயேசுவின் வார்த்தைகள் இப்பொழுது முழுமையாக நிறைவேற்றமடையும்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.” இந்த ராஜ்ய செய்தி இன்னுமதிக எண்ணிக்கையான ஆட்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு ஜோசப் F. ரதர்ஃபோர்ட் துணிந்து முயற்சியைத் தொடங்கினார்.—மத்தேயு 24:14.

ஆகவே, சங்கம் பைபிள் பிரசுரங்களைக் கூடியவரை குறைந்த விலையில் தொடர்ந்து நிலையாய் உற்பத்தி செய்வதை நிச்சயப்படுத்திக்கொள்ள, தாங்களாக மனமுவந்து முன்வரும் ஒப்புக்கொடுத்த மனிதரை வேலையாட்களாக உபயோகித்து, தானே சொந்தமாக அச்சடிக்கத் தீர்மானித்தது. பைபிள் மாணாக்கர்கள் அனைவரும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ஒழுங்காய்ப் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்தப்பட்டார்கள். வானொலி மூலம் பைபிள் பேச்சுகளை ஒலிபரப்புவது பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டன.

1918-க்கு முன்பு, பைபிள் மாணாக்கர்கள், தங்கள் பிரசங்க வேலையின் நோக்கம், பரலோகத்தில் கிறிஸ்து இயேசுவோடு இருப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட மீதியானோரை கூட்டிச் சேர்ப்பதும் வரப்போகும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து உலகத்தை எச்சரிப்பதுமே என்று புரிந்துகொண்டிருந்தார்கள். தற்போதைய பொல்லாத ஒழுங்கின் முடிவைத் தப்பிப்பிழைத்துப் பூமியில் வாழப்போகும் ஆட்களைக் கூட்டிச் சேர்ப்பதற்குக் கவனம் செலுத்தப்படவில்லை. பின்னர் 1918 முதற்கொண்டு, “இப்பொழுது வாழும் இலட்சக்கணக்கானோர் ஒருவேளை ஒருபோதும் மரிக்க வேண்டியதிராது!” என்ற பேச்சு எல்லா இடங்களிலும் கொடுக்கப்பட்டது.

1923-ல் மத்தேயு 25:31-46-லுள்ள செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையை கருத்தூன்றி படித்தபோது பரலோக ராஜ்யத்துக்குரிய நம்பிக்கை இல்லாத நீதியுள்ள மனச்சாய்வையுடைய ஆட்களும் அர்மகெதோனுக்கு முன்னால் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்று அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பார்கள் என்பது தெரியவந்தது. 1935-ல் மேலுமாகக் கருத்தூன்றி படித்தபோது, செம்மறியாடுகளைப் போன்ற இந்த ஆட்களும் வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17-ல் விவரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையற்றத் திரள் கூட்டமான ஜனங்களும் ஒன்றே என்பது தெரியவந்தது. இவர்கள் சகல ஜாதிகளிலிருந்தும் சேர்க்கப்படுவார்கள், மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைத்து பூமியில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருக்கும். இதைப் புரிந்துகொண்டது பிரசங்க வேலைக்குப் பெரும் தூண்டுதலாக இருந்தது.—யோவான் 10:16.

1931-ல் பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு முன்பாக அவர்கள் பைபிள் மாணாக்கர்கள், சர்வதேச பைபிள் மாணாக்கர்கள், ஆயிர ஆண்டு தொடக்க ஆட்கள் மற்றும் உவாட்ச் டவர் ஆட்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள். ரஸ்ஸலைட்ஸ் மற்றும் ரதர்ஃபோர்டைட்ஸ் என்றும்கூட அவர்களைக் கிண்டலாகப் பெயரிட்டழைத்தார்கள். இந்தப் பெயர்களில் எதுவும் அவர்களைச் சரியாக அடையாளங் காட்டவில்லை. முதல் நூற்றாண்டில் தெய்வீக அருளினால் இயேசுவின் சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ற பெயர் நிச்சயமாகவே பொருத்தமாக இருந்தபோதிலும், பொய் உபதேசங்களைப் பின்பற்றிய அநேகத் தொகுதிகளும் இந்தப் பெயரை உபயோகித்து வந்தன. பெயரளவில் கிறிஸ்தவர்களான இலட்சக்கணக்கானோரிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்ட இந்நாளில் கிறிஸ்துவை மெய்யாகப் பின்பற்றுகிறவர்களைத் தெளிவாய் அடையாளங்காட்டும் ஒரு பெயர் வேண்டியதாயிருந்தது.

வேத வசனங்களை ஆராய்ந்தபோது, யெகோவா தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைத் தம்முடைய சாட்சிகள் என்றழைத்த விதமாகவே, காரிய ஒழுங்கின் முடிவில் அவருடைய நாமத்தையும் நோக்கத்தையும் தெரியப்படுத்துவதற்காகத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கும் அவருடைய ஜனங்கள் சரியாகவே யெகோவாவின் சாட்சிகள் என்றழைக்கப்பட வேண்டும் என்பது தெளிவாயிற்று. இந்தப் பெயர் யெகோவாவின் மெய்க் கிறிஸ்தவ வணக்கத்தாரை இன்று கிறிஸ்தவர்களென உரிமை பாராட்டும் மற்ற அனைவரிலுமிருந்து அவர்களைச் சரியாக வேறுபடுத்திக் காண்பித்திருக்கிறது—சங்கீதம் 83:17; ஏசாயா 43:10-12.

