Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்

பாட்டு 12

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்

(2 கொரிந்தியர் 9:7)

1. பிதாவை சேவிக்கையில் கொள்ளவேண்டும் மனதில்,

மகிழ்ச்சி, தயாளத்தில், அன்பில், தயையில்

ஈகையில் ஈடற்றவராக மைந்தனைத்தந்தார்.

எல்லா வகையாரை மீட்கவிரும்புகிறார்.

2. கொடுப்பதில் அவர்மாதிரியைப் பின்பற்றுவோம்.

உற்சாகமாய்க் கொடுப்போம், நல்லெண்ணம் காண்போம்.

நம்நேரம் பொருள் எல்லாம் யெகோவாவுக்குரியதே

அவருக்கே கொடுத்தால் நாம் பிழைபடோமே.

3. ஈதலில் உற்சாகம் யெகோவாவை மகிழ்விக்கும்.

போதனை அலங்கரிக்கும், அன்பைத் தூண்டும்.

இதயம்பொங்க கொடுத்தல் மதிப்புமிக்கது.

பேரானந்தம், மகிழ்ச்சி அளிக்கும் அப்போது.

4. தேவனுக்கு, கிறிஸ்துக்கு நன்றியாயிருக்கிறோம்.

பெலத்தால் மெய்வணக்கம் முன்னேற்றுவிப்போம்.

வாழ்நாளெல்லாம் தேவனைப் பிரியப்படுத்தவும்,

உற்சாகமாய்த் தரவும் இதயம் தூண்டட்டும்.