அன்பின் உன்னத வழி
பாட்டு 35
அன்பின் உன்னத வழி
1. அன்பின் தேவன் சொல்கிறாரே,
அன்பின் வழி செல்லவே.
தேவன், அயலான்மேல் அன்பு,
செயல்தூண்டிடும் பண்பு.
அறிவு, பாஷைபேசுதல், விசுவாசம்,
முன்னுரைத்தல்.
அன்பு இல்லாவிட்டால் வீணே.
நாமும் ஒன்றும் இல்லையே.
2. அதிகம் பிரசங்கிக்கலாம்,
துன்பங்கள் சகிக்கலாம்.
ஆனால் நல்நோக்கம் இல்லையேல்,
லாபம் ஏதுமில்லையே.
அன்பு சாந்தமுடையது,
இழி செயல் செய்யாது,
பெருமை, பகையற்றது,
சாதுரியமுள்ளது.
3. இளகிமன்னிக்கும் அன்பு,
தீங்கில் மகிழாபண்பு.
அன்பு சகலமும் தாங்கும்.
நல் வழியில் மகிழும்.
விசுவாசம், நம்பிக்கை,
அன்பு காண்பிக்கவேண்டிய பண்பு.
ஆனாலும் உன்னதவழி
தெய்வீக அன்பின் வழி.