1942-ல் இரண்டாம் உலக யுத்தத்தின் சமயத்தில், ஜோசப் F. ரதர்ஃபோர்ட் மரித்தார். நேதன் H. நார் அவருக்குப் பின் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவரானார். யுத்தத்துக்குப் பின்பு, இந்த ஒழுங்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக, பிரசங்க வேலை மிக விரிவாய்ச் செய்யப்படுவதற்கு இடமளிக்கும், சம்பந்தப்பட்ட சமாதானமும் சுதந்தரமுமான ஒரு காலப்பகுதி இருக்கும் என்பதைத் தீர்க்கதரிசனங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுவது இப்பொழுது தெரிய வந்தது. 1943 பிப்ரவரியில், அந்நிய தேசங்களில் மிஷனரி ஊழியத்துக்காக முழுநேர ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கு உவாட்ச் டவர் பைபிள் ஸ்கூல் ஆப் கிலியட் ஸ்தாபிக்கப்பட்டது. அதே வருடத்தின் பிற்பகுதியில், யெகோவாவின் சாட்சிகளுடைய வாராந்தர கூட்ட அட்டவணையில் விசேஷித்த ஊழிய பயிற்றுவிப்புத் திட்டமொன்று சேர்க்கப்பட்டது.

1950-ல் சங்கம் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் பகுதிகளை வெளியிட ஆரம்பித்தது. இது மூல மொழி வாசகங்களிலிருந்து நவீன ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளாகும். திருத்தமாகவும் சுலபமாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டு சங்கத்தின் அச்சாலைகளில் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யப்படும் பைபிள் பிரசங்க வேலையில் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இன்று வரையாக சுமார் 700 இலட்சம் பிரதிகள் 12 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

1992-ன் முடிவுக்குள் ஏறக்குறைய நாற்பத்தைந்து இலட்சம் யெகோவாவின் சாட்சிகள் 229 தேசங்களிலும் சமுத்திரத்தின் தீவுகளிலும் பிரசங்கிப்பதில் பங்குகொண்டார்கள். கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவதற்கு 1992-ன் போது அவர்களுடைய சுமார் 69,000 சபைகளில் நடைபெற்றுள்ள எந்தக் கூட்டத்தையும்விட மிக அதிகமான எண்ணிக்கையில், மொத்தம் 1,14,31,171 ஆட்கள் ஆஜராயிருந்தார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் அவருடைய ஊழியத்தில் தொடர்ந்து சுறுசுறுப்பாயிருப்பதிலும், அவர்களுடைய உலகளாவிய ஒற்றுமையிலும் யெகோவாவின் நாமத்தை உயர்த்தி அவருடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதில் அவர்களுடைய மிகுந்த ஆர்வத்திலும் அவர்களுடைய சுத்தமான ஒழுக்க தராதரங்களிலும், முழு பைபிளையும் கடவுளுடைய தவறாத வார்த்தையென அவர்கள் ஏற்றுக்கொள்வதிலும், மூட நம்பிக்கை மற்றும் ஆவிக் கொள்கையிலிருந்து அவர்கள் விடுதலையாகியிருப்பதிலும், கடவுள் உண்மையில் அவர்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

கடவுளின் இந்த மெய் வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுவதிலிருந்து, நீங்கள் எவ்வாறு நன்மையடையலாம் என்பதைப் பின்வரும் பகுதிகள் காண்பிக்கின்றன.

● என்ன அடிப்படை பைபிள் போதகங்கள், பைபிள் மாணாக்கரை சர்ச் பிரிவுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டின?

● 1918 வரையில் அமைப்பு சம்பந்தமான என்ன முன்னேற்றங்களைப் பைபிள் மாணாக்கர்கள் அனுபவித்தார்கள்?

● அபிஷேகம் பண்ணப்பட்ட பைபிள் மாணாக்கர்களின் தொகுதி, மத்தேயு 24:45-47-ல் குறிப்பிட்டுள்ள “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யாக அமைந்தார்களென எப்படிச் சொல்லலாம்?

● கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி எதைப் புரிந்துகொண்டது பிரசங்க வேலையை விரிவாக்குவதற்குப் பெரும் ஊக்கத் தூண்டுதலாக இருந்தது?

● யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் என்ன நோக்கத்தைச் சேவிக்கிறது?

● கடவுள் உண்மையில் யெகோவாவின் சாட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சிகள் யாவை?

[பக்கம் 8-ன் படங்கள்]

1879-ல் C.T. ரஸ்ஸல்

ஜூலை 1879-ன் வெளியீடு

பிட்ஸ்பர்க், பென்சில் வேனியாவில் ஆரம்பகால பைபிள் மாணாக்கர் தொகுதி

[பக்கம் 9-ன் படங்கள்]

தலைமைக் காரியாலயம், 1889-1909, பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா

முக்கிய காரியாலயம், 1909-1918, புரூக்லின், நியு யார்க்

தலைமைக் காரியாலயக் குடியிருப்புப் பகுதி 1909-1926, புரூக்லின், நியு யார்க்

[பக்கம் 10-ன் படங்கள்]

யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமைக் காரியாலயம், புரூக்லின், நியு யார்க், அ.ஐ.மா.

மேல் இடது: அலுவலக தொகுதி

மேல் வலது: குடியிருப்புக் கட்டடங்கள்

கீழ் இடது: தொழிற்சாலைத் தொகுதி

கீழ் வலது: புத்தகங்கள் அனுப்பும் இடம்

[பக்கம் 11-ன் படங்கள்]

J.F. ரதர்ஃபோர்டின் வானொலி ஒலிபரப்பு

உவாட்ச்டவர் சங்கத்தின் முதல் சூழல்முறை அச்சுப்பொறி

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், இப்பொழுது 12 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது