நம் பரதீஸ்: தற்போதையதும் எதிர்காலத்தினதும்
பாட்டு 220
நம் பரதீஸ்: தற்போதையதும் எதிர்காலத்தினதும்
1. ஆவிக்குரியபரதீஸே,
துதிக்கிறோம் தேவனே.
படிப்பு, கூட்டங்கள்மூலமே
ஞானமடைகின்றோமே.
ஆசீர்வாதத்துக்கு
நன்றிசொல்வோமே.
உம்சேவையில்
மகிழ்ச்சிகாண்கிறோமே!
உண்மை அன்பு எல்லாருக்குமே
பலத்தகட்டாகுமே.
உம் சேவையில் இணைக்கிறது.
நிலைக்கச் செய்கிறது!
2. நீதியான நிர்வாகம் தந்தீர்
கிறிஸ்துவுக்குக் கொடுத்தீர்.
ராஜாவாக வீற்றிருக்கிறார்,
அனைத்தும்ஆளுகிறார்.
உம்முடையவர்கள்
சேர்ப்பதறிவோம்.
இது உம்நோக்கமே,
உம்மைத்துதிப்போம்.
நற்செய்திக்கிசைவாய் நடப்போம்.
நல்நடத்தையைக் காப்போம்.
ஆடுகளைத் தேடிப் போதிப்போம்.
இடறல் செய்யமாட்டோம்!
3. தேவமகாநாளுக்குப் பின்பு,
யுத்தம் முடிந்த பின்பு,
சாத்தான் அபிஸில் போனபின்பு,
பேய்களும் போனபின்பு,
பூர்வீக ஊழியர்
உயிர்த்தெழுவார்கள்.
பரதீஸான பூமியில்
பிரபுக்கள்.
ஆசாரியத்துவத்தின்மூலம்
உண்டு பரிபூரணம்.
இந்தப் பூமியிலே என்றென்றும்
பேரானந்தம் நீடிக்கும்.