நம் தேவ சந்தோஷம்
பாட்டு 186
நம் தேவ சந்தோஷம்
1. சந்தோஷம் ஆவியின்கனி
தேவையானகனி.
விசுவாசம்கொள்ளவேண்டும்,
சந்தோஷம் ஏற்படும்.
இதுமாறாத குணமே,
தேவைஎப்போதுமே.
எனவே பைபிள் சொல்லிற்று
“மகிழ்!”“மகிழ்!” என்று.
2. மகிழ காரணமுண்டு:
தேவனை அறிந்து.
சாட்சிகளாயிருக்கிறோம்,
ஒன்றாயிருக்கிறோம்.
ஒரு நாளில் அனைவரும்,
மரித்திருப்போரும்,
துதிப்பர் என்றறிவோமே.
சந்தோஷிக்கின்றோமே.
3. சந்தோஷத்தைக் கூட்டவேண்டும்.
திருப்தியும் வேண்டும்.
விழிப்பாய் உள்ளத்தைக் காப்போம்,
தீமையை வெறுப்போம்.
தேவனைப்போற்ற நாடுவோம்,
வாய்ப்புகள் தேடுவோம்.
மேலானவற்றை சிந்திப்போம்,
தவறை வெறுப்போம்.
4. தாழ்ந்தோராயிருப்பினும் நாம்,
ஒளியில்செல்வோம் நாம்.
உத்தம சேவையைச் செய்வோம்,
சந்தோஷம்பெறுவோம்.
தேவவார்த்தை பரப்புவோம்,
ஊழியராய்க் காட்டுவோம்.
பொங்கிவழியும் சந்தோஷம்.
பகிர்வோம் சந்தோஷம்.