அதிகம் செய்யுங்கள்—நசரேயரைப் போல்
பாட்டு 128
அதிகம் செய்யுங்கள்—நசரேயரைப் போல்
1. நசரேயர்—அவர்கள் போல
இருக்க முடியுமா?
பிரித்தெடுக்கப்பட்டோராக
நாம் செயல்படுவோமா?
ஆராய்ந்து பார்ப்போம்!
கவனிப்போம், காலமோகடக்கிறதே.
ஊழியத்தில் அதிகம்
செய்து நாம் முழங்குவோமே.
2. நசரேயர்—எளிய வாழ்க்கை,
துறந்தனர் தம் ஆசை.
தேவனிடம் நெருங்கினார்கள்,
கொள்வோமா அந்த இலக்கை?
பொருத்தனையின் பாகமாக
ஏற்றனர் கட்டுப்பாடுகள்.
சகோதரர் பலர் அந்த
வாழ்க்கை வாழ்கிறார்கள்.
3. நசரேயர்—வித்தியாசமே.
அடையாளம் பெற்றனர்.
கீழ்ப்படிந்து, அதிகம் செய்து
தேவனை நெருங்கினர்.
தேவஉடன் ஊழியராக நாம்
கீழ்ப்படிந்து விசுவாசிப்போம்.
முயற்சி ஆசீர்வதிப்பார்,
உள்ளத்தில் பூரிப்போம்.
4. நசரேயர்—நல்முன்மாதிரி;
பரிசுத்தமுள்ளோரே.
தேவ ஆசீர்வாதம் பெற்றனர்.
கறையின்றிருப்போமே.
யெகோவா போஷித்துக்காப்பாரே,
அவரை நம்பியிருப்போம்.
முன்நின்று அதிகம் செய்வோம்
பேரானந்தம் காண்போம்.