Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அன்புக்குப் பிரதிபலித்தல்

கடவுளுடைய அன்புக்குப் பிரதிபலித்தல்

பாட்டு 50

கடவுளுடைய அன்புக்குப் பிரதிபலித்தல்

(1 யோவான் 4:11)

1. மாதேவா உன்னதர் நீர்; உள்ளத்தால்நேசிக்கிறோம்.

யெகோவா உம்மைத் துதிக்கிறோம்.

உம் பேரைப் போற்றுகிறோம், உம்வார்த்தை

படிக்கிறோம்; உம் வழிகள் கற்றுக் கொள்கிறோம்.

நீர் கனிவன்புள்ளவர், நீதியாய் நடப்பவர்;

ஞானம் வல்லமை மிகுந்தவர்.

பைபிள் சொல்கிறபடி உள்ளத்தூய்மை

காப்போமே .ஆசீர்வாதங்கள் பொழிவீரே.

2. எங்களை முதலிலே நேசித்தவரும் நீரே;

உம்மை நேசிக்க ஏவினதே. உம்பேரை,

அன்பை வெளிப்படுத்த இயேசு வந்தார்.

நித்திய ஜீவனை அளிக்கிறார்.

அநேகருக்காகத் தம் உயிரைக் கொடுத்தாரே.

அன்பை மேன்மையாய்க் காண்பித்தாரே.

நாம் அழியாதபடி அவர் மேய்ச்சல் போற்றுவோம்.

நல்லாலோசனை ஏற்றுக்கொள்வோம்.

3. ராஜ்ய சேவை செய்வதை நிறுத்த இயலாதே;

சத்தியம் சொல்லிக் கொண்டிருப்போமே.

மனமுவந்த சேவைமூலம் நிறைவேற்றுவோம்,

பலன் தரும் அன்பைக் காண்பிப்போம்.

ஒருவரையொருவர் நேசித்து சேவை செய்வோம்;

கிறிஸ்துவின் சீஷராய்க் காண்பிப்போம்.

ராஜ்ய மதிப்பீடுகள் நாம் பிரயோகித்திடுவோம்;

“நல்லூழியன்,” என்ற சொல்லைக் கேட்போம்.