நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
பாட்டு 96
நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
1. யெகோவாவே உம் படைப்பு
உம்மைப் பாடுகிறது.
அவை உம் சித்தம்படியே
தம்கதைசொல்கிறது.
உம்கரம் பொழிகிறது
ஆசிகள் நல்லீவுகள்.
கிறிஸ்துவில் நிறைவேறின
தீர்க்கதரிசனங்கள்.
கிறிஸ்துபிறக்க தூதர்கள்
துதி பாடினார்களே.
அவர் மூலம்மீட்கும் பொருள்
அளித்த நல்லவரே!
2. உம் மகன் நீர் தந்த வேலை
நன்கு நிறைவேற்றினார்.
உலகத்தை வெற்றிக்கொண்டு
மக்கள் நிலைமாற்றினார்.
ராஜனாய் உம்கட்டளைகள்
நிறைவேற்றுகிறாரே.
உம்பெயர் நோக்கத்தை
அவர் எங்கும் சொல்லுகிறாரே.
உம்மக்களாக மகிழ்ந்து
போற்றிப் பாடுகிறோமே:
“ஒளியின் தேவன் யெகோவா
கவலை நீக்குவாரே.”
3. எனவே உம் துதிகளை
நாங்கள் பாடவேண்டாமா?
உமக்கு ஒப்புக்கொடுத்து
சேவைசெய்ய வேண்டாமா?
உம்பெயரை உயர்த்துவோம்,
உம்வேலையை முடிப்போம்.
அன்பைத் தணித்திடமாட்டோம்,
வைராக்கியத்தில் குறையோம்.
உள்ளத்தால் மனதால் உம்மை
முழுமையாய் சேவிப்போம்.
உமக்குக் கனமுண்டாக
என்றும் நடந்துகொள்வோம்.