“அடக்கமுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு”
பாட்டு 73
“அடக்கமுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு”
1. நம் தேவனோடு நடந்தால்
உண்மை அடக்கம் காண்பிப்போம்.
தேவன்முன் நாம் சிறியவர்
என்பதை மதித்துணர்வோம்!
2. ‘ஒன்றுக்கும் உதவாதோர்’ நாம்!
பாவநிலை ஒப்புக்கொள்வோம்.
அடக்கம் காண்பிப்போமானால்
மிகுந்தநன்மை அடைவோம்!
3.‘ சிறியவராய் இருங்கள்,’
என்று இயேசு கற்பித்தாரே.
நாம் பெருமைப் பாராட்டினால்
அப்போதனை மீறுவோமே.
4. யெகோவாவை நேசிப்பதால்
பயத்தோடு சேவிப்போமே.
அடக்கமாய் நடப்பது
பரம ஞானமாகுமே.