நம்மைச் “சிறியோராய்” நடத்துதல்
பாட்டு 122
நம்மைச் “சிறியோராய்” நடத்துதல்
1. தேவபோதனை கேட்பவர்
அவர்தயை பெற்றவர்.
தேவன் சார்ந்து உழைப்பவர்
ஆசீர்வாதம் பெறுவர்.
எல்லாரும் அபூரணத்தைச்
சுதந்தரித்துள்ளோமே.
தேவனுக்குக் கீழ்ப்படிய
நாம் தாழ்மையாய்க் கற்போமே.
2. ‘சிறியவராய் இருங்கள்,’
என்று இயேசு சொன்னாரே.
அது சமாதானம்
ஐக்கியம் ஏற்படுத்துகிறதே.
தேவனுக்குக் கீழ்ப்படிந்து
சேவிப்பதில் மகிழ்ந்தார்.
நமக்கு மிகச்சிறந்த
முன்மாதிரியை வைத்தார்.
3. நாம் ஒருவரையொருவர்
கனப்படுத்துவோமே.
கிறிஸ்து இயேசு மரித்தது
நம் சகோதரருக்கே.
தேவன் ஒவ்வொருவருக்கும்
தாலந்தளிக்கிறாரே.
சிறியவராய் நடந்து
சமநிலை காப்போமே.
4. நம்மை மேன்மைப் பாராட்டாமல்
அன்பு காண்பித்திடவே.
தலைமை ஸ்தானநியமம்
நன்குதவுகிறதே.
நாம் இடறாதிருக்கவும்
தேவ ஆவி துணையே.
தேவனோடு நல்லுறவால்,
தாழ்மையாய் இருப்போமே.