சிருஷ்டியின் விடுவிக்கப்படும் நம்பிக்கை
பாட்டு 142
சிருஷ்டியின் விடுவிக்கப்படும் நம்பிக்கை
1. சிருஷ்டிக்கு உபத்திரவம் உண்டு,
விதைத்ததறுக்கிறது.
மனிதன் தேவனை மறுக்கிறான்,
வேதனைக் குட்படுகிறான்.
2. மீட்பைப் பெற்றிட மனிதவர்க்கம்
உன்னதர் நோக்கவேண்டுமே.
பெருமூச்சு விட்டழுவோருக்கு
அவர் உதவுகிறாரே.
3. மானிட குடும்பமும் முன்நிலை,
விடுதலை அடைந்திடும்.
கிறிஸ்து நியமிக்கப்பட்டிருக்கிறார்,
தேவதயவைப் பெற்றிடும்.
4. புது “தேசத்தோடு” கூட்டுறவுதருமே
ஆசீர்வாதங்கள்.
தாங்கள் பேசும் ராஜ்யமகிழ்ச்சிக்குக்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்.