Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சாந்த குணமுடையவர்கள் மகிழ்ச்சியுடையவர்கள்”

“சாந்த குணமுடையவர்கள் மகிழ்ச்சியுடையவர்கள்”

பாட்டு 36

“சாந்த குணமுடையவர்கள் மகிழ்ச்சியுடையவர்கள்”

(மத்தேயு 5:5)

1. சாந்த குணமுடையவர்கள்

மகிழ்ச்சியுடையவர்கள்.

துன்பப்பட்டாலும் சினம்கொள்ளார்.

கடவுளையே சார்ந்துள்ளார்.

பொல்லார் தம்மை உயர்த்தினர்.

சாந்தமுள்ளோர் பொறுத்தனர்.

பொல்லார் ஜீவன் பெறமாட்டாரே,

புல்போல காயந்தழிவரே.

2. “நான் வாலிபனாக இருந்தேன்,

இன்றோ முதியவனானேன்.

நீதிமான் கைவிடப்பட்டது

அறியேன்,”என்றார்தாவீது.

கடவுளை நம்பி நட.

நீ உண்மையுடனும் நட.

யெகோவாவில் களிகூர்ந்தாலே

ஊழியம் ஆசீர்வதிப்பாரே.

3. விரைவில் பொல்லார்அழிவரே,

நிலைக்க இடம் காணாரே.

சாந்தமுள்ளோர் பூமியில் வாழ்வர்,

சமாதானத்தில் மகிழ்வர்.

தேவ வார்த்தை உண்மை என்போம்.

தேவாவி ஏவியதென்போம்.

சிந்தனை, சொல், செயல்களிலே

சாந்தகுணம் காண்பிப்போமே.