Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமணம்—கடவுளுடைய ஏற்பாடு

திருமணம்—கடவுளுடைய ஏற்பாடு

பாட்டு 117

திருமணம்—கடவுளுடைய ஏற்பாடு

(மத்தேயு 19:4-6)

1. திருமண ஏற்பாடு

தேவ ஏற்பாடாகும்,

ஐக்கிய கட்டாய் அமைந்து

ஆசீர்வாதம் ஈயும்.

இந்தத்தூய நிலையில்

ஆண், பெண், இணையவே;

துணை புரிகிறது,

சேர்ந்து சேவிக்கவே.

2. தேவனின் நூலில் உண்டு,

ஞான ஆலோசனை.

கணவர் காண்பிப்பது

தேவன்போல் தலைமை.

‘மனைவியை நேசிப்பாய்

சொந்தசரீரமாய்.’

கணவரை மதிப்பாள்,

இரத்தினமாகிறாள்.

3. இருபுரிகாட்டிலும்

முப்புரி அறாது,

தேவன் உட்படும் மணம்

பிரச்னைகள் மிகாது.

கொடுப்பதில் மகிழ்ச்சி,

கற்போமே இவ்வுண்மை,

யெகோவாவின் சேவையில்

செய்வோமே நம்பங்கை.