Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”

“என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”

பாட்டு 1

“என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”

(சங்கீதம் 103)

1. ஆத்துமாவே ‘யா’ வைத்துதி,

உதடுகள் அந்நாமம்துதி.

குற்றம்யாவும் மன்னிக்கிறார்;

துக்கம், வெட்கம் அகற்றுகிறார்.

கோபம் கொள்ள தாமதிக்கிறார்,

கனிவாய் இரங்குகிறார்.

அவருக்குப் பயந்தவர்

அவர் அன்பு தயை காண்பர்.

2. தந்தையாய் இரங்குகிறார்,

நாம்மண்ணென்று அவரறிவார்.

வெளியின் பூக்களைப் போல்நாம்

விரைவிலே வாடிமறைவோம்.

யெகோவாவின் அன்பு, தயவு,

கற்பனைகள் கைக்கொள்வோர்க்கு.

அவற்றை நினைவில் வைத்தால்,

நிலை நிற்போம் தம் நீதியால்.

3. யெகோவா சிங்காசனத்தை

பரலோகத்தில் ஸ்தாபித்தாரே.

சகலமும் ஆளுகிறார்,

வல்லமை விளங்கச்செய்கிறார்.

தூதர்களே ‘யா’ வைத்துதிப்பீர்,

அவர் நாமம் உயர்த்துவீர்.

தேவ மாசேனையே துதி,

ஆத்துமாவே, ‘யா’ வைத்துதி.