“அதிக முக்கியமான காரியங்களை நிச்சயித்துக்கொள்ளுங்கள்”
பாட்டு 210
“அதிக முக்கியமான காரியங்களை நிச்சயித்துக்கொள்ளுங்கள்”
1. யெகோவாவை நேசித்து, சேவிக்கிறோம் மகிழ்ந்து.
தேவ அன்பே எல்லாவற்றிலும்
முக்கியமானது.
நீதி சத்தியகாரியங்களை நிச்சயித்து
அன்பில் மேலும் வளருவோம்.
தேவசேவையில்அதிகம்
செய்து கறையற்றிருப்போம்.
2. தேவன் முக்கியமாய்
மதிப்பவை இவைகளே.
நன்றியாய்க், கீழ்ப்படிந்து,
உத்தமத்தைக் காப்பதே.
நாம் எல்லாரோடும் சமாதானமாயிருந்து
ராஜ்ய நம்பிக்கை அளிப்போம்.
இடறலாயிராமல்,
நன்மை செய்து உதவிடுவோம்.
3. தேவபோதனையை
அலங்கரிப்பது முக்கியம்.
நம்மைத் தாழ்த்தி
ஆலோசனை ஏற்பதும் அவசியம்.
நநீதிகனி நிறைந்து, நற்செய்தியில் ஆழ்ந்து,
ஊழியத்தின்மூலம் துதிப்போம்.
இவ்விதம் அதிக முக்கியமானவற்றை
நிச்சயிப்போம்.